இவற்றை உணவில் சேர்த்து கொண்டால் முக சுருக்கத்திற்கு விரைவில் குட்பை சொல்லிடலாம்...
Dyazo 6 Angles Adjustable Aluminum Ergonomic Foldable Portable Tabletop Laptop/Desktop Riser Stand Holder Compatible for MacBook, HP, Dell, Lenovo & All Other Notebook (Silver)
சருமத்தில் சுருக்கங்கள் ஏற்படுவது என்பதால் வயதாவதால் அனைவருக்கும் ஏற்படக்கூடிய ஒன்று தான். ஆனால் உங்களுக்கு இளம் வயதிலேயே சருமத்தில் சுருக்கங்கள் தோன்ற ஆரம்பித்து, உங்கள் சருமம் தளர்வடைய ஆரம்பித்தால், அதற்கு உங்கள் தவறான பழக்கவழக்கங்கள் தான் காரணம். உங்களது பழக்கவழக்கங்கள் சிலவற்றால் இந்தப் பிரச்சனை ஏற்படலாம். நம் சருமத்தில் ஏற்படும் சுருக்கங்கள் நம்மை வயதானவராக காண்பிக்கும். மேலும், இது உங்கள் அழகைப் பெரிதும் பாதிக்கிறது.
அத்தகைய சூழ்நிலையில், உங்கள் சரும பராமரிப்பு வழக்கத்தை மேம்படுத்துவதுடன், உங்கள் உணவுப் பழக்கத்தை மேம்படுத்துவதும் மிகவும் முக்கியம். ஆரோக்கியமான உணவு உங்கள் உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்களை வழங்குகிறது. இது உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதோடு மட்டுமல்லாமல் உங்கள் சருமத்தையும் ஆரோக்கியமாக வைத்துகொள்ள உதவுகிறது. உங்கள் சருமத்தை ஆரோக்கியமாகவும், பளபளப்பாகவும் மாற்றும் உணவுகள் பற்றி இப்போது இந்த கட்டுரையில் தெரிந்து கொள்ள போகிறோம்…
பாதாம்
பாதாம் ஆரோக்கியத்திற்கும் சருமத்திற்கும் மிகவும் நல்லதாக கருதப்படுகிறது. பாதாமில் வைட்டமின் ஈ நிறைந்துள்ளது. அனைத்து வைட்டமின்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றங்கள் நிறைந்தது தான் பாதாம். இது உங்கள் சருமத்தை இறுக்கமாக்குவதோடு, நீரேற்றமாக வைத்திருக்கவும் உதவுகிறது. சிறந்த சருமத்தை பெறுவதற்கு, இரண்டு பாதாம் பருப்பை ஊறவைத்து அரைத்து பாலில் கலந்து தொடர்ந்து குடித்து வரவும். இது உங்கள் ஆரோக்கியத்தையும் சருமத்தையும் ஆரோக்கியமாக வைத்திருக்க பெரிதும் உதவிடும்.
ப்ரோக்கோலி
உங்கள் சருமத்தை சுருக்கங்கள் இல்லாமல் எப்போதும் இளமையாக வைத்து கொள்ள வேண்டுமெனில், உங்கள் உணவில் ப்ரோக்கோலியை சேர்த்துக்கொள்ள வேண்டும். இது வயதான தோற்றத்தை எதிர்க்கும் பண்புகளைக் கொண்டுள்ளது. கொலாஜன் உற்பத்திக்கு உதவியாக ப்ரோக்கோலியில் வைட்டமின் சி அதிகமாக உள்ளது. மேலும், சருமத்திற்கு இறுக்கத்தையும் தருகிறது. ப்ரோக்கோலியை சாலட்டாக உணவில் சேர்த்துக்கொள்ளலாம். உங்களுக்கு இளம் வயதிலேயே சருமத்தில் சுருக்கங்கள் விழ தொடங்கினால், தினசரி உணவில் ப்ரோக்கோலியை சிறிது சேர்த்து கொள்ள மறவாதீர்கள்.
கீரை
கீரை ஒரு நீரேற்றம் மற்றும் ஆக்ஸிஜனேற்ற பண்புகள் நிறைந்த உணவாக கருதப்படுகிறது. இது பீட்டா கரோட்டின் மற்றும் வைட்டமின் சி ஆகியவற்றின் நல்ல மூலமாக விளங்குகிறது. அதுதவிர, கீரை கொலாஜன் உற்பத்தியை அதிகரிக்கவும் உதவுகிறது. இது சருமத்தை இறுக்கமாக்கி, முதுமையின் தாக்கத்தைக் குறைக்க உதவுகிறது. கீரையை அதிகமாக உணவில் சேர்த்து கொள்வது உடலுக்கு மட்டுமல்ல, வெளி தோற்றத்திற்கும் மிகவும் நன்மை பயக்கும்.
பப்பாளி
பப்பாளியை சாப்பிடுவது மட்டுமின்றி சருமத்திற்கு நேரடியாக பயன்படுத்துவதால் அதிக நன்மைகள் கிடைக்கும். வைட்டமின்கள் ஏ, சி, ஈ மற்றும் கே பப்பாளியில் அதிக அளவு காணப்படுகின்றன. அதே போல் பல வகையான தாதுக்களும் உள்ளதால் அதை பயன்படுத்துவதால் சருமத்தில் மெல்லிய கோடுகள் மற்றும் சுருக்கங்களைக் குறைக்கின்றன. பப்பாளியில் பப்பைன் என்ற நொதி உள்ளது. இது ஃப்ரீ ரேடிக்கல்களின் விளைவைக் குறைத்து, சருமத்தை இளமையாகக் காட்டுகிறது. அதனால்தான் பலர் பப்பாளி ஃபேஷியலையும் செய்கிறார்கள். எனவே, உங்கள் உணவில் தவறாமல் பப்பாளியைச் சேர்த்துக்கொள்ளுங்கள். மேலும், உங்கள் சருமத்திலும் பப்பாளியை அரைத்து பயன்படுத்தலாம்.