Tuesday, March 24, 2026
Logo
Menu
Follow Us
சமையல்

காரைக்குடி ஸ்டைல் மாங்காய் சாதம்!!!

A
Admin User
Journalist
December 20, 2021 3 min read 50 views
காரைக்குடி ஸ்டைல் மாங்காய் சாதம்!!!

உங்களுக்கு மாங்காய் ரொம்ப பிடிக்குமா? மாங்காயை வச்சு ஊறுகாய் போடலாம், இல்லனா சாம்பார் வைக்கும் போது அதுல போடலாம். வேறு எதுவும் செஞ்சது இல்லனா, மாங்காய் சாதம் செய்து பாருங்கள். இது செய்யுறது ரொம்பவே சுலபம் தான். ஆனால். டேஸட் அட்டகாசமா இருக்கும். வாருங்கள் இப்போது மாங்காய் சாதம் எப்படி செய்வதென்று பார்க்கலாம்…

தேவையான பொருட்கள்

சாதம் – 1 கப்

துருவிய தேங்காய் – ¾ கப்

எண்ணெய் – தாளிப்பதற்கு

கொத்தமல்லி – ஒரு கையளவு

வேர்க்கடலை – அரை கப்

பச்சை மிளகாய் – 8

மாங்காய் – 1 (துருவியது)

கறிவேப்பிலை – சிறிது

பெருங்காயம் – சிறிதளவு

கடுகு – ½ டேபிள் ஸ்பூன்

கடலை பருப்பு – ½ டீஸ்பூன்

உளுத்தம் பருப்பு – ½ டீஸ்பூன்

வெந்தயம் பொடி– ¼ டீஸ்பூன்

மஞ்சள் தூள் – ½ டீஸ்பூன்

உப்பு – சுவைக்கேற்ப

செய்முறை

*முதலில் சாதம் தயார் செய்து வைத்துக்கொள்ளவும். (தாளிப்பதற்கு சிறிது நேரத்திற்கு முன்னதாக சாதம் தயார் செய்து வைத்தால் தான், சாதம் உதிரி உதிரியாக இருக்கும். இல்லையென்றால் குழைந்து விடும்.)

*அடுப்பில் வாணலியை வைத்து அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, பெருங்காயத்தூள், கறிவேப்பிலை சேர்த்து தாளித்துக் கொள்ளவும்.

*அத்துடன் வேர்க்கடலை சேர்த்து பொன்னிறமாக வறுத்துக் கொள்ளவும். மேலும், பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், மாங்காய், துருவிய தேங்காய் சேர்த்து வதக்கி கொள்ளவும்.

*இப்பொழுது சாதத்தை சேர்த்து நன்கு கிளறிக் கொள்ளவும். (சாதம் உடையாமல் மெதுவாக கிளறவும்)

*இறுதியாக வெந்தயப்பொடி, கொத்தமல்லி, உப்பு சேர்த்து கிளறி இறக்கினால் சுவையான மாங்காய் சாதம் தயார்.

*மாங்காய் சாதத்திற்கு கொத்தமல்லி சட்னி அருமையான சைடு டிஸா இருக்கும்…

Share this article
A
Admin User

Lifestyle Journalist

A passionate writer covering health, wellness, and cultural topics for the Tamil community.

தினசரி ஒரு நற்சிந்தனை

...

உடல் எடை கணக்கீடு

ஆரோக்கியமான வாழ்விற்கு உங்கள் பிஎம்ஐ (BMI) அளவை அறிந்து கொள்வது அவசியம்.

கணக்கிடு (BMI Test)
திருக்குறள் (Kural of the Day)

...

...

இன்றைய விலை
தங்கம் (22k)
1 கிராம்
₹13,000
தங்கம் (24k)
1 கிராம்
₹13,650
வெள்ளி
1 கிராம்
₹250
அடுத்த பண்டிகை (Next Festival)

தேடல்...

00
Days to go
உங்கள் கருத்து (Poll)

மன அழுத்தத்தைக் குறைக்க நீங்கள் என்ன செய்கிறீர்கள்?

Get Daily Updates

Subscribe for the latest news in your inbox.

அடுத்து வாசிக்க
தமிழ்நாட்டின் சுவைமிகுந்த சமையல் கலை: சிறந்த உணவுகளின் ஒரு முழுமையான பார்வை
வாசிக்க