Sunday, May 10, 2026
Logo
Menu
Follow Us
சமையல்

சுவையான மட்டன் குழம்பு சுலபமா செஞ்சுடலாம்!!!

A
Admin User
Journalist
December 12, 2021 4 min read 82 views
சுவையான மட்டன் குழம்பு சுலபமா செஞ்சுடலாம்!!!

ஞாயிற்றுகிழமை ஆனால் காலை நேரமாக எழுந்திரிக்க சோம்பேறி தனமாக தான் இருக்கும். ஆனால், எழுந்து சமைக்க வேண்டுமே என்ற கவலையுடனேயே பெரும்பாலான இல்லத்தரசிகள் இருக்கின்றனர். அவர்களுக்காக, ஒரு சுலபமான மட்டன் குழம்பு சுவையாக எப்படி செய்வதென்று இங்கே கொடுத்துள்ளேன். பேச்சுலர்ஸ் கூட இதை ட்ரை செய்து பார்க்கலாம். வாருங்கள் மட்டன் குழம்பு ரெசிபியை பார்க்கலாம்…

தேவையான பொருட்கள்:

மட்டன் – ½ கிலோ

சின்ன வெங்காயம் – ஒரு கப் (பொடியாக நறுக்கியது)

தக்காளி – 2 (பொடியாக நறுக்கியது)

குழம்பு மிளகாய் தூள் – 5 டீஸ்பூன் அல்லது காரத்திற்கேற்ப

உப்பு - சுவைக்கேற்ப

தேங்காய் – அரை மூடி

சோம்பு – 1 டீஸ்பூன்

கசகசா – 1 டீஸ்பூன்

தாளிக்க:

எண்ணெய் – 3 டேபிள் ஸ்பூன்

பட்டை – 1 துண்டு

கிராம்பு – 3

ஏலக்காய் – 4

பிரியாணி இலை – 1

நட்சத்திர சோம்பு – 1

செய்முறை:

*முதலில், குக்கரை அடுப்பில் வைத்து அதில் ஊற்றி சூடானதும், தாளிக்க தேவையான அனைத்து பொருட்களையும் சேர்த்து வதக்கவும்.

*பின்னர், நறுக்கிய வைத்துள்ள வெங்காயத்தை சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ளவும்.

*வெங்காயம் வதங்கியதும், தக்காளி சேர்த்து வதக்கவும்.

*தக்காளி நன்கு மசிந்ததும், அதில் கழுவி வைத்துள்ள மட்டனை சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்க்கவும்.

*மட்டனில் உப்பு சேர்த்தவுடன் நன்கு நீர் விட்டு வரும். அந்த நீர் வற்றும் வரை வதக்கவும்.

*நீர் வற்றியதும், அத்துடன் குழம்பு மிளகாய் தூள் சேர்த்து வதக்கவும்.

*பின்னர், தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.

*நீர் கொதித்தவுடன் குக்கரை மூடி வைத்து மட்டன் வேகும் வரை விசில் விட்டு இறக்கவும். (பொதுவாக மட்டன் வேக நேரம் எடுக்கும் என்பதால் நான் 7 முதல் 8 விசில் விடுவேன்)

*குக்கல் விசில் வந்தவுடன், கேஸ் போகும் வரை அப்படியே ஒரு 10 நிமிடத்திற்கு வைக்கவும்.

*அப்போது, ஒரு மிக்ஸி ஜாரில் தேங்காய், சோம்பு, கசகசா சேர்த்து சிறிது நீர் ஊற்றி நன்கு மைய அரைத்து கொள்ளவும்.

*அடுத்ததாக குக்கரை திறந்து, அதில் அரைத்த தேங்காய் விழுதை சேர்த்து அடுப்பில் வைத்து மேலும் 2 விசில் விட்டு இறக்கினால் சுவையான மட்டன் குழம்பு தயார்.

*இந்த மட்டன் குழம்பு இட்லி, தோசை, சாப்பாடு, சப்பாத்தை, பூரி என அனைத்திற்கும் அட்டகாசமாக இருக்கும்.

*ட்ரை பண்ணிட்டு உங்கள் கருத்துக்களை எங்களோடு பகிர்ந்து கொள்ளுங்கள்.

Share this article
A
Admin User

Lifestyle Journalist

A passionate writer covering health, wellness, and cultural topics for the Tamil community.

தினசரி ஒரு நற்சிந்தனை

...

உடல் எடை கணக்கீடு

ஆரோக்கியமான வாழ்விற்கு உங்கள் பிஎம்ஐ (BMI) அளவை அறிந்து கொள்வது அவசியம்.

கணக்கிடு (BMI Test)
திருக்குறள் (Kural of the Day)

...

...

இன்றைய விலை
தங்கம் (22k)
1 கிராம்
₹14,150
தங்கம் (24k)
1 கிராம்
₹14,858
வெள்ளி
1 கிராம்
₹280
அடுத்த பண்டிகை (Next Festival)

தேடல்...

00
Days to go
உங்கள் கருத்து (Poll)

நலமான வாழ்விற்கு எது மிக முக்கியம்?

Get Daily Updates

Subscribe for the latest news in your inbox.

அடுத்து வாசிக்க
தமிழ்நாட்டின் சுவைமிகுந்த சமையல் கலை: சிறந்த உணவுகளின் ஒரு முழுமையான பார்வை
வாசிக்க