Tuesday, March 24, 2026
Logo
Menu
Follow Us
ஆன்மீகம்

சூரிய பெயர்ச்சி 2022: மேஷத்தில் சஞ்சரிக்கும் சூரியனால் பலனடைய போகும் ராசிக்காரர்கள்

A
Admin User
Journalist
April 12, 2022 9 min read 49 views
சூரிய பெயர்ச்சி 2022: மேஷத்தில் சஞ்சரிக்கும் சூரியனால் பலனடைய போகும் ராசிக்காரர்கள்

சூரிய பகவான் வரும் 14ம் தேதி அன்று, தனது உச்ச ராசியான மேஷ ராசிக்கு காலை 8:39 மணி அளவில் பெயர்ச்சி ஆகிறார். பலமான எதிரி கிரகமான ராகு இருப்பதும், கும்ப ராசியில் சனி பார்வை சூரியன் மேல் விழுவதும் சில ராசிக்காரர்களுக்கு பல நெருக்கடிகளைக் கொடுக்கக்கூடும். எனவே, 2022 ஏப்ரல் 14ம் தேதி நிகழும் சூரிய பகவானின் ராசி மாற்றத்தால் 12 ராசிக்காரர்களுக்கும் நிகழவிருக்கும் மாற்றங்கள் பற்றியும் இந்த கட்டுரையில் கொடுக்கப்பட்டுள்ளது. உங்கள் ராசிக்கான பலனைத் தெரிந்து கொள்ள தொடர்ந்து கட்டுரையைப் படியுங்கள்.

மேஷம்
உங்களது ராசிக்கு வரும் சூரிய பகவானால் மேஷ ராசிக்காரர்களுக்கு எடுத்த முயற்சிகள் வீணாகலாம். உங்கள் குணத்தில் கோபம் அதிகரிக்கும். வெளியூர் பயணம் மேற்கொள்ளும் போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும். வீண் செலவுகளால் உங்கள் மன அழுத்தம் அதிகரிக்கலாம். எனவே, எதிர்மறை எண்ணங்களைத் தவிர்க்கவும்.

ரிஷபம்
சூரிய பகவானின் இந்த ராசி மாற்றத்தால் உங்கள் செயல்களில் உண்டாகும் தடைகளால் மன அழுத்தம் அதிகமாகும். தூக்கமின்மை, பண இழப்பு போன்ற பிரச்சனைகள் உருவாக வாய்ப்புள்ளது. எனவே, எந்தவொரு முடிவையும் மிக கவனமாக, யோசித்து எடுப்பது நல்லது. வெளியூர் பயணங்களின் போது மிக கவனமாக இருக்கவும். உத்தியோகஸ்தர்கள், அலுவலகத்தில் தங்கள் உயர் அதிகாரிகளிடம் ஜாக்கிரதையாக இருப்பது நல்லது.

மிதுனம்
இந்த பெயர்ச்சி காலக்கட்டத்தில் மிதுன ராசிக்காரர்களுக்கு நீண்ட காலமாக எதிர்பார்த்த முக்கிய பதவி உயர்வைப் பெறுவீர்கள். தடைப்பட்ட இடங்களில் இருந்து பணம் வெற்றிகரமாக வசூலிப்பீர்கள். கண்ணுக்கு தெரிந்து, தெரியாத எதிரிகளை தோற்கடித்து காட்டீவீர்கள். தடைபட்ட காரியங்களில் நிச்சயம் வெற்றி கிட்டும். நில புதிய செயல்களில் உங்களுக்கு ஆர்வம் அதிகரிக்கும்.

கடகம்
சூரியனின் ராசி மாற்றத்தால் உங்களின் முக்கியமான வேலைகளில் உங்களுக்கு நிச்சயம் வெற்றி கிடைக்கும். உறவினர்கள் மற்றும் மரியாதைக்குரியவர்கள் உங்களுடன் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பார்கள். அலுவலகம் மற்றும் வியாபாரத்தில் சாதகமான சூழல் அமையும். எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். எந்த இடையூறும் இல்லாமல் வேலைகள் நிறைவடையும்.

சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு இந்த சூரிய பெயர்ச்சிக்கு பின்னர் கடின உழைப்பு அதிகமாகும். வரவு செலவுத் தடைகளால் வீட்டில் தேவையற்ற மனஅழுத்தம் உருவாகும். முக்கிய வேலைகளை முடிப்பதில் திடீர் தடைகள் ஏற்படும். ஆரோக்கியம் பற்றி பேசினால், திடீர் நோய்தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. எனவே, ஆரோக்கிய விஷயத்தில் சிறிதும் அலட்சியமாக இருக்க வேண்டாம்.

கன்னி
மேஷத்திற்கு சூரியன் பெயர்ச்சி ஆகும் இந்த காலக்கட்டத்தில் கன்னி ராசிக்காரர்களுக்கு சிறந்த வாய்ப்பு தேடி வரப்போகிறது. கிடைக்கும் வாய்ப்பைப் புத்திசாலித்தனமாக பயன்படுத்தி கொள்ள அறிவுறுத்தப்படுகிறது. உடல்நலத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். குடும்பத்தில் இருந்துவந்த அமைதியற்ற நிலை மாறி, மகிழ்ச்சியான சூழல் நிலவும். செலவுகளில் கட்டுபாடு செலுத்தினால் நிதி நெருக்கடியில் இருந்து தப்பிக்கலாம்.

