சமையல்

ஹோட்டல் ஸ்டைல் பெப்பர் சிக்கன் இனி வீட்டிலேயே செய்யலாம்!!!

A
Admin User
1 min read
ஹோட்டல் ஸ்டைல் பெப்பர் சிக்கன் இனி வீட்டிலேயே செய்யலாம்!!!
Advertisement
Editor's Choice
Affiliate link

Casio Youth Series Digital Black Dial Unisex Watch - F-91W-1Q(D002)

Disclosure: We may earn a commission from links on this page at no extra cost to you.

வீட்டில் எப்போதும் ஒரே மாதிரியான சிக்கன் ரெசிபியை செய்து போர் அடிக்குதா? அப்படியெனில், ஹோட்டல் ஸ்டைல் பெப்பர் சிக்கனை ட்ரை செய்து பாருங்கள். சிக்கன் வேகும் நேரம் மட்டும் தான். மிக மிக எளிதான, ஆனால் சுவையில் அட்டகாசமாக இருக்கும். ஒரு முறை இதனை ட்ரை செய்து பாருங்கள். நிச்சயமாக வாரந்தோறும் இதனை செய்து தர சொல்லி வீட்டில் உள்ளவர்கள் கேட்பார்கள். இனி பெப்பர் சிக்கன் சாப்பிட வேண்டுமென்றால் ஹோட்டலுக்கு போக வேண்டிய அவசியமும் இருக்காது. பேச்சுலர்ஸ் கூட மிக எளிதாக இதனை செய்திட முடியும். வாருங்கள், இப்போது பெப்பர் சிக்கன் எப்படி செய்தென்று தெரிந்து கொள்வோம்…

தேவையான பொருட்கள்:
சிக்கன் – ½ கிலோ
சின்ன வெங்காயம் – 1 கப் (பொடியாக நறுக்கியது)
சோம்பு – ¼ டீஸ்பூன்
இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் – ¼ டீஸ்பூன்
கரம் மசாலா – ½ டீஸ்பூன்
உப்பு – சுவைக்கேற்ப
கறிவேப்பிலை – சிறிதளவு
கொத்தமல்லி – சிறிதளவு
நல்லெண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்

பொடி அரைக்க:
சோம்பு – 1 டீஸ்பூன்
சீரகம் – 1 டீஸ்பூன்
மிளகு – 1 டீஸ்பூன்

செய்முறை:

*முதலில் பொடி அரைக்க தேவையான பொருட்களை, அடுப்பில் ஒரு வாணலியை வைத்து வறுத்து ஆற வைத்து பொடியாக அரைத்து எடுத்து வைத்துக் கொள்ளவும்.
*பின்பு, மற்றொரு வாணலியை அடுப்பில் வைத்து சூடேறியதும், நல்லெண்ணெய் ஊற்றவும்.
*எண்ணெய் சூடானதும், சோம்பு மற்றும் வெங்காயம், சிறிது உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்.
*வெங்காயம் வதங்கியதும், இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை நன்கு வதக்கவும்.
*அடுத்ததாக, மஞ்சள் தூள், கரம் மசாலா சேர்த்து சிறிது வதக்கி விட்டு, கழுவி வைத்துள்ள சிக்கனை சேர்க்கவும்.
*சிக்கனுக்கு தேவையான அளவு உப்பு சேர்த்து, நீர் விட்டு நன்கு வதங்கும் வரை கிளறி விடவும்.
*நீர் வற்றியதும், சிறிதளவு நீர் சேர்த்து மூடி வைத்து 20 நிமிடங்கள் மிதமான தீயில் சிக்கனை நன்கு வேக விடவும்.
*சிக்கன் நன்கு வெந்தவுடன், அரைத்து வைத்துள்ள பொடியை சேர்த்து நன்கு கிளறவும்.
*2 நிமிடங்கள் நன்கு கிளறிய பின்பு, சிறிது கறிவேப்பிலை மற்றும் பொடியான நறுக்கிய கொத்தமல்லி தூவி இறக்கினால், சுவையான பெப்பர் சிக்கன் ரெடி… ஹோட்டல் டேஸ்டை மிஞ்சிவிடும் முயற்சி செய்து பாருங்கள்.

Advertisement

Read Next