ஆன்மீகம்

மேஷத்திற்கு பெயர்ச்சியாகும் சுக்கிரனால் 12 ராசிகளிலும் ஏற்படப்போகும் மாற்றங்கள்...

A
Admin User
1 min read
மேஷத்திற்கு பெயர்ச்சியாகும் சுக்கிரனால் 12 ராசிகளிலும் ஏற்படப்போகும் மாற்றங்கள்...
Advertisement
Editor's Choice
Affiliate link

FLYNGO Touch Control LED Night Light Table Lamp for Bedroom, Living Room, and Study, with Adjustable Brightness, USB Rechargeable (A1)Plastic ,White

Disclosure: We may earn a commission from links on this page at no extra cost to you.

ஜோதிட சாஸ்திரத்தில், கிரகங்களின் ராசி மாற்றம் என்பது மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. ஒவ்வொரு ராசிக்கும் என கிகரங்கள் உள்ளதால் அவற்றின் மாற்றம் அனைத்து ராசிகளிலுமே தாக்கத்தை உண்டு பண்ணும். கிரக பெயர்ச்சியானது சில ராசிக்காரர்களுக்கு சுப பலன்களையும், சிலருக்கு அசுப பலன்களையும் தரக்கூடும். கடந்த மே 16ம் தேதி அன்று சூரியன் தனது ராசியை மாற்றி ரிஷப ராசிக்கு பிரவேசித்தால். அடுத்ததாக, செவ்வாய் பகவான் மீன ராசியில் பிரவேசித்தார். அதன்பிறகு, இப்போது சுக்கிரன் தனது ராசியை மாற்றி மேஷத்தில் சஞ்சரிக்கிறார். சூரியன், செவ்வாய்க்கு பிறகு சுக்கிரன் தனது ராசியை மாற்றுவது சில ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டத்தைத் தரப்போகிறது. சுக்கிர பெயர்ச்சியால் 12 ராசிகளிலும் ஏற்படப்போகும் மாற்றங்களைப் பற்றி தான் இப்போது இந்த கட்டுரையில் தெரிந்து கொள்ள போகிறோம்…

மேஷம்

மேஷ ராசிக்காரர்களுக்கு குடும்ப வாழ்க்கை மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும். குழந்தையின் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். வியாபாரிகளுக்கு வேலையில் சில சிரமங்கள் வரலாம். நண்பர்களின் முழு ஆதரவையும் பெறுவீர்கள். நீங்கள் ஆடைகளைப் பரிசாக அளிக்கலாம். குழந்தையின் மூலம் மகிழ்ச்சி அதிகரிக்கும். உங்கள் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்த பழகி கொள்ளுங்கள். வாழ்க்கைத் துணையுடன் உங்களுக்கு கருத்து வேறுபாடுகள் இருக்கலாம்.

ரிஷபம்

நிதானமாக இருக்க வேண்டிய நேரமிது. உங்கள் மனதில் ஏமாற்றமும், அதிருப்தியும் ஏற்படலாம். உத்தியோகஸ்தர்களுக்கு மாற்றம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம். பதவி உயர்வும் உங்களுக்கு கிடைக்கலாம். குழந்தைக்கு உடல்நலப் பிரச்சனைகள் இருக்கலாம். உத்தியோகஸ்தர்களுக்கு இந்த நேரத்தில் நம்பிக்கை குறையும். நண்பர்களின் ஆதரவைப் பெறுவீர்கள். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். உடன்பிறந்தோருடன் கருத்து வேறுபாடுகள் இருக்கலாம்.

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களுக்கு இந்த நேரம் மனம் கலங்கும். மாணவர்களுக்கு தேர்வில் வெற்றி பெறுவார்கள். தாயின் உடல்நிலையில் அக்கறை காட்டுங்கள். குடும்பத்தினரின் முழு ஆதரவு கிடைக்கும். அதிகப்படியான கோபத்தைத் தவிர்க்கவும். பழைய நண்பர்களின் சந்திப்பு கிடைக்கும். வாழ்க்கைத் துணைக்கு உடல்நலக் குறைபாடுகள் இருக்கலாம். சுயமாக யோசித்து செயல்படுங்கள். உத்தியோகஸ்தர்களுக்கு அலுவலகத்தில் உயர் அதிகாரிகளுடன் கருத்து வேறுபாடுகள் வரலாம்.

கடகம்

அதிருப்தியான தருணங்களை இந்த நேரத்தில் நீங்கள் சந்திக்க எதிர்கொள்ள வேண்டியிருக்கும். மாணவர்களுக்கு உயர்கல்வி கனவில் சில குறுக்கீடுகள் ஏற்படலாம். குடும்ப உறுப்பினர்களிடமிருந்து எதிர்பார்த்த பணம் உதவியைப் பெறலாம். உங்களுக்கு, இசையின் மீது நாட்டம் அதிகரிக்கும். குழந்தைகளால் கஷ்டப்படும் சூழல் ஏற்படலாம். பெற்றோரின் ஆதரவைப் பெறுவீர்கள். மன கவலையால் உங்களுக்கு ஆரோக்கிய விஷயத்தில் கவலையடையலாம்.

சிம்மம்

சிம்ம ராசி மாணவர்களுக்கு இந்த நேரத்தில் திடீரென படிப்பதில் ஆர்வம் அதிகரிக்கும். கல்விப் பணிகளில் உங்களுக்கு பெரிய வெற்றி கிடைக்கும். குடும்பத்தில் திடீர் சுபகாரியங்களால் செலவுகள் அதிகரிக்கக்கூடும். உங்கள் வருமானமும் உயரும். மேலும், நீங்கள் நண்பர்களின் ஆதரவைப் பெறுவீர்கள். உங்கள் ஆரோக்கியத்தில் கவனமாக இருங்கள். அலுவலகத்தில் சிரமங்கள் இருக்கலாம். இந்த நேரத்தில் உங்கள் சேமிப்பும் குறையலாம்.

