மே மாதத்தில் நிகழும் 3 பெரிய கிரகங்களின் பெயர்ச்சியால் 12 ராசிகளிலும் ஏற்பட போகும் மாற்றங்கள்...
Casio Youth Series Digital Black Dial Unisex Watch - F-91W-1Q(D002)
ஜோதிட சாஸ்திரத்தில், கிரகங்களின் ராசி மாற்றம் மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. கிரகங்களின் ராசி மாற்றத்தால் அனைத்து ராசிகளுக்கும் நல்ல மற்றும் அசுப விளைவுகள் ஏற்படக்கூடும். மே மாதத்தில் சூரியன், செவ்வாய், சுக்கிரன் ஆகிய கிரகங்கள் ராசிகள் மாறப்போகிறது. மே 15ம் தேதி சூரியன் ரிஷப ராசியில் சஞ்சரிக்கிறார். அதன் பிறகு, மே 17 அன்று செவ்வாய் மீன ராசியில் சஞ்சரிக்கிறார். இதன் பிறகு, சுக்கிரன் மேஷ ராசியில் சஞ்சரிக்கிறார். சூரியன், செவ்வாய், சுக்கிரன் ஆகிய கிரகங்கள் ராசிகளை மாற்றினால், அனைத்து ராசிகளுக்கும் சுப, அசுப பலன்கள் உண்டாகும். எனவே, சூரியன், செவ்வாய், சுக்கிரனின் ராசி மாற்றத்தால் ஒவ்வொரு ராசிக்கும் என்னென்ன மாற்றங்கள் ஏற்பட போகிறது என்பதை இப்போது இந்த கட்டுரையில் தெரிந்து கொள்ள போகிறோம்…

மேஷம்
இந்த காலக்கட்டத்தில் உங்களது மனம் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும். குடும்பப் பொறுப்புகள் அதிகரிக்கக்கூடும். குடும்பத்தினரின் முழு ஆதரவும் கிடைக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு, அலுவலகத்தில் வேலைப்பளு அதிகமாக இருக்கும். இருப்பினும், உங்கள் மீதான மரியாதை கூடும். குழந்தையின் ஆரோக்கியத்தில் அக்கறை காட்ட வேண்டிய நேரமிது. வியாபாரத்தில் நண்பரின் ஆதரவால் பயனடைவீர். திடீர் பயண யோகமும் உண்டாகும்.

ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுகக்கு மன அமைதி மேலோங்கும். உங்களின் தொழில் நிலை மேம்படும். அலுவலகத்தில் கவனம் செலுத்துங்கள். குழந்தைகள் மூலமாக சில நல்ல செய்திகள் கிடைக்கும். தாயிடமிருந்து நிதி ரீதியான பலன் கிடைக்க வாய்ப்பு உண்டு. தொழில் விஷயமாக சுற்றுலா செல்லவும் நேரிடலாம். உத்தியோகஸ்தர்களுக்கு முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் அதிகரிக்கக்கூடும்.

மிதுனம்
மன அமைதியைப் பெற நீங்கள் போராட வேண்டியிருக்கும். கடவுள் மீதான நம்பிக்கை அதிகரிக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு அலுவலகத்தில் கூடுதல் பொறுப்புகள் வழங்கப்படலாம். நண்பர்களின் ஆதரவைப் பெறுவீர்கள். இந்த காலக்கட்டத்தில் உங்களது செலவுகள் அதிகரிக்கக்கூடும். அலுவலகத்தில் சக ஊழியர்களுடன் சுமுகமான உறவு இருக்கும். அதிருப்தியின் காரணமாக உங்கள் மன நிலையில் மாற்றம் இருக்கும். உங்கள் சுபாவத்தில் பிடிவாத குணம் அதிகரித்து காணப்படும். எனவே, வீண் சர்ச்சைகளில் இருந்து விலகி இருங்கள்.

கடகம்
கடக ராசிக்காரர்களின் தன்னம்பிக்கை அதிகரிக்கும். பெற்றோரின் ஆரோக்கியத்தில் அக்கறை காட்ட வேண்டிய காலமிது. இக்கட்டான சூழ்நிலையில் வாழ்க்கைத்துணையின் ஆதரவு கிடைக்கும். வாகனப் பராமரிப்பிற்கான செலவுகள் அதிகரிக்கக்கூடும். கல்வி மற்றும் அறிவுசார் வேலைகளில் இனிமையான முடிவுகளைப் பெறுவீர்கள். குழந்தைகள் மூலம் சில நல்ல செய்தி தேடி வரும். அலுவலகத்தில் உங்களுக்கு சக ஊழியர்களின் உதவிகள் கிடைக்கும்.

சிம்மம்
கல்விப் பணிகளில் உங்களுக்கு ஆர்வம் அதிகரிக்கும். மன மகிழ்ச்சிப்பது மட்டுமின்றி, உங்களது நிதி நிலையிலும் நல்லதொரு முன்னேற்றத்தைக் காணலாம். பெற்றோரின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். நண்பருடன் சுற்றுலா செல்லவு திட்டமிடலாம். உங்களுக்கு உணவின் மீதான ஆர்வம் அதிகரிக்கும். வேலையில் முன்னேற்றத்திற்கான பாதை திறக்கப்படும். உங்கள் விருப்பத்திற்கு மாறாக உங்கள் வேலையில் திடீர் மாற்றமும் ஏற்படலாம். சில பழைய நண்பர்களுடன் மீண்டும் தொடர்பு ஏற்படலாம். இதனால், மகிழ்ச்சி இரட்டிப்பாகும்.

கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு இந்த காலக்கட்டத்தில் மனம் மகிழ்ச்சியாக இருக்கும். மனதில் நேர்மறையான எண்ணத்தின் தாக்கம் அதிகரிக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு அலுவலகத்தில் முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் கூடும். புது வாகன யோகம் உண்டாகும். வியாபாரிகளுக்கு, தங்களது வியாபாரம் விரிவடைவதன் மூலம் மன நிம்மதியைப் பெற்றிடலாம். திடீர் பயணங்கள் மேற்கொள்ளவும் வாய்ப்பு உண்டாகும். இந்த பயணங்கள் உங்களுக்கு அனுகூலமாக இருந்தாலும், கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். வீண் செலவுகள் அதிகமாக இருக்கும்.

துலாம்
உங்களுக்கு மனதில் ஏற்றத் தாழ்வுகள் நிறைந்திருக்கும். தொழிலில் மாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளது. நீங்கள் வேறு எந்த இடத்திற்கும் செல்லலாம். வேலைப்பளு அதிகமாக இருக்கும். வருமானமும் அதிகரிக்கும். ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். பேச்சில் கடுமை தன்மை இல்லாமல் பார்த்து கொள்ளுங்கள். பிறருடன் பேசும் போது, அதிகப்படியான கோபம் மற்றும் ஆவேசத்தைத் தவிர்க்கவும். கோபம் மற்றும் அதிருப்தி உணர்வுகள் உங்கள் மனதில் அதிகரித்து காணப்படும். தியானத்தின் உதவியை நாடினால் நல்ல பலன் கிடைக்கும்.

விருச்சிகம்
விருச்சி ராசிக்காரர்களுக்கு கிரக நிலைகளின் சஞ்சாரத்தால் மனம் அமைதியாக இருக்கும். அலுவலகத்தில் உங்கள் பணியின் வரம்பு விரிவடையலாம். இதனால், அதிக வேலைப்பளு இருக்கும். கல்விப் பணிகளில் முழு கவனம் செலுத்துங்கள். நண்பரிடம் இருந்து பண உதவியைப் பெறலாம். சில நேரங்களில் வாழ்க்கை வேதனை நிறைந்ததாக உணரலாம். திடீர் பயணங்கள் செல்ல நேரிடலாம். திட்டமிடாத செலவுகள் அதிகரிக்கும். பெற்றோரின் ஆதரவு கிடைக்கும். உங்களுக்கு நல்ல செய்தி கிடைக்கும்.

தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு இந்த காலத்தில் பொறுமை குறையக்கூடும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் மாற்றம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. குடும்பத்தை விட்டு விலகி இருக்க வேண்டி நிலை வரலாம். நண்பர்களின் ஆதரவைப் பெறுவீர்கள். தந்தையிடமிருந்து பண உதவியைப் பெறலாம். கோபமான தருணங்களை தவிர்த்தால் மனநிறைவினைப் பெற்றிடலாம். கடவுள் நம்பிக்கை அதிகரிக்கும். நீங்கள் நண்பர்களுடன் ஒரு வழிபாட்டு தலத்திற்கு யாத்திரை சென்று வரலாம்.

மகரம்
உங்கள் மீதான நம்பிக்கை இந்த காலக்கட்டத்தில் மேலோங்கும். ஆனால், சோம்பல் அதிகமாக இருக்கலாம். தன்னம்பிக்கையுடன் தொடர்ந்து முன்னேறி செல்லுங்கள். குடும்பத்தில் அமைதியை காக்க முயற்சி செய்ய வேண்டியது அவசியம். ஆரோக்கிய விஷயத்தில் எச்சரிக்கையாக இருங்கள். வீட்டில் பிரச்சனைகள் இருந்து வண்ணம் இருக்கும். வாழ்க்கை குழப்பம் நிறைந்ததாகவே காணப்படும். ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். இந்த நேரத்தில் மனம் கலங்கலாம். முன்னேற்றத்திற்கான வாய்ப்புகளும் உங்களை தேடி வரலாம். கிடைக்கும் வாய்ப்பை முறையாக பயன்படுத்தி கொள்ளுங்கள்.

கும்பம்
இந்த காலக்கட்டத்தில் கும்ப ராசிக்காரர்களின் பேச்சில் என்றும் இல்லாத அளவிற்கு இனிமை இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் அமைதியும் நிலவும். வியாபாரத்தில் முதலீடு செய்வதற்கு பெற்றோரின் நிதி உதவியைப் பெற்றிடலாம். உடன்பிறந்தவர்களின் முழு ஆதரவையும் பெறலாம். மனதில் எதிர்மறை எண்ணங்களின் தாக்கம் இருக்கக்கூடும். இதனால், தேவையற்ற கோபம் அதிகமாக இருக்கும்.கடவுள் வழிபாட்டில் ஆர்வம் அதிகரிக்கும். குழந்தை மூலம் மகிழ்ச்சி அதிகரிக்கும்.

மீனம்
மனதில் அமைதியும் மகிழ்ச்சியும் நிலைத்திருக்கும் காலமிது. படித்து முடித்து வேலை தேடுபவர்கள், இந்த நேரத்தில் சந்திக்கும் வேலை நேர்காணல்கள் மூலம் நல்ல பலனைப் பெற்றிடலாம். பிறரின் உதவியால் நல்ல ஆதாயம் கிடைக்கும். மாணவர்களுக்கு, கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். குடும்பத்துடன் கடவுள் வழிபாட்டுத் தலங்களுக்குப் பயணம் மேற்கொள்ளலாம். தடைப்பட்ட பணத்தை திரும்பப் பெற்றிடலாம். இந்த காலத்தில் உங்கள் மீதான நம்பிக்கை குறைய தொடங்கலாம். அதற்கு இடம் கொடுக்காமல் தொடர்ந்து முயற்சியுங்கள்.