Tuesday, March 24, 2026
Logo
Menu
Follow Us
ஆன்மீகம்

புதன் மீன ராசிக்கு செல்வதால் மிகவும் கவனமாக இருக்க வேண்டிய ராசிக்காரர்கள்...

A
Admin User
Journalist
March 23, 2022 6 min read 50 views
புதன் மீன ராசிக்கு செல்வதால் மிகவும் கவனமாக இருக்க வேண்டிய ராசிக்காரர்கள்...

ஜோதிடத்தில் புதன் ஒரு புனித கிரகமாக கருதப்படுகிறது. தகவல் தொடர்பு, நுண்ணறிவு மற்றும் வணிகத்தின் முக்கிய காரணியாக புதன் கருதப்படுகிறார். மிதுனம் மற்றும் கன்னி ராசிக்கு அதிபதியான புதன், மார்ச் 24, 2022 அன்று, மீன ராசியில் சஞ்சரிக்கிறார். புதன் அனைத்து கிரகங்களிலும் இளவரசன் அந்தஸ்தைப் பெற்றிருப்பவர். சில ராசிக்காரர்களுக்கு புதன் சஞ்சாரம் சாதகமாகவும், சில ராசிக்காரர்களுக்கு புதனின் ராசி மாற்றம் அசுப பலன்களை தரக்கூடியதாகவும் அமையும். இந்த நேரத்தில் எந்தெந்த ராசிக்காரர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதைப் பற்றி இந்த கட்டுரையில் கொடுக்கப்பட்டுள்ளது…

புதன் பெயர்ச்சி நேரம்

மார்ச் 24ம் தேதி காலை 11:05 மணிக்கு புதன் பெயர்ச்சி நடக்கும். இதன் போது புதன் மீன ராசியில் பிரவேசித்து 08 ஏப்ரல் 2022 அன்று மதியம் 12.06 வரை அந்த ராசியிலேயே இருப்பார். இதன் பிறகு புதன் மேஷ ராசிக்கு பெயர்ச்சி ஆவார்.

புதன் பெயர்ச்சியின் போது எச்சரிக்கையாக இருக்க வேண்டிய ராசிக்காரர்கள்

மேஷம்

புதனின் ராசி மாற்றம் மேஷ ராசிக்காரர்களுக்கு சற்று வேதனையான காலமாக இருக்கும். இந்த நேரத்தில் தொழில் வளர்ச்சியின் வேகம் குறையலாம். அலுவலகத்தில் சக ஊழியர்களுடன் கருத்து வேறுபாடுகள், தவறான புரிதல்கள் அதிகரிக்கலாம். செலவுகள் அதிகரிக்கவும் வாய்ப்பு உள்ளது.

கடகம்

கடக ராசிக்காரர்கள் இந்த காலகட்டத்தில் அதிக முயற்சிகளை மேற்கொள்ள வேண்டியிருக்கும். முதலாளியுடனான உறவுகள் மோசமடையக்கூடும். உங்கள் பேச்சையும் கோபத்தையும் கட்டுப்படுத்த வேண்டியது அவசியம். தொழில் ரீதியான பயணங்களில் தோல்வி ஏற்படலாம். இந்த நேரத்தில் எந்த வகையான முதலீட்டையும் தவிர்ப்பது நல்லது. செலவுகள் அதிகரிக்கக்கூடும். உடன்பிறந்தவர்களுடனான உறவில் ஏற்ற தாழ்வுகள் சாத்தியமாகும்.

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்கள் இந்த காலக்கட்டத்தில் எந்தவிதமான முதலீட்டையும் தவிர்க்க வேண்டும். இல்லையெனில் நீங்கள் பெரும் நஷ்டத்தை சந்திக்க நேரிடும். தனிப்பட்ட வாழ்க்கையில் வீட்டில் உள்ள பெரியவர்கள் உடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். இந்த பெயர்ச்சி காலத்தில் யாருக்கும் எந்த தொகையையும் கடன் கொடுப்பதைத் தவிர்க்கவும். உடல் ஆரோக்கியத்தில் சிறப்பு கவனம் செலுத்தினால் நல்லது.

கன்னி

கன்னி ராசிக்காரர்கள் தங்கள் தகுதியை நிரூபிக்க இந்த காலத்தில் மிக கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். இந்த பெயர்ச்சி உங்கள் ஆரோக்கியத்தில் மிகுந்த தொந்தரவை கொடுக்கக்கூடும். வியாபாரிகளுக்கு பெரும் நஷ்டம் வரலாம். எந்தவொரு முடிவையும் அவசரமாக எடுப்பதைத் தவிர்க்கவும். அனைத்து விஷயங்களிலும் மிகவும் கவனமாக இருக்க வேண்டியது அவசியம்.

விருச்சிகம்

பங்குச் சந்தையுடன் தொடர்புடையவர்கள் இந்த பெயர்ச்சி காலத்தில் பெரும் நஷ்டத்தை சந்திக்க நேரிடும். தனிப்பட்ட வாழ்க்கைப் பற்றி பேசினால், உங்கள் வாழ்க்கைத் துணையின் உணர்வுகளைப் புறக்கணிக்கும் தவறைச் செய்யாதீர்கள். மேலும், உங்கள் பேச்சில் சிறப்பு கவனம் செலுத்துங்கள்.

மீனம்

மீன ராசிக்காரர்களுக்கு புதனின் இந்த ராசி மாற்றம் சிறப்பாக அமையும். இருந்தாலும், இந்த நேரத்தில் உங்கள் நடத்தை உங்களை சார்ந்த பிறரைக் காயப்படுத்தலாம். திருமணமானவர்கள் மன உளைச்சலை சந்திக்க நேரிடும். உங்களுக்கு நெருக்கமானவர்களுடன் பிரிவு சாத்தியமாகும். பேசும் போது வார்த்தைகளை மிகவும் கவனமாக பயன்படுத்துவது நல்லது.

Share this article
A
Admin User

Lifestyle Journalist

A passionate writer covering health, wellness, and cultural topics for the Tamil community.

தினசரி ஒரு நற்சிந்தனை

...

உடல் எடை கணக்கீடு

ஆரோக்கியமான வாழ்விற்கு உங்கள் பிஎம்ஐ (BMI) அளவை அறிந்து கொள்வது அவசியம்.

கணக்கிடு (BMI Test)
திருக்குறள் (Kural of the Day)

...

...

இன்றைய விலை
தங்கம் (22k)
1 கிராம்
₹13,000
தங்கம் (24k)
1 கிராம்
₹13,650
வெள்ளி
1 கிராம்
₹250
அடுத்த பண்டிகை (Next Festival)

தேடல்...

00
Days to go
உங்கள் கருத்து (Poll)

மன அழுத்தத்தைக் குறைக்க நீங்கள் என்ன செய்கிறீர்கள்?

Get Daily Updates

Subscribe for the latest news in your inbox.

அடுத்து வாசிக்க
பிரார்த்தனையின் சக்தி: தினசரி வழிபாடு வாழ்க்கையை மாற்றியமைப்பது எப்படி?
வாசிக்க