Tuesday, March 24, 2026
Logo
Menu
Follow Us
ஆன்மீகம்

மாத ராசிபலன் (மே 2022): இந்த ராசிக்காரர்களுக்கு மகத்தான வெற்றி கிடைக்கப்போகிறது...

A
Admin User
Journalist
May 02, 2022 11 min read 54 views
மாத ராசிபலன் (மே 2022): இந்த ராசிக்காரர்களுக்கு மகத்தான வெற்றி கிடைக்கப்போகிறது...

ஒவ்வொரு மாதமும் கிரகங்களின் நிலைபாட்டின் அடிப்படையில் ஒவ்வொரு ராசிக்கான பலனும் மாறும். அந்த வகையில் இந்த மாத கிரக நிலைகளை அடிப்படையாக கொண்டு 12 ராசிகளுக்கும் எத்தகைய பலன் கிடைக்கப்போகிறது என்பதைப் பற்றி இந்த கட்டுரையில் நாம் தெரிந்து கொள்ள போகிறோம். இந்த மே மாதம் உங்கள் ராசிக்கான பலனைத் தெரிந்து கொள்ள கட்டுரையைத் தொடர்ந்து படிக்கவும்…

மேஷம்
யாரிடமும் வாக்குவாதம் செய்வதைத் தவிர்க்கவும். வேலையில் முன்னேற்றம் என்பது சுமாராக இருக்கும். உங்கள் பணிகளை முடிக்க அதிக முயற்சி செய்ய வேண்டும். ஆனால், வணிகர்களுக்கு இது அற்புதமான மாதமாக இருக்கும். ஏனெனில், நீங்கள் நல்ல நிதி லாபத்தைப் பெறுவீர்கள். காதல் வாழ்க்கையில் மகிழ்ச்சியான நேரத்தை அனுபவிப்பீர்கள். அன்புக்குரியவருடன் சுற்றுலா செல்ல திட்டமிடலாம். உங்கள் தந்தையுடனான உறவு சற்று கடினமாக இருக்கலாம். எனவே, பொறுமையாக இருக்க வேண்டியது அவசியம்.

ரிஷபம்
புதிய வேலை தேடுபவர்களுக்கு இந்த மாதம் நிச்சயம் வெற்றி கிடைக்கும். உங்கள் கடின உழைப்பின் பலனை விரைவில் பெறுவீர்கள். ஆனால், நீங்கள் ஆணவத்தை தவிர்க்க வேண்டும். சிலர் இதன் காரணமாக இடமாற்றத்தைப் பெறலாம். வணிகர்கள் தங்கள் வணிக கூட்டாளர்களுடன் சுமுகமான உறவைப் பேண வேண்டும். உடல்நலத்தில் முன்னேற்றம் அதிகரிக்கும். திருமணமானவர்கள், தங்கள் துணைக்கு உதவி செய்வதிலும் ஆதரவளிப்பதிலும் மகிழ்ச்சி அடையலாம்.

மிதுனம்
இந்த நேரம் தொழிலதிபர்களுக்கு சாதகமானது. உங்களில் சிலருக்கு வேலையில் பெரிய ஏற்றத்தின் காரணமாக இடமாற்றத்தை எதிர்பார்க்கலாம். இருப்பினும், உங்கள் நடத்தையில் கவனம் செலுத்துங்கள். ஏனெனில் சக ஊழியர்கள் மற்றும் மேலதிகாரிகளுடன் சகிப்புத்தன்மையால் சிக்கல்கள் உருவாகலாம். வியாபாரிகள் வெளிநாட்டு ஏற்றுமதி தொடர்பான வேலை செய்தால் நல்ல லாபம் பெறலாம். உங்கள் வாழ்க்கைத் துணையுடன் உங்கள் பிணைப்பு வலுவாக இருக்கும். பழைய குடும்ப விவகாரங்கள் தலைதூக்கக்கூடும். எனவே, நிதானம் தேவை.

கடகம்
உத்தியோகத்தில் சில ஏற்ற தாழ்வுகளைச் சந்திக்க வேண்டி வரும். அலுவலகச் சூழல் மன அழுத்தமாக இருக்கும். இது உங்களை கடினமாக உழைக்கத் தூண்டும். தொழிலதிபர்கள் இந்த நேரத்தைத் தொழில்துறையுடன் இணைக்கவும், புதிய நபர்களை சந்திக்கவும் பயன்படுத்த வேண்டும். நீண்ட கால முதலீட்டில் இருந்து லாபம் அடைவீர்கள். தனிப்பட்ட முறையில் உங்கள் துணையுடன் தவறான புரிதல் இருக்கலாம். உங்களிடையே எந்வொரு இடைவெளியும் இல்லை என்பதை உறுதிப்படுத்தவும்.

