Tuesday, March 24, 2026
Logo
Menu
Follow Us
ஆன்மீகம்

மீனத்தில் உதயமாகும் புதனால் உங்கள் வாழ்வில் ஏற்பட போகும் திருப்பங்கள்...

A
Admin User
Journalist
April 08, 2022 8 min read 56 views
மீனத்தில் உதயமாகும் புதனால் உங்கள் வாழ்வில் ஏற்பட போகும் திருப்பங்கள்...

நவகிரகங்களில் புதன் அறிவாற்றல், கல்வி மற்றும் வணிக ஸ்தானத்தின் அதிபதியாக கருதப்படுகிறது. ஜோதிடர்களின் கூற்றுப்படி, புதனின் அருள் இல்லாமல், கல்வித் துறையில் எவராலும் சுப பலன்களைப் பெற்றிட முடியாது. அத்தகைய புத பகவான் இப்போது மீன ராசியில் உதயமாகிறார. மீன ராசியின் அதிபதி குரு பகவான். அத்தகைய சூழ்நிலையில், மீனத்தில் புதனின் தாக்கம் குறைந்தே காணப்படும். இதனால் தான், மீனத்தில் புதன் சஞ்சாரம் செய்யும் போது சில ராசிக்காரர்களுக்கு சுப பலன்கள் கிடைக்காமல் போவதற்கு காரணம். ஏப்ரல் 8, 2022 வெள்ளிக்கிழமையான இன்று மீன ராசியில் புதன் உதயமாகிறார். இதனால், 12 ராசிகளுக்கும் உண்டாக போகும் பலன்கள் என்னென்ன என்பதை இப்போது தெரிந்து கொள்வோம்…

மேஷம்
புதனின் தற்போதைய நிலை காரணமாக உங்கள் தொழிலில் சில சிரமங்களைச் சந்திக்க நேரிடும். இதனால், உங்கள் தன்னம்பிக்கை குறையலாம். வியாபாரிகள் லாபத்திற்காக சிறிது காலம் காத்திருக்க வேண்டியிருக்கும். திருமணமானவர்களுக்கு தங்கள் வாழ்க்கைத் துணையுடனான உறவில் சில பிரச்சனைகள் வரலாம்.

ரிஷபம்
வியாபாரிகளுக்கு இந்த காலத்தில் சில பொன்னான வாய்ப்புகள் தேடி வரக்கூடும். படித்து முடித்துவிட்டு, வேலை தேடுபவர்களுக்கு நல்ல செய்தி கிடைக்கும். இந்த நேரத்தில் உங்கள் வருமானமும் அதிகரிக்கக்கூடும். குடும்பத்தினரின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும்.

மிதுனம்
மீனத்தில் புதன் உச்சம் பெறுவதால் எடுத்த காரியம் அனைத்திலும் நீங்கள் வெற்றி பெறுவீர்கள். உங்களின் வசதி வாய்ப்புகள் அதிகரிக்கும். வியாபாரிகள் படிப்படியாக லாபத்தைப் பெறுவார்கள். புதிதாக ஏதேனும் சொத்து வாங்க விரும்பினால், இந்த காலக்கட்டத்தில் நல்ல வாய்ப்பு கிடைக்கும்.

கடகம்
இந்த நேரத்தில் உத்தியோகஸ்தர்களுக்கு பணிச்சுமை அதிகரிக்கலாம். நீங்கள் வேலையை மாற்ற திட்டமிட வேண்டியிருக்கும். இந்த மாற்றம் உங்களுக்கு ஒத்துவராது என்றாலும் உத்தியோகத்தில் சில மாற்றம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. இதுதவிர, இந்த காலக்கட்டத்தில் பண விஷயத்தில் நீங்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.

சிம்மம்
சிம்ம ராசிக்காரர்கள் தங்களது தற்போதைய தொழிலில் திருப்தி அடைய மாட்டார்கள். தேவையில்லாத மனகுழப்பத்தால் வியாபாரத்தில் கவனம் செலுத்த முடியாமல் போகலாம். ஆனால், இந்த நேரம் வியாபாரத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டிய நேரம். தனிப்பட்ட வாழ்க்கையில், உங்கள் உறவுகளுக்கிடையே விரிசல் ஏற்படலாம். உத்தியோகஸ்தர்களுக்கு பணிச்சுமை அதிகரிக்கும்.

கன்னி
புதனின் இந்த நிலை உங்கள் தொழிலில் மிகப்பெரிய நல்ல பலன்களைத் தரப்போகிறது. இந்த நேரத்தில் கடின உழைப்பால் பெரிய பதவி உயர்வையும் பெறலாம். தொழில் துறை சார்ந்தவர்களுக்கு புதிய வாய்ப்புகள் தேடி வரக்கூடும். காதல் வாழ்க்கைக்கு இது ஒரு சிறந்த நேரம். விரைவில் காதல் கைக்கூடும்.

