Tuesday, March 24, 2026
Logo
Menu
Follow Us
ஆன்மீகம்

சனிப்பெயர்ச்சி 2022: இந்த 6 ராசிக்காரர்களின் வாழ்க்கையே முற்றிலுமாக மாற போகிறது...

A
Admin User
Journalist
April 11, 2022 8 min read 60 views
சனிப்பெயர்ச்சி 2022: இந்த 6 ராசிக்காரர்களின் வாழ்க்கையே முற்றிலுமாக மாற போகிறது...

ஏப்ரல் 29, 2022 அன்று, சனி பகவான் தனது சொந்த ராசியான மகர ராசியிலிருந்து வெளியேறி அடுத்த ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். இரண்டு வருடங்கள் மூன்று மாதங்களுக்குப் பிறகு சனி பகவான் இந்த வருடன் தனது சொந்த வீடான கும்பத்திற்கு பெயர்ச்சியாகிறது. கும்ப ராசியில் சனியின் சஞ்சாரம் மங்களகரமானதாகவே கருதப்படுகிறது. சனி தன் சொந்த ராசியில் சுகமான நிலையில் இருப்பார். சனி ஒரு ஆசிரியராக அறியப்படுவதோடு, கர்மா வினைகளுக்கான தெய்வமாகவும் போற்றப்படுகிறார். 2022 ஆம் ஆண்டில் நிகழும் இந்த சனி பெயர்ச்சி அனைத்து 12 ராசிகளிலும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தப் போகிறது. அதிலும், குறிப்பிட்ட ராசிக்காரர்களுக்கு இந்த ராசி பெயர்ச்சி சாதகமான தாக்கத்தையே ஏற்படுத்த போகிறார். அந்த பட்டியலில் உங்கள் ராசியும் இருக்கிறதா என்பதை படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

மேஷம்
சனி உங்கள் வீட்டில் லாப மற்றும் லட்சிய ஸ்தானத்தில் இருப்பதால் உங்களுக்கு மிகவும் நன்மை பயக்கும். சனியின் இந்த நிலை உங்களுக்கு அதிர்ஷ்டத்தையும் செழிப்பையும் வழங்கிடும். இந்த நேரத்தில் உங்கள் கடின உழைப்பு அனைத்தும் பலனளிக்கும். உங்களுக்கு ஊதிய உயர்வும், ஊக்கமும் அதிகரிக்கக்கூடும். படித்து முடித்து வேலை தேடுபவர்களுக்கு பொருத்தமான வேலை அல்லது சொந்தமாகத் தொழில் தொடங்குவதற்கு இந்த நேரம் சரியானது. சில வேலைகளில் நீங்கள் ஆர்வத்துடனும் விருப்பத்துடனும் இருப்பீர்கள். அரசு ஊழியர்களுக்கு அனுகூலமான காலகட்டம் இது. உயர் அதிகாரிகளிடம் உங்கள் மரியாதை கூடும்.

ரிஷபம்
சனி பகவான் உங்கள் வீட்டில் கர்மவினைகளுக்கான ஸ்தானத்தில் சஞ்சரிப்பார். சனியின் சஞ்சாரம் உங்கள் தொழில் வாழ்க்கையில் சில நல்ல வாய்ப்புகளைத் தரும். உங்கள் கனவு வேலை அல்லது வியாபாரத்தை நீங்கள் பெறலாம். உங்கள் தொழில்முறை நட்பு வட்டாரம் மேம்படும். மேலும் உங்கள் கீழ் பணிபுரிபவர்கள் மற்றும் பிற குழு உறுப்பினர்களுடன் சிறந்த ஒருங்கிணைப்பைப் பெறுவீர்கள். உங்கள் தடைபட்ட வேலைகள் மீண்டும் தொடங்க இது ஒரு நல்ல நேரமாக இருக்கும். கடந்த காலத்தில் நீங்கள் சில விஷயங்களில் சிரமப்பட்டு கொண்டிருந்தால், அவற்றின் தீர்வுகள் இந்த காலக்கட்டத்தில் கிடைப்பதற்கான வாய்ப்பு அதிகம்.

மிதுனம்
உங்களுக்கு அதிர்ஷ்டத்தின் அதிபதியான சனி பகவான், கடந்த இரண்டு வருடங்களாக முன்னேற்றத்தை தாமதப்படும் இடத்தில் அமர்ந்திருந்தார். இப்போது சனி உங்கள் அதிர்ஷ்டத்திற்கான வீட்டிற்குச் சென்று, உங்கள் வாழ்க்கையில் குறிப்பிடத்தக்க மாற்றத்தைக் கொண்டு வருவார். இது உங்களின் நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட வேலையில் சிறிது முன்னேற்றத்தைக் கொண்டுவரும். இந்த காலகட்டத்தில் அமைதியாகவும் பொறுமையாகவும் இருக்க அறிவுறுத்தப்படுகிறது. வேலை சம்பந்தமாக வெளியூர் பயணம் மேற்கொள்ளலாம். நீங்கள் விடாமுயற்சியுடன் இருப்பதோடு, உங்கள் தொழில் மற்றும் வருமானத்தை மேம்படுத்த உங்களால் முடிந்த அனைத்து முயற்சிகளையும் செய்வீர்கள்.

