Tuesday, March 24, 2026
Logo
Menu
Follow Us
ஆரோக்கியம்

சியா விதைகளை அதிகமாக சாப்பிடுவது உடலில் என்னென்ன பிரச்சனைகளை ஏற்படுத்தும் தெரியுமா?

A
Admin User
Journalist
May 11, 2023 6 min read 74 views
சியா விதைகளை அதிகமாக சாப்பிடுவது உடலில் என்னென்ன பிரச்சனைகளை ஏற்படுத்தும் தெரியுமா?

Know the side effects of having too much chia seeds: சியா விதைகள் சால்வியா ஹிஸ்பானிகா தாவரத்தில் இருந்து கிடைக்கும் சிறிய கருப்பு நிற சாப்பிடக்கூடிய விதைகள். இவை புதினா செடியின் குடும்பத்தைச் சேர்ந்தது. சியா விதைகள் பெரும்பாலும் உடல் எடையை குறைக்கும் நன்மைகளை கொண்டுள்ளது. ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்த, சியா விதைகளை நீரில் ஊற வைத்தால், அவை அளவில் பெரிதாக மாறிடும். ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும் எதுவாக இருந்தாலும் அதை அளவோடு சாப்பிட்டால் மட்டும் தான் நல்லது. அளவிற்கு அதிகமாக சாப்பிட்டால் அதன் பக்கவிளைவுகளும் மோசமானது தான். அவற்றைப் பற்றி தான் இப்போது தெரிந்து கொள்ள போகிறோம்…

செரிமான பிரச்சனை

சியா விதைகளை அதிகமாக உட்கொள்வது ஒருவரின் செரிமான செயல்பாட்டில் சிக்கலை உண்டு பண்ணும். சியா விதைகளில் நார்ச்சத்து நிறைந்துள்ளதால், அதை அதிக அளவில் உட்கொள்ளும் போது உடல் சீரண செயல்பாடு கடினமாகிவிடும். சியா விதைகளை அதிகமாக உட்கொண்டால், வயிற்றுப்போக்கு, வீக்கம் மற்றும் வயிற்றுப் பிடிப்பு போன்ற பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.

இரத்த அழுத்த பிரச்சனையைத் தூண்டும்

சியா விதைகளில் இருக்கும் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் இரத்தத்தை மெலிதாக்கும் தன்மை கொண்டவை. இரத்த அழுத்தத்திற்கு மாத்திரை எடுத்து கொள்பவர்கள் அதிக அளவில் சியா விதைகளைத் தொடர்ந்து உட்கொள்வது உயர் இரத்த அழுத்த மருந்துகளின் செயல்பாடில் தலையிடலாம். எனவே, மருத்துவரின் ஆலோசனையின் பேரில் குறித்த அளவு சியா விதைகளை உட்கொள்ள அறிவுறுத்தப்படுகிறது.

இரத்த சர்க்கரை அளவை குறைக்கும்

சியா விதைகளில் நார்ச்சத்து நிறைந்துள்ளதால், அது சர்க்கரையை உறிஞ்சும் குடலின் திறனை குறைத்து, அதன் விளைவாக இரத்த சர்க்கரை அளவைக் குறைத்திடும். சியா விதைகளின் இந்த பண்பு ஏற்கனவே மருந்து மற்றும் இன்சுலின் எடுத்துகொள்ளும் நீரிழிவு நோயாளிகளுக்கு பிரச்சனையாக இருக்கலாம். நிறைய சியா விதைகளை சாப்பிடுவதால், அவை இரத்த சர்க்கரை அளவை மாற்றிடலாம்.

சரி, ஒரு நாளைக்கு எவ்வளவு சியா விதைகளை உட்கொள்ளலாம்?

சுகாதார அறிக்கைகளின் அடிப்படையில், ஒரு நாளைக்கு 1 முதல் 1.5 டீஸ்பூன் அளவிற்கு சியா விதைகள் எடுத்து கொள்வது, உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களைப் பெற போதுமானதாக இருக்கும். சியா விதைகளில் ஒமேகா 3 கொழுப்பு அமிலம், நார்ச்சத்து, புரதம், கால்சியம், பாஸ்பரஸ் மற்றும் துத்தநாகம் போன்றவை நிறைந்துள்ளது.

சியா விதைகளை எப்படி சாப்பிடுவது?

சியா விதைகள், தனக்கென தனிச்சுவை எதையும் கொண்டிருக்கவில்லை. எனவே, அவற்றை தண்ணீரில் ஊறவைத்து காலை எழுந்ததும் முதலில் குடிக்கவும். சியா விதைகளைப் பயன்படுத்தி நீங்கள் புட்டிங் செய்தோ அல்லது பழச்சாறுகளில் கலந்தோ சாப்பிடலாம்.

சியா விதைகளின் நன்மைகள்

சியா விதைகள் மிகவும் சத்து நிறைந்தவை. இந்த சிறிய விதைகளில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன. 2 டீஸ்பூன் சியா விதைகளில் 138 கலோரிகள், 4.7 கிராம் புரதம், 8.7 கிராம் கொழுப்புச்சத்து மற்றும் 9.8 கிராம் நார்ச்சத்து உள்ளது. இரும்பு, மக்னீசியம், பாஸ்பரஸ், துத்தநாகம், தயாமின் மற்றும் நியாசின் போன்றவையும் இதில் நிறைந்துள்ளது. இதில் உள்ள நார்ச்சத்து உடல் எடை இழப்புக்கு நல்ல உணவாக அமைகிறது.

உடலில் கொழுப்பைக் குறைக்க உணவில் இவற்றை சேர்த்துக்கோங்க…

தினமும் சூடான தண்ணில குளிச்சா மாரடைப்பு ஏற்படும் அபாயம் இருக்காம்!

மாதவிடாய் வலியை 10 நிமிடத்தில் போக்கிடும் அற்புத கை வைத்தியம்!!!

Share this article
A
Admin User

Lifestyle Journalist

A passionate writer covering health, wellness, and cultural topics for the Tamil community.

தினசரி ஒரு நற்சிந்தனை

...

உடல் எடை கணக்கீடு

ஆரோக்கியமான வாழ்விற்கு உங்கள் பிஎம்ஐ (BMI) அளவை அறிந்து கொள்வது அவசியம்.

கணக்கிடு (BMI Test)
திருக்குறள் (Kural of the Day)

...

...

இன்றைய விலை
தங்கம் (22k)
1 கிராம்
₹13,000
தங்கம் (24k)
1 கிராம்
₹13,650
வெள்ளி
1 கிராம்
₹250
அடுத்த பண்டிகை (Next Festival)

தேடல்...

00
Days to go
உங்கள் கருத்து (Poll)

மன அழுத்தத்தைக் குறைக்க நீங்கள் என்ன செய்கிறீர்கள்?

Get Daily Updates

Subscribe for the latest news in your inbox.

அடுத்து வாசிக்க
ஆரோக்கியத்திற்கு சிறந்தது சைவமா அல்லது அசைவமா? இதோ முழுமையான அலசல்!
வாசிக்க