Sunday, May 10, 2026
Logo
Menu
Follow Us
சமையல்

பொங்கல் 2023: கருப்பரிசி சர்க்கரைப் பொங்கல்!

A
Admin User
Journalist
January 10, 2023 3 min read 130 views
பொங்கல் 2023: கருப்பரிசி சர்க்கரைப் பொங்கல்!

Pongal 2023: Black rice sweet pongal recipe - பொங்கல் வந்துவிட்டது. எல்லா ஆண்டும் ஒரே மாதிரியான பொங்கல் செய்பவரா நீங்கள்? அப்படியெனில், இந்த ஆண்டு வித்தியாசமான பொங்கல் செய்து அசத்துங்கள். பச்சரிசிக்கு பதிலாக கருப்பரிசி பயன்படுத்தி, கருப்பரிசி சர்க்கரை பொங்கல் செய்யுங்கள். சரி இப்போது அதற்கு தேவையான பொருட்கள் மற்றும் செய்முறையை பார்க்கலாம்…

தேவையான பொருட்கள்

கருப்பரிசி (அ) கவுனி அரிசி - ஒரு கப்
பாசி பருப்பு - 1/4 கப்
உப்பு - ஒரு சிட்டிகை(சுவைக்காக‌)
வெல்லம் - ஒரு கப்
பால் - 1/4 கப்
தேங்காய்ப் பூ - 2 டீஸ்பூன்
நெய் - 2 டேபிள்ஸ்பூன்
முந்திரி - 10
ஏலக்காய் - 1

பொங்கல் எந்த திசையில் பொங்கினால் நல்லது தெரியுமா?

செய்முறை

  • முதலில் பாசி பருப்பை வெறும் வாணலில் வறுத்து எடுத்துக்கொள்ளவும்.
  • அடுத்ததாக, பாசிபருப்புடன் கருப்ப‌ரிசியையும் சேர்த்து சுத்தமாக கழுவி எடுத்து ஒரு பாத்திரத்தில் சேர்த்து, அதில் இரண்டு கப் தண்ணீர் விட்டு, ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து நன்றாக வேக வைக்கவும்.
  • அரிசியும், பருப்பும் நன்றாக வெந்தவுடன் அதில் பாலை சேர்த்து குறைவான தீயில் அடுப்பில் வைக்கவும்.
  • இப்போது ஒரு பாத்திரத்தில் வெல்லத்தைப் பொடித்து எடுத்து, அதனுடன் சிறிது தண்ணீர் சேர்த்து அடுப்பில் வைத்து நன்கு கரைந்ததும் அதை வடிகட்டவும்.
  • வடிகட்டி வெல்ல நீரை மீண்டும் அடுப்பில் வைத்து நுரைத்து வரும்போது எடுத்து, சர்க்கரை பொங்கலில் ஊற்றி நன்கு கிளறி விடவும்.
  • பிறகு துருவிய தேங்காய், பொடித்த ஏலக்காய் சேர்த்துக் கிளறவும்.
  • மற்றொரு அடுப்பில், சிறு வாணலியை வைத்து நெய் ஊற்றி சூடானதும் முந்திரியை சேர்த்து வறுத்து பொங்கலில் சேர்த்துக் கிளறி இற‌க்கினால் சுவையான கருப்பரிசி பொங்கல் தயார்.

பொங்கல் 2023: வித்தியாசமான கரும்புச்சாறு பொங்கல்!!!

ஐயங்கார் ஸ்டைல் சர்க்கரை பொங்கல்!!!

திணை கருப்பட்டி பொங்கல்!!!

Share this article
A
Admin User

Lifestyle Journalist

A passionate writer covering health, wellness, and cultural topics for the Tamil community.

தினசரி ஒரு நற்சிந்தனை

...

உடல் எடை கணக்கீடு

ஆரோக்கியமான வாழ்விற்கு உங்கள் பிஎம்ஐ (BMI) அளவை அறிந்து கொள்வது அவசியம்.

கணக்கிடு (BMI Test)
திருக்குறள் (Kural of the Day)

...

...

இன்றைய விலை
தங்கம் (22k)
1 கிராம்
₹14,150
தங்கம் (24k)
1 கிராம்
₹14,858
வெள்ளி
1 கிராம்
₹280
அடுத்த பண்டிகை (Next Festival)

தேடல்...

00
Days to go
உங்கள் கருத்து (Poll)

நலமான வாழ்விற்கு எது மிக முக்கியம்?

Get Daily Updates

Subscribe for the latest news in your inbox.

அடுத்து வாசிக்க
தமிழ்நாட்டின் சுவைமிகுந்த சமையல் கலை: சிறந்த உணவுகளின் ஒரு முழுமையான பார்வை
வாசிக்க