Tuesday, March 24, 2026
Logo
Menu
Follow Us
ஆன்மீகம்

ராகு-கேது பெயர்ச்சி 2022: உங்கள் காதல் மற்றும் குடும்ப வாழ்க்கையில் ஏற்பட போகும் பாதிப்புகள்...

A
Admin User
Journalist
March 17, 2022 10 min read 51 views
ராகு-கேது பெயர்ச்சி 2022: உங்கள் காதல் மற்றும் குடும்ப வாழ்க்கையில் ஏற்பட போகும் பாதிப்புகள்...

ராகுவும் கேதுவும் மார்ச் 17, 2022 இன்று பெயர்ச்சியாகின்றனர். ராகு பகவான், ரிஷப ராசியிலிருந்து மேஷ ராசிக்கும், கேது பகவான் விருச்சிக ராசியிலிருந்து துலாம் ராசிக்கும் பெயர்கின்றனர். வரும் காலங்களில் இந்த கிரகங்களின் பெயர்ச்சியால், அனைத்து ராசிக்காரர்களின் காதல் வாழ்க்கையிலும், தனிப்பட்ட வாழ்க்கையிலும் சிலபல மாற்றங்கள் ஏற்பட போகின்றன. அதைப் பற்றி இப்போது இந்த கட்டுரையில் தெரிந்து கொள்ளுங்கள்…

மேஷம்
ராகு-கேது பெயர்ச்சியின் தாக்கத்தால், உங்களில் புதியதோர் உணர்வு தோன்றும். இது உங்களைப் பற்றிய புதிய அம்சங்களைக் கண்டறிய உதவும். உங்கள் குடும்ப உறுப்பினர்களுடன் நல்லுறவைக் கொண்டிருப்பீர்கள். இந்த நேரத்தில் நீங்கள் விரும்பத்தகாத மற்றும் கடுமையான வார்த்தைகளைப் பேச நேரிடுவதால், அது உங்களுக்கு நெருக்கமானவர்களை காயப்படுத்தலாம். எனவே, வார்த்தைகளைப் பயன்படுத்தும்போது கவனமாக இருங்கள். திருமணமாகாதவர்கள் வருங்கால வாழ்க்கைத் துணையை சந்திக்கலாம். திருமணமானவர்கள் ஒருவருக்கொருவர் நேரம் ஒதுக்க வேண்டும்.

ரிஷபம்
நீங்கள் இருக்கும் இடத்தில் உங்கள் இருப்பைத் தக்க வைத்துக் கொள்ள நிறைய பணம் செலவழிக்க வேண்டும். இந்த நேரத்தில், நீங்கள் விரும்பி நபருடன் பேசுவதற்கான வாய்ப்பைப் பெறலாம். திருமணமானவர்களுக்கு நம்பிக்கை சார்ந்த பிரச்சனைகள் வரலாம். இதனால் திருமண வாழ்க்கையில் சிரமங்கள் அதிகரிக்கலாம். இந்த நேரத்தில் உங்கள் துணையுடன் தற்காலிகப் பிரிவினை கூட ஏற்படலாம். பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கு சட்டப்பூர்வமான வழியைத் தவிர்க்கவும். சுமூகமாக பேசி பிரச்சனையைத் தீர்க்க முயலவும்.

மிதுனம்
உங்களின் சமூகம் சார்ந்த பார்வை மேம்படும். நீங்கள் ஒருவரை விரும்புகிறீர்கள் என்றால், அவர்களுடன் வெளியே செல்லும்போது அதிக உற்சாகமாக உணர்வீர்கள். ராகு-கேது பெயர்ச்சி காலத்தில் உங்களிடையே நெருக்கம் அதிகரிக்கும். உங்கள் உடன்பிறந்தோரும் உங்கள் காதலுக்கு ஆதரவாக இருப்பார்கள். திருமணமாகாதவர்களுக்கு, வீட்டில் உள்ளவர்கள் மூலம் உங்கள் துணையை சந்திக்க நேரிடலாம்.

