ஆன்மீகம்

ராகு-கேது பெயர்ச்சி 2022: இந்த 5 ராசிக்காரங்களுக்கு கஷ்ட காலமாக இருக்க போகிறது...

A
Admin User
1 min read
ராகு-கேது பெயர்ச்சி 2022: இந்த 5 ராசிக்காரங்களுக்கு கஷ்ட காலமாக இருக்க போகிறது...
Advertisement
Editor's Choice
Affiliate link

FLYNGO Touch Control LED Night Light Table Lamp for Bedroom, Living Room, and Study, with Adjustable Brightness, USB Rechargeable (A1)Plastic ,White

Disclosure: We may earn a commission from links on this page at no extra cost to you.

திருக்கணித பஞ்சாங்கத்தின்படி, ராகுவும் கேதுவும் வரும் ஏப்ரல் 12ஆம் தேதி பெயர்ச்சி ஆகின்றனர். அதன்படி, ராகு பகவான், செவ்வாயின் வீடான மேஷ ராசியிலும், கேது பகவான், சுக்கிரனின் வீடான துலாம் ராசியிலும் சஞ்சரிக்கிறார்கள். இவர்கள், 18 மாதங்களுக்கு இந்த ராசியில் இருக்க போகிறார்கள். இந்த ராகு-கேது பெயர்ச்சிக்கு பின்னர் 5 ராசிக்காரர்களுக்கு மிக மிக கவனமாக இருக்க வேண்யடிது அவசியம். அந்த ராசிகளைப் பற்றி இப்போது தெரிந்து கொள்வோம். உங்கள் ராசி இதில் இருக்கிறதா என்பதை, மேற்கொண்ட படித்து தெரிந்து கொள்ளுங்கள்…

மேஷம்

மேஷ ராசிக்காரர்கள், ஏப்ரல் 12ம் தேதி நடைபெறும் ராகு கேது பெயர்ச்சிக்கு பின்னர் தங்கள் உறவுகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறார்கள். இந்த காலக்கட்டத்தில் நீங்கள் மிகுந்த சிரமங்களைச் சந்திக்க நேரிடும். திடீர் நிதி பிரச்சனைகளும் ஏற்படலாம். எனவே, எந்தவொரு முடிவையும் மிக கவனமா எடுப்பதோடு, முன்னெச்சரிக்கயுடன் செயல்படவும் அறிவுறுத்தப்படுகிறது.

துலாம்

துலாம் ராசிக்காரர்களுக்கு ஏழாம் வீட்டில் ராகுவும், முதல் வீட்டில் கேதுவும் சஞ்சரிக்கிறார்கள். இந்த நேரத்தில் நீங்கள் பண பரிவர்த்தனைகளில் கவனமாக இருக்க வேண்டும். பூர்வீக ஜாதகத்தில், ராகுவும் கேதுவும் சுப ஸ்தானத்தில் இருந்தால், அவர்களின் வாழ்வில் வளர்ச்சியும் மாற்றமும் காணப்படும். இந்த 18 மாத காலங்களில், நிதி சார்ந்த விஷயங்களில் மிகுந்த கவனத்துடன் இருப்பது நல்லது.

தனுசு

தனுசு ராசிக்காரர்களுக்கு இந்த ராகு-கேது பெயர்ச்சி சாதகமாக இருக்காது. இந்த காலக்கட்டத்தில் உங்களுக்கு எதிர்காலம் குறித்த பயமும், பதற்றமும் அதிகரிக்கலாம். உங்களின் ஒரு தவறான முடிவு எதிர்பாராத நேரத்தில் திடீர் பண இழப்பை ஏற்படுத்தலாம். இந்த காலகட்டத்தில் பணம் சம்பந்தமாக எந்த ஒரு பெரிய முடிவும் எடுக்க வேண்டாம் என்று தனுசு ராசிக்காரர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது.

மகரம்

மகர ராசிக்கு ராகு-கேது முறையே நான்காவது மற்றும் பத்தாம் வீட்டில் சஞ்சரிக்கிறார்கள். கேது சஞ்சாரம் உங்களுக்கு சாதகமாக இருந்தாலும், ராகுவின் சஞ்சாரம் உங்களுக்கு அவ்வளவு சாதகமாக இல்லை. இந்த நேரத்தில் நீங்கள் குடும்ப பிரச்சனைகளை சந்திக்க நேரிடலாம். உடல்நலம் தொடர்பான பிரச்சனைகளையும் சந்திக்க நேரிடும். எனவே, அதற்கும் கவனமாக இருந்து, பொறுமையைக் கடைபிடிக்க முயலுங்கள். ஆரோக்கியத்தில் எந்த விதத்திலும் அலட்சியமாக இருக்காதீர்கள்.

மீனம்

ஏப்ரல் 12ம் தேதி நடைபெறவிருக்கும் ராகு - கேது பெயர்ச்சி மீன ராசியினருக்கு சாதகமற்ற பலன்களைத் தரப்போகிறது. இந்த நேரத்தில் நீங்கள் நிதி சிக்கல்களை சந்திக்க வேண்டியிருக்கும். உடல்நலம் தொடர்பான பிரச்சனைகளையும் சந்திக்க வேண்டியிருக்கும். எனவே, அவசர அவசரமாக நிதி சார்ந்த எந்த முடிவுகளையும் எடுத்துவிடாதீர்கள். உடல்நலத்தில் கூடுதல் அக்கறை செலுத்துவது நல்லது.

Advertisement

Read Next