ஆரோக்கியம்

கர்ப்பமாக இருக்கும் பெண்கள் மறந்தும் இந்த தவறுகளை மட்டும் செய்யவே கூடாது...

A
Admin User
1 min read
கர்ப்பமாக இருக்கும் பெண்கள்  மறந்தும் இந்த தவறுகளை மட்டும் செய்யவே கூடாது...
Advertisement
Editor's Choice
Affiliate link

Casio Youth Series Digital Black Dial Unisex Watch - F-91W-1Q(D002)

Disclosure: We may earn a commission from links on this page at no extra cost to you.

கர்ப்பமாக இருக்கும் பெண்கள் தங்கள் வயிற்றில் வளரும் குழந்தையின் மீது அதிகப்படியான அக்கறை செலுத்த வேண்டியது அவசியம். இன்றைய காலக்கட்டத்தில் மாறுபட்ட உணவுப்பழக்கங்களால் கருச்சிதைவு அதிகரித்து காணப்படுகிறது. உலக சுகாதார அமைப்பின் (WHO) தரவுகளின்படி, உலகம் முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் 4 முதல் 50 மில்லியன் கருக்கலைப்புகள் செய்யப்படுவதாக தெரிய வருகிறது. இதற்கு ஒரு முக்கிய காரணம், கர்ப்ப காலத்தில் பெண்கள் செய்யும் சில தவறுகள் கருச்சிதைவு அபாயத்தை அதிகரிக்கும். அவற்றைத் தவிர்க்க மருத்துவர்கள் கூறும் அறிவுரைகளை முறையாக பின்பற்றி செய்லபட வேண்டியது மிக முக்கியம். அதிலும், பெரியவர்கள் உடனில்லாமல் தனியாக வசிப்பவர்களுக்கு இது மிகவும் அவசியமான ஒன்று. எனவே, அவர்களுக்கு உதவும் வகையில் கர்ப்பிணிப் பெண்கள் தவறுதலாக கூட செய்யக்கூடாத 5 தவறுகளைப் பற்றி இந்த கட்டுரையில் உங்களுக்கு சொல்லப்போகிறேன்.

கர்ப்பிணி பெண்கள் செய்யக்கூடாத தவறுகள்

அடிக்கடி குனிய கூடாது

ஒரு பெண் கர்ப்பமாக இருப்பது தெரிந்தது முதல் அடிக்கடி வளைந்து, குனிந்து வேலை செய்வதைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில், இது வயிற்றில் வளரும் கருவிற்கு தேவையற்ற அழுத்தத்தை ஏற்படுத்தும். அதே நேரத்தில், இதைச் செய்வதன் மூலம், குறிப்பிட்ட காலத்தில்றகு முந்தைய குறைப் பிரசவத்திற்கான வாய்ப்புகளை அதிகரிக்கும். அத்தகைய சூழ்நிலையில், வீடு துடைக்க அல்லது சுத்தம் நீளமான குச்சிகளைப் பயன்படுத்துங்கள்.

அதிக நேரம் நிற்கக்கூடாது

கர்ப்ப காலத்தில் பெரும்பாலான வேலைகளை நிமிர்ந்து செய்வதே சரியானது என்பதை பெண்கள் அறிந்திருப்பார்கள். இருப்பினும் நீண்ட நேரம் நின்றபடியே வேலை செய்வது கர்ப்பப்பையில் அதிக அழுத்தத்தை ஏற்படுத்தும். அதனால் தான், கர்ப்பமாக இருக்கும் பெண்கள் 20 நிமிடங்களுக்கு மேல் நிற்கக்கூடாது.

உணவில் சிறப்பு கவனம் தேவை

கர்ப்ப காலத்தில் அனைத்தை காட்டிலும் மிக முக்கியமானது உணவு பழக்கம். கர்ப்பமாக இருக்கும் போது பெண்கள் அனைவருமே உண்ணும் உணவில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். அதிக நேரம் வெறும் வயிற்றிலும் இருக்காவே கூடாது. பசிக்கும் போது உடனே சாப்பிட வேண்டும். சத்தான காய்கறிகள், பழங்கள் போன்றவற்றை அன்றாட உணவில் சேர்த்து கொள்ள வேண்டியது அவசியம். உங்கள் மருத்துவரிடம் உணவு குறித்த ஆலோசனையைை மறவாமல் கேட்டு கொள்ளுங்கள்.

காலணிகள்

கர்ப்ப காலத்தில் சரியான காலணிகளைத் தேர்ந்தெடுத்து அணிய வேண்டியது மிக முக்கியம். கர்ப்பமாக இருக்கும் போது, ஹை ஹீல்ஸ் செருப்புகளை அணியவே கூடாது. இதனுடன், வசதியான காலணிகளை அணிவது உங்களுக்கு கால் வலியில் இருந்தும் ஆறுதலளிக்கும்.

கனமான பொருட்களைத் தூக்க கூடாது

கர்ப்ப காலத்தில், பெண்கள் கனமான பொருட்களை தூக்காமல் இருக்க வேண்டும். ஏனென்றால், கனமான பொருட்களைத் தூக்கும் போது வயிற்றில் ஒருவித அழுத்தத்தைக் கொடுத்த தான் அனைவருமே எடையைத் தூக்குவோம். அதனாலேயே, கர்ப்பமாக இருக்கும் போது அதிக எடை கொண்ட பொருட்களைத் தூக்க கூடாது என்று சொல்வதுண்டு.

Advertisement

Read Next