Tuesday, March 24, 2026
Logo
Menu
Follow Us
சமையல்

சேப்பங்கிழங்கு வறுவல் செய்யுறது இவ்ளோ ஈஸியா?

A
Admin User
Journalist
January 03, 2022 3 min read 77 views
சேப்பங்கிழங்கு வறுவல் செய்யுறது இவ்ளோ ஈஸியா?

நிறைய பேருக்கு சேப்பங்கிழங்கை எப்படி சமைப்பது என்று அவ்வளவாக தெரியாது. எனவே, சேப்பங்கிழங்கு வறுவல் சுலபமாக செய்வது எப்படி என்பது இங்கே கொடுக்கப்பட்டுள்ளது. இது சாம்பார் சாதம், வெரைட்டி சாதம் போன்றவற்றிற்கு அட்டகாசமான சைடு டிஷ்ஷாக இருக்கும். வாருங்கள் இப்போது சேப்பங்கிழங்கு வறுவல் செய்ய தேவையான பொருட்கள் மற்றும் அதன் செய்முறையைப் பார்ப்போம்…

தேவையான பொருட்கள்

சேப்பங்கிழங்கு - 10
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
உப்பு - சுவைக்கேற்ப
இஞ்சி பூண்டு விழுது - 1 டீஸ்பூன்
அரிசி மாவு - 2 டீஸ்பூன்
எண்ணெய் - 4 டீஸ்பூன்

செய்முறை

*சேப்பங்கிழங்கு பூமிக்கு அடியில் விளையும் என்பதால் அதில் மண் அதிகமாக இருக்கும். எனவே, மண் முற்றிலும் போகுமாறு நன்கு கழுவி கொள்ளவும்.
*பின்னர், அதை ஒரு பாத்திரத்தில் போட்டு அது முழுகும் வரை நீர் ஊற்றி அடுப்பில் வைத்து நன்கு வேகும் வரை மிதமான தீயில் வைத்து 15 முதல் 20 நிமிடங்கள் கொதிக்க விடவும். கத்தியை வைத்து கிழங்கை குத்தும் போது அது சுலபமாக உள்ளே சென்றால் வெந்து விட்டது என்று அர்த்தம். கிழங்கை அதிகமாக வேக வைத்திட வேண்டாம். பின்னர், குழைந்து விடும்.
*கிழங்கு நன்கு வெந்தவுடன் எடுத்து நீரை வடித்து விட்டு, நன்கு ஆறவிட்டு வட்ட வட்டமாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
*நறுக்கிய கிழங்குடன் தேவையான பொருட்களை சேர்த்து பிரட்டி கொள்ள வேண்டும்.
*இப்போது ஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் கிழங்கை சேர்க்கவும்.
*பின்னர் அடுப்பை குறைவான தீயில் வைத்து 15 முதல் 20 நிமிடங்கள் வேக விட்டு இறக்கினால் சுவையான சேப்பங்கிழங்கு வறுவல் தயார்.

Imagecourtesy: yummytummyaarthi

Share this article
A
Admin User

Lifestyle Journalist

A passionate writer covering health, wellness, and cultural topics for the Tamil community.

தினசரி ஒரு நற்சிந்தனை

...

உடல் எடை கணக்கீடு

ஆரோக்கியமான வாழ்விற்கு உங்கள் பிஎம்ஐ (BMI) அளவை அறிந்து கொள்வது அவசியம்.

கணக்கிடு (BMI Test)
திருக்குறள் (Kural of the Day)

...

...

இன்றைய விலை
தங்கம் (22k)
1 கிராம்
₹13,000
தங்கம் (24k)
1 கிராம்
₹13,650
வெள்ளி
1 கிராம்
₹250
அடுத்த பண்டிகை (Next Festival)

தேடல்...

00
Days to go
உங்கள் கருத்து (Poll)

மன அழுத்தத்தைக் குறைக்க நீங்கள் என்ன செய்கிறீர்கள்?

Get Daily Updates

Subscribe for the latest news in your inbox.

அடுத்து வாசிக்க
தமிழ்நாட்டின் சுவைமிகுந்த சமையல் கலை: சிறந்த உணவுகளின் ஒரு முழுமையான பார்வை
வாசிக்க