ஆன்மீகம்

மீனத்திற்கு பெயர்ச்சியாகும் செவ்வாயால் இந்த ராசிக்காரர்களின் தன்னம்பிக்கை குறையலாம்...

A
Admin User
1 min read
மீனத்திற்கு பெயர்ச்சியாகும் செவ்வாயால் இந்த ராசிக்காரர்களின் தன்னம்பிக்கை குறையலாம்...
Advertisement
Editor's Choice
Affiliate link

Casio Youth Series Digital Black Dial Unisex Watch - F-91W-1Q(D002)

Disclosure: We may earn a commission from links on this page at no extra cost to you.

ஜோதிட சாஸ்திரத்தில் செவ்வாய்க்கு என தனி இடம் உண்டு. செவ்வாய் பகவான் அனைத்து கிரகங்களுக்கும் தளபதி என்றும் அழைக்கப்படுபவர். செவ்வாய் பகவான் ஆற்றல், சகோதரன், நிலம், வலிமை, தைரியம், வீரம் ஆகியவற்றிற்கான கிரகமாக கூறப்படுகிறார். செவ்வாயால் மேஷம் மற்றும் விருச்சிக ராசிகள் ஆளப்படுகின்றன. மேலும், இது மகர ராசியில் உச்சமாகவும், அதே நேரத்தில் கடகத்தில் பலவீனமாக உள்ளார். செவ்வாய் பகவான் வரும் மே 17ஆம் தேதி அன்று மீன ராசியில் பிரவேசிக்கப் போகிறார். செவ்வாயின் இந்த ராசி மாற்றத்தால் சில ராசிக்காரர்களுக்கு சுப பலன்களும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலனும் கிடைக்கும். அந்த வகையில், செவ்வாயின் ராசி மாற்றத்தால் 12 ராசிகளுக்கும் எப்படி இருக்க போகிறது என்பதைப் பற்றி தான் இப்போது இந்த கட்டுரையில் தெரிந்து கொள்ள போகிறோம்…

மேஷம்

செவ்வாயின் ராசி மாற்றத்தால் மேஷ ராசிக்காரர்கள் மனம் அமைதியில்லாமல் இருக்க நேரிடலாம். குடும்பத்தின் ஏற்படும் பிரச்சனைகளை நிதானமாக செயல்பட்டு சரி செய்வதில் கவனம் செலுத்துங்கள். மேலும், இக்கட்டான சூழலில் தந்தையின் ஆதரவு கிடைக்கும். பழைய சொத்திலிருந்தும் உங்களுக்கு திடீர் வருமானம் கிடைக்கலாம்.

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களின் பேச்சில் சாதாரணமாக இனிமை இருக்கும். இந்த காலக்கட்டத்தில் சற்று கூடுதலாக இருக்கும், உடன்பிறப்போரை எப்போதும் மகிழ்ச்சியாக வைத்து கொள்ள விரும்புவீர்கள். ஆனால், உங்கள் மனம் சஞ்சலத்துடனேயே இருக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு அலுவலத்தில் அதிகாரிகளுடன் இணக்கம் அதிகரிக்கும். மேலும், உங்கள் முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் உருவாகும்.

மிதுனம்

இன்று உங்களின் தன்னம்பிக்கை முழுமையாக திரும்ப கிடைக்கப் பெறுவீர்கள். ஆனால், உங்களது பொறுமை சற்று குறைந்தே காணப்படும். அலுவலகத்தில் உத்தியோகஸ்தர்களுக்கு முன்னேற்றத்திற்கான கதவுகள் இந்த நேரத்தில் திறக்கப்படும். கிடைக்கும் வாய்ப்பை முறையாக பயன்படுத்தி கொண்டால் பெரிய ஏற்றத்தைக் காணலாம். இதனால், உங்களுக்கு மரியாதையும் கூடும்.

கடகம்

கடக ராசிக்காரர்களுக்கு வாழ்வில் மகிழ்ச்சி அதிகரிப்பதால் மனம் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும். எழுத்து மற்றும் அறிவு சார்ந்த பணிகளில் ஈடுபடுவோருக்கு இந்த காலக்கட்டத்தில் வெற்றி அதிகரிக்கும். சிலர் விலையுயர்ந்த பொருட்களை பரிசாகவும் பெறலாம். வீட்டில் சில சுப நிகழ்ச்சிகள் நடைபெறுவதற்கான வாய்ப்புகளும் உண்டு. குடும்பத்தாருடன் மகிழ்ச்சியாக நேரத்தைச் செலவிடுவீர்கள்.

சிம்மம்

இந்த காலக்கட்டத்தில் நீங்கள் முழு நம்பிக்கையுடன் முன்னேறுவீர்கள். உங்கள் மனதில் அமைதியும் மகிழ்ச்சியும் நிலவும். திருமண வாழ்வில் மகிழ்ச்சி அதிகரிக்கும். ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். பெற்றோருடன் போதுமான நேரம் செலவிட முயற்சியுங்கள். சட்ட விஷயங்கள் கவனக்குறைவாக இருக்க வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறது.

