ரெஸ்டாரண்ட் ஸ்டைல் பன்னீர் மக்கானி!!!
A
Admin User
Advertisement
Editor's Choice
Affiliate link
FLYNGO Touch Control LED Night Light Table Lamp for Bedroom, Living Room, and Study, with Adjustable Brightness, USB Rechargeable (A1)Plastic ,White
Disclosure: We may earn a commission from links on this page at no extra cost to you.
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி உண்ணும் உணவு பன்னீர். இது உடலுக்கு மிகவும் நல்லது. அத்தகைய பன்னீரை வைத்து பல உணவுகள் வகைகளை செய்யலாம். அப்படிப்பட்ட நிலையில் இன்று பன்னீர் மக்கானி எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள போகிறோம். பஞ்சாபி ரெசிபியான இது சப்பாத்தி, ரொட்டி, தோசை போன்றவற்றிற்கு மிகவும் அருமையாக சைடு டிஷ்ஷாக இருக்கும். அதிலும், ஹோட்டல்களில் கிடைக்கும் பன்னீர் மக்கானி சுவையில் வீட்டிலேயே எளிதாக செய்திடலாம். இது உங்கள் வீட்டில் உள்ள அனைவருக்கும் நிச்சயம் பிடிக்கும். சரி, பன்னீர் மக்கானி எப்படி செய்வதென்று இப்போது தெரிந்து கொள்வோம்…
தேவையான பொருட்கள்
- வெண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
- இலவங்கப்பட்டை - 2 துண்டு
- கருப்பு ஏலக்காய் - 1
- பச்சை ஏலக்காய் - 3
- தக்காளி - 1 கப் (அரைத்தது)
- உப்பு - சுவைக்கேற்ப
- காஷ்மீரி மிளகாய் தூள் - 2 டீஸ்பூன்
- தக்காளி கெட்ச்அப் - 1 டீஸ்பூன்
- சர்க்கரை - 1/2 டீஸ்பூன்
- பன்னீர் - 1 கப் (சிறு துண்டுகளாக நறுக்கியது)
- தண்ணீர் - 1/2 கப்
- கசூரி மேத்தி - 2 டீஸ்பூன்
- ப்ரஷ் கிரீம் - 1/2 கப்
- துருவிய சீஸ் - 3 டீஸ்பூன்
செய்முறை
- முதலில் ஒரு கடாயை அடுப்பில் வைத்து அது சூடானதும் அதில் வெண்ணெய் போடவும்.
- வெண்ணெய் சூடானதும் இப்போது அதில் இலவங்கப்பட்டை, கருப்பு ஏலக்காய் மற்றும் பச்சை ஏலக்காய் சேர்த்து தாளிக்கவும்.
- அதன் பிறகு, அதில் அரைத்த தக்காளியைச் சேர்த்து உடன் சிறிது உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்.
- இப்போது மிளகாய் தூள், தக்காளி கெட்ச்அப், சர்க்கரை, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து கிளறி விடவும்.
- மசாலாவின் பச்சை வாசனை போனதும் அதில் நறுக்கிய பன்னீர் துண்டுகளைச் சேர்த்து அடுப்பை குறைவான தீயில் வைத்து கிளறவும்.
- இப்போது அதில் சிறிது தண்ணீர் சேர்த்து கிளறி, மூடி வைத்து பன்னீர் வேகும் வரை 5-6 நிமிடங்களுக்கு சமைக்கவும்.
- பன்னீர் வெந்தவுடன் மூடியை அகற்றி அதில் கசூரி மேத்தி இலைகளை நன்கு கசக்கி அதனுடன் சேரக்க்வும்.
- இறுதியாக, அதில் ப்ரஷ் கிரீம் சேர்த்து கிளறியதும், துருவிய சீஸ் போட்டு அலங்கரித்து சூடாக பரிமாறவும்.
Advertisement