சிம்மம்
குடும்ப சொத்து தொடர்பான வழக்கு உங்களுக்கு சாதகமாக முடியும். இருப்பினும், முதலீடு செய்வதில் அவசரப்பட வேண்டாம். பங்குச் சந்தையில் புத்திசாலித்தனமாக பணத்தை முதலீடு செய்யுங்கள். தொழில் தொடர்பான உத்தியை உருவாக்க உங்கள் புத்திசாலித்தனத்தைப் பயன்படுத்தவும். உங்கள் ஆலோசனைகளை பெரியவர்கள் பெரிதும் பாராட்டுவார்கள். உங்களுக்கு காயம் ஏற்படும் அபாயம் இருப்பதால் வாகனம் ஓட்டுவதைத் தவிர்க்கவும். நம்பிக்கையின்மையால் காதல் மற்றும் திருமண வாழ்க்கை சற்று சவாலாக இருக்கக்கூடும்.

கன்னி
சொத்து சம்பந்தமான விஷயங்களில் நீங்கள் அவசரம் வேண்டாம். பொறுமையாக இருப்பது நல்லது. பங்குச் சந்தையில் புத்திசாலித்தனமாக முதலீடு செய்யுங்கள். உங்கள் கனவுகளில் ஒரு புதிய கொள்கையை உருவாக்க உங்கள் புத்திசாலித்தனத்தைப் பயன்படுத்தவும். திடீர் வானிலை மாற்றம் உங்கள் ஆரோக்கியத்தில் மோசமான விளைவை ஏற்படுத்தும். காதல் மற்றும் திருமண வாழ்க்கை நெருக்கடியான நிலையில் இருந்தால், விட்டு கொடுத்து செல்ல அறிவுறுத்தப்படுகிறது.

துலாம்
கடின உழைப்பாலும், முயற்சியாலும் உங்களுக்கு வேலையில் வெற்றி கிடைக்கும். இந்த நேரத்தில், அலுவலகத்தில் உங்கள் பணி பெரிதும் பாராட்டப்படுவதோடு, உயர் அதிகாரிகள் உங்களை நம்புவார்கள். புதிய வேலையைத் தேடுபவர்கள் முயற்சியைத் துரிதப்படுத்த வேண்டும், சிலர் புதிய தொழில் தொடங்கவும் இது சிறந்த நேரம். சொத்து விற்பது மற்றும் வாங்குவது தொடர்பான முடிவுகளை எடுக்கலாம். உங்கள் வாழ்க்கைத் துணையுடன் பிணைப்பை அதிகரிக்கும் நேரமிது. ஆரோக்கியமான வாழ்க்கை முறையைப் பின்பற்றி உடற்பயிற்சி செய்யத் தொடங்குங்கள்.

விருச்சிகம்
இந்த நேரம் தொழில் ரீதியாக மிகவும் நன்றாக இருக்கும். வியாபாரிகளுக்கு புதிய வழிகள் திறக்கப்பட்டு புதிய திட்டத்துடன் முன்னேறுவீர்கள். இந்த நேரத்தில், வணிகத்தில் முதலீடு செய்வதற்கான உங்கள் முடிவு சரியானதாக அமையும். புதிய சலுகை கிடைக்கவும் வாய்ப்பு உள்ளது. தேவையற்ற விஷயங்களில் நேரத்தையும் பணத்தையும் வீணாக்க வேண்டாம். உங்கள் தனிப்பட்ட வாழ்க்கையில் நீங்கள் தனிமை உணர்வைக் கொண்டிருப்பீர்கள். காய்ச்சல் மற்றும் தலைவலி உங்களைத் தொந்தரவு செய்யலாம்.

தனுசு
உங்கள் தன்னம்பிக்கை அதிகரிக்கும் மாதம் இது. அதனால் நீங்கள் தொழில் பாதுகாப்பின்மைகளை சமாளிக்க முடியும். உங்கள் வெற்றி சக போட்டியாளர்களை பொறாமைப்பட வைக்கலாம். அதனால் மிகவும் கவனமாக இருங்கள். வேலை மாற்றும் எண்ணம் இருந்தால் மிகவும் கவனத்துடன் செயல்பட வேண்டும். வியாபாரத்தில் நஷ்டம் ஏற்பட வாய்ப்பிருப்பதால், புதிய முடிவுகள் எடுப்பதைத் தவிர்க்கவும். பரஸ்பர நம்பிக்கையின்மையால் காதல் வாழ்க்கையில் ஏற்ற தாழ்வுகள் இருக்கலாம். குடும்பத்தில் இருந்த நெருக்கடிகள் கணிசமாக குறையும்.

