Tuesday, March 24, 2026
Logo
Menu
Follow Us
ஆரோக்கியம்

உங்க குழந்தை வளர்ச்சி குறைவா இருக்கா? இத மட்டும் செய்ய வையுங்க மடமடனு வளர்ந்துடுவாங்க…

A
Admin User
Journalist
December 16, 2021 8 min read 67 views
உங்க குழந்தை வளர்ச்சி குறைவா இருக்கா? இத மட்டும் செய்ய வையுங்க மடமடனு வளர்ந்துடுவாங்க…

பெற்றோரான ஒவ்வொருவருக்கும் தங்களது குழந்தை உயரமாக மற்றும் வலிமையாக இருக்க வேண்டும் என்று நினைப்பது இயல்பு தான். அது தான் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு ஒரு அறிகுறியும் ஆகும். நிறைய பெற்றோர்கள், அவர்களின் குழந்தை பருவத்தில் அவர்கள் இருந்ததை காட்டிலும், அவர்களது குழந்தை சற்று உயரமாக இருப்பார்கள். சிலர், உயரம் குறைவாக இருப்பார்கள். நீங்கள் ஒரு வேளை உங்களது குழந்தையை எப்படியாவது உயரமாக்க வேண்டும் என்ற வழிகளை தேடிக்கொண்டு இருப்பவரா? உங்களுக்கான சில டிப்ஸ் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.

மரபணு முக்கிய இடம் வகிக்கிறது

ஒரு குழந்தையின் உயரத்தை பொறுத்தவரை, மரபணு ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது. இருந்தாலும், அது மட்டுமே குழந்தையின் வளர்ச்சியை தடுப்பது கிடையாது. வேறு சில வெளிப்புற காரணிகளும் வளர்ச்சிக்கு காரணமாக இருக்கலாம். அதாவது, உணவு பழக்கம், உடற்பயிற்சி போன்றவையும் குழந்தைகளின் வளர்ச்சியில் முக்கிய இடத்தை பிடிக்கின்றன. இங்கு குழந்தைகளின் வளர்ச்சிக்கு உதவிடும் 6 எளிய வழி முறைகள் கொடுக்கப்பட்டுள்ளன.

உணவுப்பழக்கம்

குழந்தைகள் அவர்களின் வயதிற்கேற்ற உயரத்தை பெறுவதற்கான சிறந்த வழி, அவர்களுக்கு தேவையான அனைத்து ஊட்டச்சத்துகளும் கிடைப்பதை உறுதி செய்வது. சீரான உணவுப்பழக்கமானது, புரதச்சத்து, கார்போஹைட்ரேட், கொழுப்புச் சத்து மற்றும வைட்டமின்கள் ஆகியவற்றை சரியான விகிதத்தில் கொண்டிருக்க வேண்டும். குறிப்பாக உங்கள் குழந்தையை ஜங்க் ஃபுட்ஸ் போன்றவற்றிடம் இருந்து விலக்கியே வைத்திருங்கள். எப்போதாவது சாப்பிடுவது என்றால் பிரச்சனை ஒன்றும் இல்லை. ஆனால், தினந்தோறும் சாப்பிடுவது என்பது தான் பிரச்சனையில் வந்து முடியும். முக்கியமாக, குழந்தையின் வளர்ச்சியில் ஜிங்க் முக்கிய பங்களிப்பை நல்கிடுகிறது. எனவே, குழந்தைகளின் உணவில் ஜிங்க் நிறைந்த, வேர்க்கடலை போன்றவற்றை சேர்த்திடுங்கள். சீரான உணவுப்பழக்கம் குழந்தைகளுக்கு உயரத்தை மட்டுமே கொடுத்துவிடுவது கிடையாது, வலிமையையும் சேர்த்தே கொடுக்கக்கூடியது என்பதை மறவாதீர்கள்.

ஸ்ட்ரெட்சிங் உடற்பயிற்சி

சில எளிமையான ஸ்ட்ரெட்சிங் உடற்பயிற்சிகளே போதும், உங்கள் குழந்தையின் வளர்ச்சியின் பெரிய முன்னேற்றத்தை காட்டும். எனவே, சிறு வயதிலிருந்தே குழந்தைகளுக்கு எளிமையான உடற்பயிற்சிகளை அவர்களுக்கு பிடித்த விதத்தில் சொல்லி கொடுங்கள். ஸ்ட்ரெட்சிங் முதுகெலும்பை நீட்டவும், அவர்களது தோரணையை மேம்படுத்திடவும் உதவும்.

*உங்கள் குழந்தையை தரையில் அமரச் செய்து கால்களை சற்று விரித்துபடி வைத்துக் கொள்ள சொல்லுங்கள் . பின்னர், அவர்களது கைகளால், பாதத்தை தொட முயற்சிக்க சொல்லுங்கள்.