கடகம்
இந்த நேரத்தில் புதிய நபர்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கும். இதன் விளைவாக, தனிமையில் இருப்பவர்கள் தங்கள் துணையைக் காணலாம். திருமணமானவர்கள் தங்கள் நீண்ட கால இலக்கை நோக்கி முன்னோக்கி நகரலாம். ஏனெனில், அவர்களின் தொழில் தொடர்பான சில நல்ல செய்திகள் உங்களைத் தேடி வரபோகிறது.

சிம்மம்
குடும்பத்துடன் நீண்ட தூர பயணம் மேற்கொள்ள உங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும். வெளிநாட்டில் வசிப்போர் தங்கள் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவரைச் சந்திக்கலாம். உறவுகளுக்கு, தங்கள் மன எண்ணங்களை வெளிப்படுத்துவதில் சிரமம் இருக்கலாம். இந்த நேரத்தில் உறவுகளில் தேவையற்ற குழப்பங்கள் ஏற்படலாம். பெற்றோரின் உடல் நலனில் அக்கறை செலுத்தவும். தந்தையின் ஆலோசனையைத் தீவிரமாக எடுத்துக் கொள்ளவும்.

கன்னி
நண்பர்கள் மற்றும் அறிமுகமானவர்களுடன் சிறு பயணங்கள் செல்ல வேண்டிய சூழல் உருவாகலாம். உங்கள் தாயுடன் சில கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். நீங்கள் நீண்ட காலத்திற்கு வீட்டை விட்டு விலகி இருக்க வேண்டியிருக்கும். இந்த நேரத்தில் அமைதியாக இருப்பதையும், விலகி இருப்பதையும் தவிர்க்கவும். இல்லையெனில், நீங்கள் உறவு தவறான திசையில் செல்லக்கூடும். நீங்கள் மற்றவர்களைப் பற்றி அலட்சியமாக கருதுவதைத் தவிர்க்கவும்.

துலாம்
தங்கள் மனதிற்கு பிடித்த நபருடன் பேசி பழக முயற்சித்தாலும், உங்கள் முயற்சிகள் அனைத்தும் திசைதிருப்பப்படலாம். உங்கள் அன்புக்குரியவர்களுடன் நீங்கள் நெருக்கமாக இருந்தாலும், உங்கள் எண்ணங்களை உங்களுக்கு வைத்து கொண்டு தவிப்பீர்கள். உங்கள் காதலை வெளிப்படுத்த முடியாமல் தடுமாறுவீர்கள். இருப்பினும், உங்கள் தனிப்பட்ட வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.

விருச்சிகம்
எந்தவொரு வேலையிலும் அர்ப்பணிப்புடன் செயல்படுபவர்கள் கவனச்சிதறலுக்கு ஆளாக நேரிடும். உங்கள் காதல் விஷயத்தில் உங்கள் மனம் தடுமாறி, துணையை இழக்க நேரிடலாம். எந்த பிரச்சனையாக இருந்தாலும், மனதில் இருப்பதை உங்கள் அன்புக்குரியவர்களுடன் தெளிவாக விவாதிக்கவும். பின்னர் ஒரு உறுதியான முடிவை எடுக்கவும் உங்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது. தனிமையில் இருப்பவர்கள் தங்கள் மனதிற்கு பிடித்தவர்களுடன் நேரத்தை மகிழ்ச்சியாக செலவிடுவார்கள்.

தனுசு
கடந்த காலங்களில் குடும்பம் மற்றும் உறவுமுறை சவால்களை எதிர்கொண்டவர்களுக்கு ஓரளவு நிம்மதி கிடைக்கும். துணையைத் தேடுபவர்களுக்கு இந்த காலக்கட்டத்தில் சிறந்த தருணங்கள் காத்திருக்கின்றன. இந்த நேரத்தில் நீங்கள் அதிகமாக உணர்ச்சிவசப்படுவீர்கள். உங்கள் வருங்கால துணையைக் கண்டறிய உங்களுக்கு நல்ல வாய்ப்பு உள்ளது. மற்றவர்களை அதிகமாக நம்ப உங்கள் மரியாதையை கெடுத்து கொள்ளாதீர்கள்.