துலாம்
கடந்த இரண்டு வருடங்களாக சனிபகவான் உங்களின் 4வது வீடான மகிழ்ச்சி ஸ்தானத்தில் அமர்ந்திருப்பதால் சனியின் தாக்கத்தை எதிர்கொண்டீர்கள். ஆனால் இப்போது சனி உங்கள் முற்பிறப்பிற்கான பலனுக்கான ஐந்தாவது வீட்டில் சஞ்சரிக்கிறார். இது உங்களுக்கு திடீர் அதிர்ஷ்டத்தையும் வெற்றியையும் தரும். மாணவர்களுக்குச் சனி அனுகூலமான பலன்களைத் தருவார். படிப்பிற்காக உங்கள் வீட்டை விட்டு வெகுதூரம் செல்ல திட்டமிடுபவர்கள், அதற்கான வாய்ப்புகளையும், நீங்கள் விரும்பிய பல்கலைக்கழகத்தையும் பெறலாம். உங்களுக்கு சொந்தமாக தொழில் தொடங்க வேண்டுமென்ற ஆசையும், ஆர்வமும் இருந்தால், உங்களது அனைத்து முயற்சிகளுக்கும் நிச்சயம் வெற்றி கிடைக்கும். இது உங்களுக்கு அனைத்து வகையிலும் சாதகமான பலன்களை தரப்போகும் காலமாகும்.

தனுசு
உங்கள் ராசியில் சனி திசையின் கடைசி கட்டம் நடந்து கொண்டிருக்கிறது. இது சனியின் சஞ்சாரத்துடன் முடியும். உங்கள் சனி திசை முடிவடைந்தவுடன், நீங்கள் பல வேலைகளில் சாதகமான பலன்களைப் பெறத் தொடங்குவீர்கள். உங்களுக்கு கடவுள் மீதான நம்பிக்கையும் அதிகரித்து, அது தொடர்பான கல்வியை கூட மேற்கொண்டு படிக்கலாம். குழந்தை பேற்றிற்கு திட்டமிடுபவர்களுக்கு இது உகந்த காலம். உங்கள் பொழுதுபோக்குகள் மற்றும் ஆர்வங்களை உங்கள் தொழிலாக மாற்ற முயன்ற அளவு முயற்சிக்கவும். சனி பகவானால் சில திடீர் லாபங்கள் உங்களுக்கு கிடைக்கும். ஆராய்ச்சி தொடர்பான பணி செய்பவர்களுக்கும் இந்த நேரம் சிறப்பாக இருக்கும்.

கும்பம்
சனிப்பெயர்ச்சியுடன் சனி திசையின் இரண்டாம் கட்டத்திற்கு கும்ப ராசிக்காரர்கள் செல்கிறார்கள். சனி உங்கள் முதல் வீட்டில் சஞ்சரிக்கும் இடத்திலிருந்து, உங்களது முழு ஜாதகத்திலும் அதன் தாக்கம் இருக்கும். திருமணமானவர்களுக்கு வாழ்க்கைத் துணையுடன் புரிந்துணர்வு மேம்படும். சில புதிய வாய்ப்புகளைப் பெறுவீர்கள். தொழில் துறையின் முன்னணியில் ஒரு புதிய திட்டம் அல்லது சூழலில் வேலை செய்ய உங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும். கடந்த காலத்தின் கடின உழைப்பிற்கான பலனைப் பெறுவீர்கள்.

Share this article
A
Admin User

Lifestyle Journalist

A passionate writer covering health, wellness, and cultural topics for the Tamil community.

தினசரி ஒரு நற்சிந்தனை

...

உடல் எடை கணக்கீடு

ஆரோக்கியமான வாழ்விற்கு உங்கள் பிஎம்ஐ (BMI) அளவை அறிந்து கொள்வது அவசியம்.

கணக்கிடு (BMI Test)
திருக்குறள் (Kural of the Day)

...

...

இன்றைய விலை
தங்கம் (22k)
1 கிராம்
₹13,000
தங்கம் (24k)
1 கிராம்
₹13,650
வெள்ளி
1 கிராம்
₹250
அடுத்த பண்டிகை (Next Festival)

தேடல்...

00
Days to go
உங்கள் கருத்து (Poll)

மன அழுத்தத்தைக் குறைக்க நீங்கள் என்ன செய்கிறீர்கள்?

Get Daily Updates

Subscribe for the latest news in your inbox.

அடுத்து வாசிக்க
பிரார்த்தனையின் சக்தி: தினசரி வழிபாடு வாழ்க்கையை மாற்றியமைப்பது எப்படி?
வாசிக்க