*சுவரை ஒட்டியபடி நிமிர்ந்து நிற்க செய்து, தங்களது கால்களால் மேலும் நிமிர்ந்து சுவற்றின் மேற்பகுதியை தொட முயற்சிக்க சொல்லவும்.

தொங்குவது

உயரமாவதற்காக தொங்குவது என்பது பல ஆண்டுகளாக பரிந்துரைக்கப்படக் கூடிய ஒரு விஷயமாகும். கம்பிகளில் தொங்கும் போது, முதுகெலும்புகள் நீடிக்க உதவிடும். அதுவே உயரமாவதற்கு ஒரு முக்கிய காரணமாகும். தொங்குவது கூடவே, உங்கள் குழந்தையை புல் அப்ஸ் மற்றும் சின் அப்ஸ் போன்றவற்றை செய்ய சொல்லுங்கள். அது குழந்தைகளின் முதுகு மற்றும் கைகளின் தசைகளை வலுவாக்கிட உதவும்.

யோகா செய்ய பழக்குங்கள்

யோகா செய்வதில் பல்வேறு உடல் அசைவுகள் இருக்கும். அவை குழந்தைகள் உயரமாவதற்கு உதவிடும். எனவே, உங்கள் குழந்தையை சூர்யநமஸ்காரம், சக்ராசனம் போன்ற ஆசனங்கள் செய்ய சொல்லுங்கள். குழந்தைகளோடு சேர்ந்து நீங்கள் யோகா செய்தால் குழந்தைகள் உங்களை பார்த்து ஆர்வத்துடன் செய்ய ஆரம்பித்து விடுவர்.

ஸ்கிப்பிங்

குழந்தைகளை பொறுத்தவரை ஸ்கிப்பிங் என்பது ஒரு விளையாட்டு தான். இது உடலில் இதயம் உட்பட அனைத்து பாகங்களையும் வேலை செய்ய வைக்கிறது. இதனால் உயரம் அதிகரிக்கும். குதித்து குதித்து ஸ்கிப்பிங் ஆடுவதால் உடல் அதே திசையில் நீட்டிக்கப்படும். எனவே, உயரம் அதிகரிக்கச் செய்யும். அதுமட்டுமல்லாமல், இது குழந்தைகளை சுறுசுறுப்பாகவும், ஆரோக்கியமாகவும் மாற்றிடும்.

நீச்சல்

நீச்சல் மற்றொரு ஆரோக்கியமான உடற்பயிற்சியாகும். அது குழந்தையின் வளர்ச்சிக்கு உதவுவதோடு மட்டுமல்லாது, ஒட்டுமொத்த உடலுக்கே ஆற்றலை தருவதால், ஆரோக்கியமாக இருப்பர். நீச்சல் நிறைய உடற்பயிற்சிகள் அடங்கியது என்பதால் தான் முதுகு வலிமைக்கும், வளர்ச்சிக்கும் உதவிடும்.

நல்ல தூக்கம்

பொதுவாகவே அனைத்து மனிதருக்கும் நிம்மதியான தூக்கம் தான் ஆரோக்கியமான உடலை தந்திடும். பெரியவர்களுக்கு மட்டுமே தூக்கம் முக்கியமானது அல்ல. குழந்தைகளுக்கும் தூக்கம் மிகவும் அவசியமான ஒன்று. ஆரோக்கியமான வளர்ச்சிக்கு குழந்தைகள் குறைந்தப்பட்சம் 8 மணி நேரமாவது தூங்க வேண்டியது அவசியம். தூக்கம் தான் வளர்ச்சிக்கான ஹார்மோனான ஹெச்.ஜி.ஹெச். என்பதை சுரக்கும். எனவே, குழந்தைகள் தூங்குவதை எப்போதும் கெடுத்துவிடாதீர்கள்.

Share this article
A
Admin User

Lifestyle Journalist

A passionate writer covering health, wellness, and cultural topics for the Tamil community.

தினசரி ஒரு நற்சிந்தனை

...

உடல் எடை கணக்கீடு

ஆரோக்கியமான வாழ்விற்கு உங்கள் பிஎம்ஐ (BMI) அளவை அறிந்து கொள்வது அவசியம்.

கணக்கிடு (BMI Test)
திருக்குறள் (Kural of the Day)

...

...

இன்றைய விலை
தங்கம் (22k)
1 கிராம்
₹13,000
தங்கம் (24k)
1 கிராம்
₹13,650
வெள்ளி
1 கிராம்
₹250
அடுத்த பண்டிகை (Next Festival)

தேடல்...

00
Days to go
உங்கள் கருத்து (Poll)

மன அழுத்தத்தைக் குறைக்க நீங்கள் என்ன செய்கிறீர்கள்?

Get Daily Updates

Subscribe for the latest news in your inbox.

அடுத்து வாசிக்க
ஆரோக்கியத்திற்கு சிறந்தது சைவமா அல்லது அசைவமா? இதோ முழுமையான அலசல்!
வாசிக்க