மகரம்
உங்கள் வீட்டிற்கு ஆடம்பரமான பொருட்களை வாங்க அதிக பணம் செலவழிப்பீர்கள். உங்கள் குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள் மற்றும் உடன்பிறப்புகளுடன் உங்கள் உறவு மேம்படும். இருப்பினும், இந்த நேரத்தில் நீங்கள் புதிய விஷயங்களைக் கற்றுக்கொள்ள முயற்சிப்பீர்கள். இதன் காரணமாக உங்களுக்கு நேரம் குறைவாக இருக்கும். இந்த ராகு-கேது பெயர்ச்சி காலத்தில் உங்கள் தாயின் உடல் நலனில் அதிக அக்கறை காட்ட வேண்டும்.

கும்பம்
குடும்பத்தாரை விட்டு பிரிந்து வாழ்பவர்கள், தங்களுக்கான நேரத்தை நண்பர்களுடன் அதிகம் செலவிடுவீர்கள். இந்த ராகு-கேது பெயர்ச்சி காரணமாக உங்கள் வார்த்தைகளைப் பேசும்போது மிக கவனமாக பயன்படுத்த வேண்டும். குறிப்பாக, உங்கள் உடன்பிறப்புடன் பேசும் போது அதீத கவனம் தேவை. இல்லையெனில், உங்கள் உறவில் விரிசல் ஏற்படக்கூடும். மேலும், இந்த காலக்கட்டத்தில் உங்கள் தாத்தா-பாட்டியின் உடல்நிலை பெரிதும் பாதிக்க வாய்ப்புள்ளது. அதுமட்டுமன்றி, உங்கள் மனமும் எதிர் பாலினத்தவரால் அதிகம் ஈர்க்கப்டும்.

மீனம்
வெளியூர் சென்று புதிய நபர்களை சந்திக்கும் வாய்ப்புள்ளதால், சுற்றுலா செல்ல திட்டமிடுங்கள். இதன்மூலம், உங்கள் நட்பு வட்டாரம் அதிகரிக்கலாம். ஒருவேளை உங்களுக்கும் உங்கள் அம்மாவுக்கும் இடையேயான உறவு மோசமடையலாம். இந்த ராகு-கேது பெயர்ச்சி காலத்தில் நீங்களும் உங்கள் வாழ்க்கைத் துணையும் ஒருவரையொருவர் ஆதரிக்கும் வரை, உங்கள் திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். குடும்ப விவகாரங்கள் உங்களை தொந்தரவு செய்யலாம். எனவே, குடும்பத்தாருடன் அதிக நேரம் செலவிடுங்கள்.

Share this article
A
Admin User

Lifestyle Journalist

A passionate writer covering health, wellness, and cultural topics for the Tamil community.

தினசரி ஒரு நற்சிந்தனை

...

உடல் எடை கணக்கீடு

ஆரோக்கியமான வாழ்விற்கு உங்கள் பிஎம்ஐ (BMI) அளவை அறிந்து கொள்வது அவசியம்.

கணக்கிடு (BMI Test)
திருக்குறள் (Kural of the Day)

...

...

இன்றைய விலை
தங்கம் (22k)
1 கிராம்
₹13,000
தங்கம் (24k)
1 கிராம்
₹13,650
வெள்ளி
1 கிராம்
₹250
அடுத்த பண்டிகை (Next Festival)

தேடல்...

00
Days to go
உங்கள் கருத்து (Poll)

மன அழுத்தத்தைக் குறைக்க நீங்கள் என்ன செய்கிறீர்கள்?

Get Daily Updates

Subscribe for the latest news in your inbox.

அடுத்து வாசிக்க
பிரார்த்தனையின் சக்தி: தினசரி வழிபாடு வாழ்க்கையை மாற்றியமைப்பது எப்படி?
வாசிக்க