மகரம்
உத்தியோகஸ்தர்களுக்கு அலுவலகத்தில் சில ஏற்ற தாழ்வுகள் ஏற்படலாம். உங்கள் எதிரிகளின் குறுக்கீடு காரணமாக உங்கள் வழியில் சில தடைகள் இருக்கலாம். புதிய நிறுவனத்தை உருவாக்கி வெற்றி பெறுவீர்கள். பணப் பலன்களைப் பெறுவீர்கள். முன்னோர் சொத்துக்களால் ஆதாயங்களைப் பெறுவீர்கள். உங்கள் காதல் துணையுடன் உங்கள் எதிர்காலத்தைத் திட்டமிட இது நல்ல நேரம். எந்த ஒரு முக்கிய முடிவையும் எடுப்பதற்கு முன்பு உங்கள் குடும்ப உறுப்பினர்களை கலந்தாலோசிக்க வேண்டும்.

கும்பம்
அலுவலகத்தில் இருந்த அனைத்து விதமான தவறான புரிதல்களும் இந்த காலக்கட்டத்தில் படிபடியாக நீங்கும். வேலையை மாற்றுவதில் நீங்கள் இறுதி முடிவை எடுக்கலாம். புதிய வணிக வழிகள் திறக்கப்படும். இது பொருளாதார நன்மைகளைத் தரும். தனிப்பட்ட வாழ்க்கையில், உங்கள் துணையுடன் தேவையற்ற சண்டை ஏற்படலாம். உங்கள் தவறை ஒப்புக்கொள்வது உங்களுக்கு உதவியாக இருக்கும். பழைய குடும்பப் பிரச்சனை இந்த நேரத்தில் தீரும். இதனால், மன நிம்மதியைப் பெறுவீர்கள். வயிறு மற்றும் தோல் சம்பந்தமான நோய்கள் ஏற்படலாம். எனவே, சற்று கவனமாக இருக்கவும்.

மீனம்
தொழிலில் உங்களின் உற்சாகம் அதிகமாகும். தனியார் நிறுவனத்தில் வேலை தேடுபவர்களுக்கு நிச்சயம் இந்த காலக்கட்டத்தில் வேலை கிடைக்கும். கிடைக்ககும் வாய்ப்பைப் பயன்படுத்தி கொள்ள தயாராக இருங்கள். தொழிலதிபர்கள் துணிச்சலான முடிவுகளை எடுப்பார்கள். ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்வது நல்ல வழியாக இருக்கும். நீங்களும் உங்கள் துணையும் சேர்ந்து சில மறக்கமுடியாத நேரத்தை அனுபவிப்பீர்கள். சிறிய காயங்கள் ஏற்படக்கூடும். எனவே, வெளியே செல்லும்போது கவனமாக இருங்கள்.

Share this article
A
Admin User

Lifestyle Journalist

A passionate writer covering health, wellness, and cultural topics for the Tamil community.

தினசரி ஒரு நற்சிந்தனை

...

உடல் எடை கணக்கீடு

ஆரோக்கியமான வாழ்விற்கு உங்கள் பிஎம்ஐ (BMI) அளவை அறிந்து கொள்வது அவசியம்.

கணக்கிடு (BMI Test)
திருக்குறள் (Kural of the Day)

...

...

இன்றைய விலை
தங்கம் (22k)
1 கிராம்
₹13,000
தங்கம் (24k)
1 கிராம்
₹13,650
வெள்ளி
1 கிராம்
₹250
அடுத்த பண்டிகை (Next Festival)

தேடல்...

00
Days to go
உங்கள் கருத்து (Poll)

மன அழுத்தத்தைக் குறைக்க நீங்கள் என்ன செய்கிறீர்கள்?

Get Daily Updates

Subscribe for the latest news in your inbox.

அடுத்து வாசிக்க
பிரார்த்தனையின் சக்தி: தினசரி வழிபாடு வாழ்க்கையை மாற்றியமைப்பது எப்படி?
வாசிக்க