துலாம்
சூரிய பெயர்ச்சி காலத்தில் வியாபாரிகளான துலாம் ராசிக்காரர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். இல்லையெனில், உங்களுக்கு மரியாதை குறைவு ஏற்படும். திருமணமானவர்களுக்கு தங்களது வாழ்க்கைத்துணையின் அலட்சியத்தால் மன உளைச்சல் ஏற்படும். இதனால் நீங்கள் மிகுந்த சோர்வை உணர்வீர்கள்.

விருச்சிகம்
நீண்ட நாட்களாக நோய் பாதிப்பால் அவதிப்பட்டு வந்த விருச்சிக ராசிக்காரர்களுக்கு இந்த பெயர்ச்சிக்கு பின்னர் நோய் பாதிப்பில் இருந்து விடுபடலாம். திடீரென்று பண வரவு அதிகரிக்கும். சில நல்ல செய்திகளால் மகிழ்ச்சி அடைவீர்கள். உங்கள் தொழில் ரீதியான எதிரிகள் இந்த காலத்தில் தோற்கடிக்கப்படுவார்கள். இதனால் உங்கள் மீதான மரியாதை சமுதாயத்தில் அதிகரிக்கும்.

தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு இந்த சூரிய பெயர்ச்சிக்கு பின்னர் திடீர் நிதி நெருக்கடிகள் ஏற்படலாம். அன்புக்குரியவர்களிடமிருந்து பிரிவு சாத்தியமாகும். வியாபாரிகளுக்கு தங்களது புதிய வேலையில் தோல்வியை சந்திக்க நேரிடும். எந்தவொரு தருணத்திலும் மனஅமைதியை மட்டும் இழக்க வேண்டாம். பொறுமையாக இருந்து பிரச்சனையை எதிர்கொண்டால் நன்மை பயக்கும்.

மகரம்
சூரிய பகவான் மேஷத்தில் சஞ்சரிப்பதால் மகர ராசிக்காரர்களுக்கு தேவையற்ற பயம் மனதில் ஏற்படும். ஆரோக்கியத்தை பொறுத்தவரை, திடீர் உடல்நலக் குறைவால் சிரமப்படுவீர்கள். வீட்டில் மகிழ்ச்சி குறையும். குடும்பத்தில் உள்ள முதியவர்களின் உடல் நலத்தில் அக்கறை காட்டுங்கள். வீடு சம்பந்தமான பிரச்சனைகள் திடீரென வெளிவரக்கூடும். சண்டையை விடுத்து, பேச்சுவார்த்தை மூலம் பிரச்சனையை தீர்க்க முயலுங்கள்.

கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு மேஷயத்திற்கு சூரிய செல்லும் இந்த காலத்தில் பெரியதொரு பதவி தேடி வரக்கூடும். நீண்ட நாட்களாக வசூலாகாத பணம் இப்போது வந்து சேரும். உங்களின் எதிரிகள் இந்த நேரத்தில் தோற்கடிக்கப்படுவார்கள். நீங்கள் செய்த பழைய காரியங்களால் இப்போது வெற்றி பெறுவீர்கள். உங்களுக்கு நல்ல செய்தி தேடி வர போகிறது.

மீனம்
மேஷத்தில் சூரியன் சஞ்சரிக்கப்போகும் சூரியனால் மீன ராசிக்காரர்களுக்கு வீண் செயல்களில் பண விரயம் ஏற்படும். தேவையற்ற வற்புறுத்தலால் நஷ்டம் அடையவும், ஏமாறவும் வாய்ப்புகள் அதிகம். எனவே, பிறரது பேச்சை கேட்டு எந்தவொரு முக்கிய முடிவையும் எடுக்க வேண்டாம். இதனால் உங்களுக்கு அவமானம் மட்டுமே மிஞ்சும். கவனமாக செயல்பட வேண்டிய காலமிது.

Share this article
A
Admin User

Lifestyle Journalist

A passionate writer covering health, wellness, and cultural topics for the Tamil community.

தினசரி ஒரு நற்சிந்தனை

...

உடல் எடை கணக்கீடு

ஆரோக்கியமான வாழ்விற்கு உங்கள் பிஎம்ஐ (BMI) அளவை அறிந்து கொள்வது அவசியம்.

கணக்கிடு (BMI Test)
திருக்குறள் (Kural of the Day)

...

...

இன்றைய விலை
தங்கம் (22k)
1 கிராம்
₹13,000
தங்கம் (24k)
1 கிராம்
₹13,650
வெள்ளி
1 கிராம்
₹250
அடுத்த பண்டிகை (Next Festival)

தேடல்...

00
Days to go
உங்கள் கருத்து (Poll)

மன அழுத்தத்தைக் குறைக்க நீங்கள் என்ன செய்கிறீர்கள்?

Get Daily Updates

Subscribe for the latest news in your inbox.

அடுத்து வாசிக்க
பிரார்த்தனையின் சக்தி: தினசரி வழிபாடு வாழ்க்கையை மாற்றியமைப்பது எப்படி?
வாசிக்க