Tuesday, March 24, 2026
Logo
Menu
Follow Us
சமையல்

மட்டன் தால்சா!!!

A
Admin User
Journalist
June 08, 2022 5 min read 61 views
மட்டன் தால்சா!!!

இந்த வார விடுமுறையில் மட்டனை வைத்து சூப்பரான ஒரு ரெசிபி செய்யலாமே. அதான் மட்டன் தால்சா. பருப்பு போட்டு பொதுவாக மட்டன் ரெசிபி செய்ய மாட்டார்கள். ஆனால், ஹோட்டல்களில் பிரியாணிக்கு சைடு டிஷ்ஷாக கொடுக்கும் இந்த மட்டன் தால்சா மிகவும் ருசியாக இருக்கும். இனி நாமும் அதை வீட்டிலே செய்து சுவைக்கலாம். அதை சாப்பாட்டுடன் சாப்பிடவும் அருமையாக இருக்கும். வீட்டில் உள்ளவர்கள் வித்தியாசமாக ரெசிபி செய்து கொடுத்து அசத்தினால் நன்றாக இருக்கும் அல்லவா? சரி இப்போது மட்டன் தால்சா எப்படி செய்வதென்று இந்த கட்டுரையில் தெரிந்து கொள்வோம்…

தேவையான பொருட்கள்

  • எண்ணெய் - 1 டீஸ்பூன்
  • பிரியாணி இலை - 1
  • பட்டை - 1
  • கிராம்பு - 2
  • ஏலக்காய் - 2
  • சின்ன வெங்காயம் - 12
  • இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டேபிள் ஸ்பூன்
  • பச்சை மிளகாய் - 2
  • தக்காளி - 2
  • மட்டன் - 1/2 கிலோ
  • துவரம் பருப்பு - 1/2 கப்
  • கடலை பருப்பு - 1/4 கப்
  • கரம் மசாலா - 1 டீஸ்பூன்
  • மல்லி தூள் - 1 டீஸ்பூன்
  • மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
  • மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
  • கத்திரிக்காய் - 1
  • மாங்காய் - 1/2
  • புளிச்சாறு - 1/4 கப்
  • தண்ணீர் - தேவையான அளவு
  • உப்பு - சுவைக்கேற்ப
  • கொத்தமல்லி - சிறிது

தாளிப்பதற்கு..

  • எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
  • நெய் - 1 டேபிள் ஸ்பூன்
  • கடுகு - 1/4 டீஸ்பூன்
  • சீரகம் - 1/2 டீஸ்பூன்
  • மிளகு - 1/2 டீஸ்பூன்
  • கறிவேப்பிலை - சிறிது
  • வெங்காயம் - 1/2 கப்

செய்முறை

  • முதலில் குக்கரை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும், பட்டை, ஏலக்காய், பிரியாணி இலை மற்றும் கிராம்பு சேர்த்து தாளிக்கவும்.
  • பின் அதில் சின்ன வெங்காயம், இஞ்சி பூண்டு பேஸ்ட், பச்சை மிளகாய் மற்றும் தக்காளி சேர்த்து சிறிது நேரம் வதக்கவும்.
  • பின்பு அதில் நன்கு கழுவி சுத்தம் செய்த மட்டனை சேர்த்து நிறம் மாறும் வரை கிளறி விடவும்.
  • அத்துடன் கடலை பருப்பு, துவரம் பருப்பு மற்றும் மஞ்சள் தூள், மிளகாய் தூள், கரம் மசாலா, மல்லித் தூள், சிறிது உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்.
  • பிறகு அதில் வழக்கமாக பருப்பு வேக வைக்க ஊற்றும் அளவை விட சற்று கூடுதலாக நீரை ஊற்றி, குக்கரை மூடி வைத்து மிதமான தீயில் 5 முதல் 6 விசில் விட்டு இறக்கிடவும்.
  • குக்கர் விசில் தானாக அடங்கியதும் திறந்து அத்துடன் காய்கறிகளான கத்திரிக்காய், மாங்காய் சேர்த்து புளி கரைசலை சிறிது ஊற்றி மூடி வைத்து, 10 நிமிடம் காய்கறிகள் வேகும் வரை கொதிக்க விட்டு இறக்கிடவும்.
  • இப்போது ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய், நெய் ஊற்றி சூடானதும், கடுகு, சீரகம், கறிவேப்பிலை, வரமிளகாய், மிளகு மற்றும் சிறிது வெங்காயத்தை சேர்த்து வதக்கி, குக்கரில் உள்ள மட்டன் தால்சாவில் ஊற்றி கிளறி, மேலே சிறிது கொத்தமல்லியை தூவினால், சுவையான மட்டன் தால்சா பரிமாற தயார்.

Image Courtesy: steffisrecipes

Share this article
A
Admin User

Lifestyle Journalist

A passionate writer covering health, wellness, and cultural topics for the Tamil community.

தினசரி ஒரு நற்சிந்தனை

...

உடல் எடை கணக்கீடு

ஆரோக்கியமான வாழ்விற்கு உங்கள் பிஎம்ஐ (BMI) அளவை அறிந்து கொள்வது அவசியம்.

கணக்கிடு (BMI Test)
திருக்குறள் (Kural of the Day)

...

...

இன்றைய விலை
தங்கம் (22k)
1 கிராம்
₹13,000
தங்கம் (24k)
1 கிராம்
₹13,650
வெள்ளி
1 கிராம்
₹250
அடுத்த பண்டிகை (Next Festival)

தேடல்...

00
Days to go
உங்கள் கருத்து (Poll)

மன அழுத்தத்தைக் குறைக்க நீங்கள் என்ன செய்கிறீர்கள்?

Get Daily Updates

Subscribe for the latest news in your inbox.

அடுத்து வாசிக்க
தமிழ்நாட்டின் சுவைமிகுந்த சமையல் கலை: சிறந்த உணவுகளின் ஒரு முழுமையான பார்வை
வாசிக்க