Tuesday, March 24, 2026
Logo
Menu
Follow Us
ஆரோக்கியம்

க்ரீன் காபி கேள்விப்பட்டிருக்கீங்களா? இதோட நன்மைகள சொன்னா நீங்களே ஆச்சரியப்படுவீங்க...

A
Admin User
Journalist
June 07, 2022 7 min read 60 views
க்ரீன் காபி கேள்விப்பட்டிருக்கீங்களா? இதோட நன்மைகள சொன்னா நீங்களே ஆச்சரியப்படுவீங்க...

உலகம் முழுவதும் காபி குடிக்கும் பழக்கம் என்பது மிகவும் அதிகரித்து வருகிறது. நீங்கள் ஒரு நாளைக்கு ஒன்று அல்லது இரண்டு கப் காபி குடித்தால், அது நன்றாக இருக்கும். ஆனால் அதற்கு அதிகமாக காஃபின் உட்கொள்வது உங்களது ஆரோக்கியத்திற்கு மிகவும் தீங்கு விளைவிக்கும். சிலருக்கு காபி குடித்தால் தான் அன்றைய தினமே நன்றாக இருக்கும். ஒரு சிலர், ஒவ்வொரு மணி நேரத்திற்கும் ஒரு முறை காபி குடிப்பார்கள். அப்படிப்பட்டவர்கள் சாதாரண காபிக்கு பதிலாக க்ரீன் காபி குடிக்கலாம். க்ரீன் காபி குடிப்பது உங்கள் ஆரோக்கியத்தைப் பாதிக்காது. ஏனெனில் அதில் உள்ள காஃபின் அளவு மிக மிக குறைவு. இதை குடிப்பதன் மூலம் 24 மணி நேரமும் உடலை ஆரோக்கியத்துடன் வைத்திருக்க உதவும். சரி இப்போது க்ரீன் காபி என்றால் என்ன, அதிலுள்ள மருத்துவ குணங்கள் மற்றும் அதை எப்படி செய்வது என்பதைப் பற்றி இந்த கட்டுரையில் விரிவாக தெரிந்து கொள்வோம்…

க்ரீன் காபி

க்ரீன் காபி என்பது காஃபிள பழங்களிலிருந்து எடுக்கப்பட்ட வறுக்கப்படாத காபி கொட்டைகள் ஆகும். வறுத்த காபியை விட வறுக்காத பச்சை காபியில் அதிக குளோரோஜெனிக் அமிலம் உள்ளது. க்ரீன் காபியில் உள்ள குளோரோஜெனிக் அமிலம் ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டதாக கருதப்படுகிறது. இது இரத்த நாளங்களைச் சுத்தப்படுத்தி, இரத்த அழுத்தத்தைக் குறைத்திட உதவுகிறது. பச்சை காபி வறுக்கப்படாத மற்றும் முற்றிலும் பச்சையாக இருக்கும் காபி கொட்டைகளில் இருந்து தயாரிக்கப்படுகிறது. மேலும் வழக்கமான காபியின் சுவையில் இருந்து வேறுபட்ட லேசான மற்றும் அதிக 'மூலிகை' சுவையைக் கொண்டிருக்கும்.

க்ரீன் காபியின் ஆரோக்கிய நன்மைகள்

புத்துணர்ச்சி

க்ரீன் காபி கொட்டைகளில் குளோரோஜெனிக் அமிலம் உள்ளது. இந்த வகை காபியை உட்கொள்வதன் மூலம், உங்கள் வளர்சிதை மாற்றம் சரியாக இருக்கும். வளர்சிதை மாற்ற விகிதத்தின் சரியான அளவு காரணமாக, நீங்கள் எப்போது நேர்மறை ஆற்றல் மற்றும் புத்துணர்ச்சியுடன் இருப்பீர்கள். இதன் மூலம், நீங்கள் எந்த வேலையைச் செய்தாலும், அதில் உங்களால் சரியாக கவனம் செலுத்த முடியும்.

