Tuesday, March 24, 2026
Logo
Menu
Follow Us
சமையல்

கொங்குநாடு ஸ்டைல் சிக்கன் ப்ரை!!!

A
Admin User
Journalist
February 07, 2022 4 min read 59 views
கொங்குநாடு ஸ்டைல் சிக்கன் ப்ரை!!!

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை ஒவ்வொரு ஊரிலும் ஒவ்வொரு வகையான உணவுகளை சிறப்பு வாய்ந்தது. அதில், செட்டிநாடு ஸ்டைல் உணவுகளுக்கு அதிக ரசிகர்கள் இருக்கிறார்கள். அதேபோல் தான் கொங்குநாட்டு உணவு வகைகளுக்கும் பெரிய ரசிகர் பட்டாளம் இருக்கிறது. இந்த உணவுகளுக்கு இடையேயான வித்தியாசம் என்னவென்றால் அவற்றில் சேர்க்கப்படும் மசாலாக்கள் தான். அதிலும், கொங்குநாட்டு சிக்கன் ப்ரை ரெசிபியை யாராலும் அடித்துக் கொள்ள முடியாது. செய்வது மிகவும் சுலபம் தான், ஆனால் அதன் சுவை நாவிலேயே ஒட்டுக்கொள்ளும் படியானது. அதனை ஒருமுறை ருசித்து விட்டால் அடிக்கடி சாப்பிட மனம் ஆசைப்படும். சரி வாருங்கள் இப்போது கொங்குநாடு ஸ்டைல் சிக்கன் ப்ரை ரெசிபி செய்முறையைத் தெரிந்து கொள்வோம்…

தேவையான பொருட்கள்:

வறுத்து அரைப்பதற்கு…

  • பட்டை - 1 துண்
  • மிளகு - 1 டீஸ்பூன்
  • மல்லி - 3 டேபிள் ஸ்பூன்
  • சோம்பு - 1/2 டீஸ்பூன்
  • கசகசா - 1/2 டீஸ்பூன்
  • வரமிளகாய் - 10
  • கொப்பறை தேங்காய் துருவல் - 5 டேபிள் ஸ்பூன்

சிக்கனுக்கு…

  • சிக்கன் - அரை கிலோ
  • எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
  • வெங்காயம் - 1
  • மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
  • உப்பு - சுவைக்கேற்ப
  • கறிவேப்பிலை - ஒரு கையளவு
  • கொத்தமல்லி - சிறிது

செய்முறை:

  • முதலில் சிக்கனை மஞ்சள் தூள் சேர்த்து நன்கு நீர் ஊற்றி கழுவி எடுத்து வைத்து கொள்ளவும்.
  • இப்போது ஒரு கடாயை அடுப்பில் வைத்து, அதில் பட்டை, கிராம்பு, மிளகு, மல்லி, சோம்பு மற்றும் கசகசாவை சேர்த்து நன்கு மணம் வரும் வரை வறுத்து கொள்ளவும். அத்துடன் வரமிளகாய் மற்றும் கொப்பறை தேங்காய் சேர்த்து ஒரு நிமிடம் வறுத்து இறக்கி ஆறியதும் ஒரு மிக்சர் ஜாரில் போட்டு சிறிது நீர் ஊற்றி நன்கு பேஸ்ட் போல் அரைத்துக் கொள்ளவும்.
  • பின்னர் அதே கடாயை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்கி கொள்ளவும்.
  • இப்போது அதில் கழுவிய சிக்கன், மஞ்சள் தூள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து வதக்கவும்.
  • சிக்கனின் நிறம் வெள்ளையாக மாறியதும், அதில் அரைத்து வைத்துள்ள மசாலா கலவையைச் சேர்த்து கிளறவும்.
  • பின்னர், அடுப்பை மிதமான தீயில் வைத்து சிக்கனை நன்கு வேக விடவும்.
  • சிக்கன் நன்கு வெந்ததும் அதில் இருந்து எண்ணெய் தனியாக பிரிய ஆரம்பிக்கும்.
  • அப்போது, உங்களுக்கு கிரேவி பதத்தில் வேண்டுமானால், சிறிது நீர் ஊற்றிக் கொள்ளலாம். இல்லாவிட்டால், அதன் மேல் கறிவேப்பிலை மற்றும் கொத்தமல்லியைத் தூவி கிளறி இறக்கிடலாம்.
  • இப்போது கொங்குநாடு ஸ்டைல் சிக்கன் ப்ரை தயார்.

Image Courtesy: archanaskitchen

Share this article
A
Admin User

Lifestyle Journalist

A passionate writer covering health, wellness, and cultural topics for the Tamil community.

தினசரி ஒரு நற்சிந்தனை

...

உடல் எடை கணக்கீடு

ஆரோக்கியமான வாழ்விற்கு உங்கள் பிஎம்ஐ (BMI) அளவை அறிந்து கொள்வது அவசியம்.

கணக்கிடு (BMI Test)
திருக்குறள் (Kural of the Day)

...

...

இன்றைய விலை
தங்கம் (22k)
1 கிராம்
₹13,000
தங்கம் (24k)
1 கிராம்
₹13,650
வெள்ளி
1 கிராம்
₹250
அடுத்த பண்டிகை (Next Festival)

தேடல்...

00
Days to go
உங்கள் கருத்து (Poll)

மன அழுத்தத்தைக் குறைக்க நீங்கள் என்ன செய்கிறீர்கள்?

Get Daily Updates

Subscribe for the latest news in your inbox.

அடுத்து வாசிக்க
தமிழ்நாட்டின் சுவைமிகுந்த சமையல் கலை: சிறந்த உணவுகளின் ஒரு முழுமையான பார்வை
வாசிக்க