கன்னி

கன்னி ராசிக்காரர்கள் தங்கள் பேச்சில் பொறுமையை கடைப்பிடிக்க வேண்டிய நேரமிது. உங்கள் பேச்சாலேயே வீண் சிக்கலிகளில் சிக்கி அவதியுற நேரிடலாம். வணிகர்களுக்கு இந்த நேரத்தில் வியாபாரம் மேம்படும். தொழில் சம்பந்தமாக வெளியூர் பயணம் மேற்கொள்ளும் வாய்ப்பு உங்களுக்கு உண்டு. வாழ்க்கையில் திடீர் குழப்பங்கள் உருவாகலாம். பொறுமையாக விசாரிப்பதன் மூலம் குழப்பங்களை நீக்கிடலாம்.

துலாம்

துலாம் ராசிக்காரர்களுக்கு இந்த காலக்கட்டத்தில் தன்னம்பிக்கை குறைய வாய்ப்புள்ளது. எதிர்பார்த்த விஷயம் நடக்காமல் போகும் பட்சத்தில் உங்கள் மனம் கலங்கலாம். வேலை தேடுபவர்கள் ஏமாற்றங்களைச் சந்திக்க வேண்டியிருக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு அலுவலகத்தில் சிரமங்கள் இருக்கக்கூடும். அதிகப்படியான வேலைப்பளுவால் உடற்சோர்வுக்கு ஆளாவீர்கள். வேலையுடன் ஆரோக்கியத்திலும் அக்கறை தேவை.

விருச்சிகம்

செவ்வாயின் ராசி மாற்றம் விருச்சக ராசிக்காரர்களுக்கு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாது என்றாலும், இந்த நேரத்தில் உங்கள் மனம் அமைதியற்று காணப்படும். நீங்கள் மன அமைதிக்காக மிகவும் பாடுபடுங்கள். குடும்ப உறுப்பினர்களுடன் வழிபாட்டுத் தலங்களுக்குச் சென்று வர நேரிடலாம். வேலையிலும், தனிப்பட்ட வாழ்க்கையில் சாதாரணமான சூழல் இருக்கும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

தனுசு

தனுசு ராசிக்காரர்களுக்கு இந்த காலக்கட்டத்தில் மனதில் வீண் குழப்பம் ஏற்படும். எந்தவொரு காரியத்தையும் அவசர அவசரமாக செய்வதைத் தடுக்கவும் நிதானமாக இருந்து உங்கள் ஆரோக்கியத்தை கவனித்துக் கொள்ளுங்கள். மேலும், குடும்ப வாழ்க்கையில் அமைதி நிலவ வேண்டுமெனில், உங்கள் வழக்கத்தில் சில மாற்றங்களைக் கொண்டு வர வேண்டியது அவசியம். வீண் அலைச்சல் இருக்கக்கூடும்.

மகரம்

மாணவர்களுக்கு இந்த காலக்கட்டத்தில் கல்விப் பணிகளில் ஆர்வம் அதிகரித்து காணப்படும். எந்தவொரு போட்டித் தேர்வு மற்றும் நேர்காணலிலும் நீங்கள் வெற்றி பெறுவீர்கள். வெளியூர் பயணம் செல்லும் வாய்ப்புகள் உங்களுக்கு அமையும். இதனால், உங்கள் மீதான மரியாதை அதிகரிக்கும். திருமண வாழ்க்கையில் சில சச்சரவுகள் தலை தூக்கும். சமூக பேச்சுவார்த்தை மூலம் மட்டுமே சச்சரவுகளை நீக்க முடியும்.

கும்பம்

விருச்சிக ராசிக்காரர்களுக்கு இந்த நேரத்தில் மனம் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும். அலுவலகத்தில் உத்தியோகஸ்தர்களுக்கு பதவி உயர்வுக்கான வாய்ப்புகள் கிடைக்காலம் அல்லது ஊதிய உயர்வுடன் பணி மாற்றமும் ஏற்படலாம். அறிவு சார்ர்ந்த வேலையில் ஈடுபடுவோருக்கு மரியாதை அதிகரிக்க போகிறது. உண்ணும் உணவில் கட்டுப்பாட்டைக் கொண்டு வந்தால் உடல்நல பாதிப்பில் இருந்து தப்பிக்கலாம்.

மீனம்

உங்களது ராசிக்கு செவ்வாய் வரப் போகிறார். எனவே, இந்த காலக்கட்டத்தில் உங்களுக்கு மனம் மகிழ்ச்சியாக இருக்கும். தனிப்பட்ட வாழ்க்கைப் பற்றி பேசினால், உங்கள் மீதான குடும்பப் பொறுப்புகள் அதிகரிக்கக்கூடும். நீண்ட நாளாக எதிர்பார்த்து காத்திருந்த பணத்தை இப்போது பெறலாம். வியாபாரத்தில் உங்களுக்கு அதிக உழைப்பு தேவை. பயணங்களுக்கு செலவுகள் இந்த நேரத்தில் அதிகரிக்கும்.

Advertisement

Read Next