எடையை கட்டுப்படுத்தும்

க்ரீன் காபி கொட்டைகளில் வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்துள்ளன. இது நமது உடலில் உள்ள ஊட்டச்சத்துக்களின் அளவை சீராக பராமரிக்க உதவுகிறது. இது உங்கள் எடையைக் கட்டுக்குள் வைத்திருக்கும். க்ரீன் காபியை தொடர்ந்து குடிப்பதன் மூலம், உங்கள் உடல் எடை அதிகரிப்பதைத் தடுத்து நிறுத்தலாம்.

நிறைந்த ஆன்டிஆக்ஸிடன்ட்கள்

க்ரீன் காபி கொட்டைகளில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன. இது உடலில் ஒவ்வொரு தீங்கு விளைவிக்கும் விளைவுகளிலிருந்தும் உங்களை பாதுகாத்து ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும். க்ரீன் காபி கொட்டைகள் வறுக்கப்படாதது என்பதால் 100% ஆரோக்கியமானது.

இரத்த அழுத்த கட்டுப்பாடு

க்ரீன் காபி உங்கள் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துகிறது. உயர் இரத்த அழுத்தம் இருப்பது மாரடைப்பு, நாள்பட்ட சிறுநீரக செயலிழப்பு போன்ற பிரச்சனைகளுக்கு காரணமாக இருக்கும். க்ரீன் காபி கொட்டைகள் பிளேட்லெட்டுகளை உருவாக்க உதவுகிறது. இது கொலஸ்ட்ராலை அதிகரிக்க விடாது மற்றும் இரத்த அழுத்தத்தையும் கட்டுக்குள் வைத்திருக்கும்.

க்ரீன் காபி தயாரிக்கும் முறை

  • ஒரு டம்ளரில் 1/2 முதல் 1 டீஸ்பூன் அளவிற்கு பச்சை காபி பொடியை எடுத்துக் கொள்ளுங்கள்.
  • அதில் 1 கப் வெந்நீர் சேர்க்கவும்.
  • இது 5-6 நிமிடங்கள் அப்படியே முடி வைத்திடவும்.
  • வேண்டுமென்றால், நல்ல சுவைக்காக சர்க்கரை மற்றும் ஒரு சிட்டிகை இலவங்கப்பட்டை பொடியை சேர்த்தும் குடிக்கலாம்.

குறிப்பு

கடைகளில் க்ரீன் காபி பொடி அல்லது க்ரீன் காபி கொட்டைகள் இரண்டுமே கிடைக்கிறது. காபி கொட்டைகள் வாங்கினால் அதனை ஒரு நாள் இரவு முழுவதும் நீரில் ஊற வைத்து அதனை மறுநாள் நன்கு கொதிக்க வைத்து குடிக்கலாம். காபி பொடி அல்லது கொட்டை எதை வேண்டுமானாலும் பயன்படுத்தலாம்.

Share this article
A
Admin User

Lifestyle Journalist

A passionate writer covering health, wellness, and cultural topics for the Tamil community.

தினசரி ஒரு நற்சிந்தனை

...

உடல் எடை கணக்கீடு

ஆரோக்கியமான வாழ்விற்கு உங்கள் பிஎம்ஐ (BMI) அளவை அறிந்து கொள்வது அவசியம்.

கணக்கிடு (BMI Test)
திருக்குறள் (Kural of the Day)

...

...

இன்றைய விலை
தங்கம் (22k)
1 கிராம்
₹13,000
தங்கம் (24k)
1 கிராம்
₹13,650
வெள்ளி
1 கிராம்
₹250
அடுத்த பண்டிகை (Next Festival)

தேடல்...

00
Days to go
உங்கள் கருத்து (Poll)

மன அழுத்தத்தைக் குறைக்க நீங்கள் என்ன செய்கிறீர்கள்?

Get Daily Updates

Subscribe for the latest news in your inbox.

அடுத்து வாசிக்க
ஆரோக்கியத்திற்கு சிறந்தது சைவமா அல்லது அசைவமா? இதோ முழுமையான அலசல்!
வாசிக்க