சமையல்

காரசாரமான சில்லி மட்டன் ரோஸ்ட்!!!

A
Admin User
1 min read
காரசாரமான சில்லி மட்டன் ரோஸ்ட்!!!
Advertisement
Editor's Choice
Affiliate link

Dyazo 6 Angles Adjustable Aluminum Ergonomic Foldable Portable Tabletop Laptop/Desktop Riser Stand Holder Compatible for MacBook, HP, Dell, Lenovo & All Other Notebook (Silver)

Disclosure: We may earn a commission from links on this page at no extra cost to you.

மட்டனில் குழம்பு, சுக்கா, பிரியாணி என செய்தது போதும். சற்று வித்தியாசமாக மட்டனில் சில்லி ரோஸ்ட் செய்து பார்க்கலாமே. மிகவும் சுவையான இந்த சில்லி மட்டன் ரோஸ்ட் செய்து உங்கள் குடும்ப உறுப்பினர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்துங்கள். பேச்சலர்ஸ் கூட இதனை சுலபமாக செய்து விடலாம். இது இடியாப்பம், ஆப்பம் மற்றும் ரொட்டியுடன் சாப்பிட அருமையாக இருக்கும்.

தேவையான பொருட்கள்:

எலும்பில்லா மட்டன் – ½ கிலோ
உப்பு – சுவைப்பேற்ப
இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1 டேபிள் ஸ்பூன்
எலுமிச்சை சாறு அல்லது வினிகர் – 1 டேபிள் ஸ்பூன்

மசாலாவிற்கு:

தேங்காய் எண்ணெய் – 4 டேபிள் ஸ்பூன்
பட்டை – 1 சிறு துண்டு
சோம்பு – 2 டீஸ்பூன்
கறிவேப்பிலை – சிறிதளவு
பெரிய வெங்காயம் – 1 பொடியாக நறுக்கியது
பூண்டு – 6 பல்
தக்காளி – 2 பெரியது (பொடியாக நறுக்கியது)
காஷ்மீரி மிளகாய் தூள் – 1 டேபிள் ஸ்பூன்
மல்லி தூள் – 1 டேபிள் ஸ்பூன்
சீரகத்தூள் – 2 டீஸ்பூன்
கரம் மசாலா – 2 டீஸ்பூன்
உப்பு – சுவைக்கேற்ப
மிளகு தூள் – 2 டீஸ்பூன்
கொத்தமல்லி – கை அளவு (பொடியாக நறுக்கியது)

அரைக்க:
பூண்டு – 5 பல்
காய்ந்த மிளகாய் – 5

செய்முறை:

*முதலில் மட்டன் நன்கு கழுவி ஒரு குக்கரில் போட்டு, அத்துடன் இஞ்சி பூண்டு பேஸ்ட், உப்பு மற்றும் எலுமிச்சை சாற்றை சேர்த்து சிறிது நீர் சேர்த்து 6-7 விசில் விட்டு இறக்கிக் கொள்ளவும்.
*இப்போது அரைக்க தேவையான பூண்டு மற்றும் காய்ந்த மிளகாயை மிக்ஸியில் போட்டு மைய அரைத்து கொள்ளவும்.
*அடுத்ததாக ஒரு வாணலியை அடுப்பில் வைத்து சூடானதும், எண்ணெய் ஊற்றி பட்டை மற்றும் சோம்பு, கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்
*அத்துடன் நறுக்கி வைத்துள்ள வெங்காயம் மற்றும் பூண்டு சேர்த்து பொன்னிறமாகும் வரை நன்கு வதக்கவும்.
*வெங்காயம் வதங்கியதும், தக்காளி மற்றும் அரைத்துள்ள பூண்டு, மிளகாய் பேஸ்ட்டை சேர்த்து கிளறவும். தக்காளி நன்கு வதங்கும் வரை மூடி வைத்து வேக விடவும்.
*இப்போது மேலே குறிப்பிட்ட மலாசா பொடி அனைத்தையும் சேர்த்து, தேவையான அளவு உப்பு போட்டு கிளறவும்.
*மசாலா நன்கு வதங்கி எண்ணெய் தனியாக பிரிந்து வரை வதக்கவும்.
*இப்போது குக்கரில் வேக வைத்த மட்டனை சேர்த்து நன்கு கிளறி விடவும்.
*தண்ணீர் முழுவதும் வற்றும் வரை அடுப்பில் வைத்து கிளறவும்.
*கடைசியாக மிளகு தூள் மற்றும் கொத்தமல்லி சேர்த்து கிளறி இறக்கினால் அட்டகாசமான சில்லி மட்டன் ரோஸ்ட் பரிமாற தயார்.

Advertisement

Read Next