சமையல்

ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சிக்கன் 65!!!

A
Admin User
1 min read
ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சிக்கன் 65!!!
Advertisement
Editor's Choice
Affiliate link

Dyazo 6 Angles Adjustable Aluminum Ergonomic Foldable Portable Tabletop Laptop/Desktop Riser Stand Holder Compatible for MacBook, HP, Dell, Lenovo & All Other Notebook (Silver)

Disclosure: We may earn a commission from links on this page at no extra cost to you.

யாருக்கு தான் சிக்கன் 65 என்றால் பிடிக்காது? இருப்பினும், பிறர் வீட்டில் அல்லது ஹோட்டலில் நாம் சாப்பிடும் சிக்கன் 65 சுவை என்பது மாறுபட்டு இருக்கும். பிறரிடம் நாம் கேட்டு செய்து ஒரு ரெசிபியை சாப்பிடும் போது நிச்சயம் நன்றாக இருக்கும். ஆனால், எப்படி செய்தாலும் ஹோட்டல்களில் சாப்பிடுவது போன்று மென்மையாக, சுவையான எப்போதும் இருப்பது கிடையாது. அதற்காக தான் இப்போது ஹோட்டல்கள் செய்யும் சிக்கன் 65ன் ரெசிபியை உங்களுக்கு சொல்ல போகிறேன். இனி நீங்களே ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சிக்கன் 65 வீட்டிலேயே செய்து கொடுத்து வீட்டில் உள்ளவர்களை அசத்தலாம். வாருங்கள், இப்போது அதை எப்படி செய்வதென்று இந்த கட்டுரையில் தெரிந்து கொள்வோம்…

தேவையான பொருட்கள்

  • எலும்பில்லாத சிக்கன் - 1/2 கிலோ
  • இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்
  • மல்லித் தூள் - 2 டீஸ்பூன்
  • மிளகாய் தூள் - 2 டீஸ்பூன்
  • சீரகத் தூள் - 1/4 டீஸ்பூன்
  • மஞ்சள் தூள் - 1 சிட்டிகை
  • சோள மாவு - 2 டீஸ்பூன்
  • அரிசி மாவு - 3/4 டீஸ்பூன்
  • கேசரி பவுடர் - 1/4 டீஸ்பூன்
  • எலுமிச்சை சாறு - 1 டேபிள் ஸ்பூன்
  • முட்டை - 1
  • உப்பு - சுவைக்கேற்ப
  • எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு
  • கறிவேப்பிலை - சிறிது

செய்முறை

  • முதலில் சிக்கனை நன்கு சுத்தமாக கழுவி எடுத்து கொள்ளவும்.
  • பின்னர் சிக்கனை ஒரு பௌலில் எடுத்து, அத்துடன் கொடுத்துள்ள பொருட்களில் எண்ணெய் மற்றும் கறிவேப்பிலை தவிர மற்ற பொருட்கள் அனைத்தையும் சேர்த்து நன்கு பிரட்டி கொள்ளவும்.
  • பின்பு அதை குறைந்தது 2 மணிநேரம் ஊற வைக்கவிம். இதனால் சிக்கன் 65 நன்கு மென்மையாக இருக்கும்.
  • பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடேற்ற வேண்டும்.
  • எண்ணெய் சூடானதும், அதில் கறிவேப்பிலை சேர்த்து பொரித்து தனியாக ஒரு தட்டில் வைத்துக் கொள்ளவும்.
  • அடுத்து சிக்கன் துண்டுகளை எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்து, அதற்கு மேல் பொரித்த கறிவேப்பிலையைத் தூவினால், ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சிக்கன் 65 தயார்.

Image Courtesy: sharmispassions

Advertisement

Read Next