Tuesday, March 24, 2026
Logo
Menu
Follow Us
ஆரோக்கியம்

இந்த பிரச்சனை உள்ளவர்கள் சைக்கிள் ஓட்டுவதைத் தவிர்ப்பது நல்லதாம்...

A
Admin User
Journalist
June 03, 2022 5 min read 77 views
இந்த பிரச்சனை உள்ளவர்கள் சைக்கிள் ஓட்டுவதைத் தவிர்ப்பது நல்லதாம்...

இன்றைய காலக்கட்டத்தில் மாறிவரும் வாழ்க்கை முறையால், உடல் பருமன் மற்றும் பல வகையான உடல்நலப் பிரச்சனைகளுக்கு மக்கள் ஆளாக நேரிடுகிறது. எல்லாவற்றிற்கும் இயந்திரம் வந்துவிட்டதால் உடல் உழைப்பு என்பது முற்றிலுமாக இல்லாமல் போய்விட்டது. அதனாலேயே பல்வேறு பிரச்சனைகள் உண்டாகின்றன. எனவே, நீங்கள் இதுபோன்ற சிக்கல்களைத் தவிர்க்க வேண்டும் என்றால், இதற்கு உடலின் செயல்பாடு மிகவும் அவசியம். இதனால் உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க முடியும். நீங்கள் விரும்பினால் சைக்கிள் ஓட்டலாம். உண்மையில், சைக்கிள் ஓட்டுவதன் மூலம் உங்கள் உடலை சுறுசுறுப்பாகவும் புத்துணர்ச்சியுடனும் மாற்றுவது எளிதாக இருக்கும். இதுவும் ஒருவகையான உடற்பயிற்சியாகவே கருதப்படுகிறது. ஆனால், சில உடல் பிரச்சனைகள் இருப்பவர்கள் சைக்கிள் ஓட்டக்கூடாது. அவற்றைப் பற்றி தான் இப்போது இந்த கட்டுரையில் தெரிந்து கொள்ள போகிறோம்.

மூட்டு சம்பந்தப்பட்ட பிரச்சனை

முழங்கால் சம்பந்தமான பிரச்சனைகள் உள்ள முதியவர்கள் கட்டாயம் சைக்கிள் ஓட்டக்கூடாது. ஏனெனில் சைக்கிள் ஓட்டுவதால் அவர்களது முழங்கால் பிரச்சனை மேலும் அதிகரிக்கும். இதன் காரணமாக, வயதானவர்கள் சைக்கிள் ஓட்ட வேண்டும் என்றால், அதற்கு முன்பு உங்களது மருத்துவரை அணுகுவது நல்லது.

ஆஸ்துமா

சைக்கிள் ஓட்டுவதற்கு அதிக ஆற்றலைப் பயன்படுத்த வேண்டும். இதுபோன்ற சூழலில் சுவாசத்தின் வேகமும் அதிகரிக்கத் தொடங்கும். அத்தகைய சூழ்நிலையில், ஆஸ்துமா நோயாளிகள் நீண்ட நேரம் சைக்கிள் ஓட்டக்கூடாது. ஏனெனில் இதன் காரணமாக அவர்களுக்கு மூச்சுத்திணறல் பிரச்சனை அதிகரிக்க வாய்ப்புள்ளது. இதுபோன்ற சூழ்நிலையில் ஆஸ்துமா நோயாளிகள் மருத்துவரின் ஆலோசனையின் பேரில் மட்டுமே சைக்கிள் ஓட்டுவது நல்லது.

வலிப்பு

சைக்கிள் ஓட்டுதல் மாரடைப்பு மற்றும் பக்கவாதம் தொடர்பான அபாயங்களைக் குறைக்கும். இருப்பினும் வலிப்பு பிரச்சனை உள்ளவர்கள் மருத்துவரின் ஆலோசனையின்றி சைக்கிள் ஓட்டக்கூடாது. உண்மையில், சைக்கிள் ஓட்டும் போது வலிப்பு நோய் தாக்குதலுக்கு உள்ளானால் அவர்களுக்கும் அவர்களைச் சுற்றியுள்ளவர்களுக்கும் காயம் ஏற்படக்கூடும். எனவே, மருத்துவரிடம் அறிவுரை கேட்டு செயல்படுவது நல்லது.

மனச்சோர்வு

மனச் சோர்வு ஏற்படும் போது உடல் ரீதியிலான எந்த எதிர்வினையும் செய்ய வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறது. உண்மையில், சைக்கிள் ஓட்டும் போது அதிக ஆற்றல் தேவைப்படுவதோடு, தசைகளுக்கு அதிகப்படியான இயக்கம் இருக்கும். இது உடலை மேலும் சோர்வடைய செய்யும். இதன் காரணமாக, அத்தகைய சூழ்நிலையிலும் சைக்கிள் ஓட்டுவதைத் தவிர்ப்பது நல்லது.

குறிப்பு

சிறு வயது குழந்தைகள் சைக்கிள் ஓட்டக்கூடாது. மேலும் 5 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகள் சைக்கிள் ஓட்ட வேண்டும் என்றால், பெற்றோரின் மேற்பார்வையில் சைக்கிள் ஓட்டுவது பாதுகாப்பானது.

Share this article
A
Admin User

Lifestyle Journalist

A passionate writer covering health, wellness, and cultural topics for the Tamil community.

தினசரி ஒரு நற்சிந்தனை

...

உடல் எடை கணக்கீடு

ஆரோக்கியமான வாழ்விற்கு உங்கள் பிஎம்ஐ (BMI) அளவை அறிந்து கொள்வது அவசியம்.

கணக்கிடு (BMI Test)
திருக்குறள் (Kural of the Day)

...

...

இன்றைய விலை
தங்கம் (22k)
1 கிராம்
₹13,000
தங்கம் (24k)
1 கிராம்
₹13,650
வெள்ளி
1 கிராம்
₹250
அடுத்த பண்டிகை (Next Festival)

தேடல்...

00
Days to go
உங்கள் கருத்து (Poll)

மன அழுத்தத்தைக் குறைக்க நீங்கள் என்ன செய்கிறீர்கள்?

Get Daily Updates

Subscribe for the latest news in your inbox.

அடுத்து வாசிக்க
ஆரோக்கியத்திற்கு சிறந்தது சைவமா அல்லது அசைவமா? இதோ முழுமையான அலசல்!
வாசிக்க