கன்னி

உத்தியோகஸ்தர்களுக்கு முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் அதிகரிக்கக்கூடும். உங்கள் வருமானம் உயரும். வாகன யோகத்தையும் நீங்கள் பெறலாம். மேலும், நீங்கள் நல்ல நிலையில் இருப்பீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு அலுவலகத்தில் கூடுதல் பொறுப்புகள் வழங்கப்படலாம். கவனக்குறைவால் நீங்கள் சிரமங்களையும் சந்திக்க நேரிடலாம். வேலைப்பளு அதிகமாக இருக்கும். இருப்பினும், மன நிம்மதி ஏற்படும்.

துலாம்

இந்த நேரத்தில் நீங்கள் தன்னம்பிக்கையுடன் இருக்க வேண்டியது அவசியம். பொறுமையாக இருந்து தொடர்ந்து முயற்சி செய்யுங்கள். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். நண்பரிடம் இருந்து பண உதவியைப் பெறலாம். இதனால் உங்கள் நம்பிக்கை அதிகரிக்கும். உணவின் மீது ஆர்வம் அதிகரிக்கும். நீங்கள் சில பழைய நண்பர்களைச் சந்திக்கலாம். திடீர் லாபத்தால் நிதி நிலையும் முன்னேறும். இதனால் உங்கள் மனம் அமைதியாக இருக்கும்.

விருச்சிகம்

மனதில் விரக்தியும், அதிருப்தியும் ஏற்படலாம். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறலாம். வேலைப்பளு அதிகமாக இருக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் அதிகரிக்கக்கூடும். வருமானமும் உயர வாய்ப்புள்ளது. குடும்ப வாழ்க்கை மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு அலுவலகத்தில் கடின உழைப்பு மிகுதியாக இருக்கும். மாணவர்களுக்கு கல்விப் பணி மேம்படும்.

தனுசு

தனுசு ராசிக்காரர்களுக்கு ஆன்மீக பணிகளில் ஈடுபாடு அதிகரிக்கக்கூடும். இந்த நேரத்தில் குடும்ப வாழ்க்கை கடினமாக இருக்கலாம். உங்களுக்கு வாகன யோகம் கிடைக்கக்கூடும். நீங்கள் நல்ல நிலையில் இருப்பீர்கள். முழு நம்பிக்கையுடன் தொடர்ந்து முன்னேறுவீர்கள். உடன்பிறந்தோரின் முழு ஆதரவைப் பெறுவீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு அலுவலகத்தில் பதவி உயர்வுக்கு வழி பிறக்கும். உங்களுக்கு நம்பிக்கையும் விரக்தியும் கலந்த உணர்வுகளாக இருக்கும்.

மகரம்

உங்களுக்கு சில சமயம் அதிருப்தியும் - சில சமயம் திருப்தியும் என கலவையான உணர்வுகள் ஏற்படலாம். எனவே, மனதை மகிழ்ச்சியாக வைத்து கொள்ள முயலுங்கள். இதனால், வேலையில் கவனக்குறைவைத் தவிர்த்திடலாம். ஆடை போன்றவற்றிற்கான நீங்கள் கூடுதலாக செலவு செய்ய நேரிடும். நண்பர்களின் உதவியால் புதிய தொழில் வாய்ப்புகள் கிடைக்கும். உங்கள் தன்னம்பிக்கை குறைவதால், மனம் சஞ்சலமாக இருக்கும். பிறருடன் பேசும் போது பொறுமையாக இருங்கள். அதிகப்படியான கோபத்தைத் தவிர்க்கவும்.

கும்பம்

அரசு வேலைக்கான போட்டித் தேர்வுகள் மற்றும் நேர்காணல்களில் நீங்கள் நிச்சயம் வெற்றி பெறுவீர்கள். ஆட்சி நிர்வாகத்தில் இருந்து உங்களுக்கு உதவி கிடைக்கும். திடீர் பயணங்களால், செலவுகள் அதிகரிக்கலாம். உங்கள் ஆரோக்கியத்தில் கவனமாக இருங்கள். மாணவர்களுக்கு படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும். கல்வி மற்றும் ஆராய்ச்சி பணிகளில் உங்களுக்கு மகிழ்ச்சியான முடிவுகள் இருக்கும். ஆனாலும், பொறுமையாக இருங்கள்.

மீனம்

இந்த நேரத்தில் உங்களுக்கு மனம் அமைதி இருக்கும். இருப்பினும், உங்களின் தன்னம்பிக்கை குறையும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறுவதற்கான வாய்ப்புள்ளது. பாதகமான சூழலில் குடும்பத்தினரின் ஆதரவு கிடைக்கும். அதிகப்படியான கோபத்தையும் ஆர்வத்தையும் தவிர்ப்பது நல்லது. உங்களின் பொறுமை குறையவும் வாய்ப்புள்ளது. இருப்பினும் அவசரப்பட வேண்டாம். வழிபாட்டு தலங்களுக்கு யாத்திரை செல்ல நேரிடலாம். குழந்தைக்கு உடல்நலப் பிரச்சனைகள் இருக்கலாம். எனவே, அக்கறையுடன் பார்த்து கொள்ளளுங்கள்.

Advertisement

Read Next