துலாம்
இந்த நேரத்தில் விடா முயற்சியுடன் தொடர்ந்து கடினமாக உழைக்க வேண்டும். வேலையில் முன்னேற்றத்தை அடைய நீங்கள் காத்திருக்க வேண்டியவது அவசியம். இதுதவிர, அலுவலகத்தில் உங்கள் மீதான அழுத்தமும் அதிகரிக்கும். சக ஊழியர்கள் உங்களுக்கு கடுமையான போட்டியைக் கொடுக்கலாம். காதல் வாழ்க்கைப் பற்றி பேசினால், இது மோசமான காலமாக அமையும். எதிலும் நிதானம் தேவை.

விருச்சிகம்
இந்த காலகட்டத்தில் வியாபாரிகளுக்கு தங்களது தொழிலில் பல தடைகளைச் சந்திக்க நேரிடும். நீங்கள் கடினமாக உழைத்த போதிலும், வேலையில் அவ்வளவாக பாராட்டப்பட மாட்டீர்கள். வியாபாரிகள் திடீர் நஷ்டத்தை சந்திக்க நேரிடும். எக்காரணம் கொண்டும் மனஉறுதியை மட்டும் இழக்காதீர்கள்.

தனுசு
புதனின் தற்போதைய நிலை தனுசு ராசிக்காரர்களுக்கு வேலையில் அழுத்தத்தை உண்டு பண்ணும். கடினமாக உழைத்தாலும், அங்கீகாரம் கிடைப்பது கடினமாக இருக்கும். இந்த நேரம் உங்களுக்கு சிறப்பாக எதுவும் நடக்காது. திருமணமானவர்கள் தங்கள் வாழ்க்கைத் துணையுடன் அனுசரித்து செல்ல முயற்சி செய்வது நல்லது.

மகரம்
மகர ராசிக்காரர்களின் தொழிலில் திடீரென பல தடைகள் தோன்றலாம். இந்த நேரத்தில், லாபத்தை எதிர்பார்க்கிறீர்கள் என்றால் சிறிது காலம் காத்திருக்க வேண்டியிருக்கும். வியாபாரிகளுக்கு இந்த காலக்கட்டத்தில் சுமாரான பலன்கள் மட்டுமே கிடைக்கும். இதுதவிர, எதிரிகளால் நீங்கள் கடுமையான போட்டியைச் சந்திக்க நேரிடலாம். வீண் செலவுகள் அதிகமாக இருக்கும்.

கும்பம்
புதனின் தாக்கத்தால், உத்தியோகஸ்தர்களுக்கு வேலை சம்பந்தமாக வெற்றி பெறுவதில் சிறிது தடை ஏற்படலாம். வியாபாரிகள் தொழில் வாழ்க்கையில் அழுத்தத்தை உணரலாம். வர்த்தகர்கள் தங்களின் தற்போதைய உத்தியை மாற்றிக்கொள்ள வேண்டும். திருமணமானவர்களுக்கு, தங்கள் வாழ்க்கைத் துணையுடன் தகராறு ஏற்படலாம்.

மீனம்
உத்தியோகஸ்தர்கள் தற்போதைய வேலையில் வெற்றி பெற புத்திசாலித்தனத்தைப் பயன்படுத்த வேண்டும். இந்த நேரத்தில் வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும். பணவரவு சிறப்பாக இருக்கும். மீன ராசிக்காரர்கள் தங்கள் வாழ்க்கைத் துணையுடன் நல்லுறவைப் பேணுவார்கள்.

Share this article
A
Admin User

Lifestyle Journalist

A passionate writer covering health, wellness, and cultural topics for the Tamil community.

தினசரி ஒரு நற்சிந்தனை

...

உடல் எடை கணக்கீடு

ஆரோக்கியமான வாழ்விற்கு உங்கள் பிஎம்ஐ (BMI) அளவை அறிந்து கொள்வது அவசியம்.

கணக்கிடு (BMI Test)
திருக்குறள் (Kural of the Day)

...

...

இன்றைய விலை
தங்கம் (22k)
1 கிராம்
₹13,000
தங்கம் (24k)
1 கிராம்
₹13,650
வெள்ளி
1 கிராம்
₹250
அடுத்த பண்டிகை (Next Festival)

தேடல்...

00
Days to go
உங்கள் கருத்து (Poll)

மன அழுத்தத்தைக் குறைக்க நீங்கள் என்ன செய்கிறீர்கள்?

Get Daily Updates

Subscribe for the latest news in your inbox.

அடுத்து வாசிக்க
பிரார்த்தனையின் சக்தி: தினசரி வழிபாடு வாழ்க்கையை மாற்றியமைப்பது எப்படி?
வாசிக்க