Tuesday, March 24, 2026
Logo
Menu
Follow Us
ஆன்மீகம்

ஏப்ரல் மாதத்தில் இந்த 4 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டத்தின் கதவு திறக்கப்போகிறது...

A
Admin User
Journalist
March 28, 2022 6 min read 49 views
ஏப்ரல் மாதத்தில் இந்த 4 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டத்தின் கதவு திறக்கப்போகிறது...

ஏப்ரல் மாதத்தில் பல கிரகங்களின் ராசி மாற்றங்கள் நடைபெற உள்ளன. மேஷம் முதல் மீனம் வரை உள்ளவர்களுக்கு ஏப்ரல் மாதம் மிக முக்கியமானதாக இருக்கப்போகிறது. அதிலும், ஏப்ரல் மாதத்தில் நடைபெற போகும் கிரக மாற்றங்கள் சில ராசிக்காரர்களுக்கு சுப பலன்களை உண்டாக்கும், சில ராசிக்காரர்கள் சிரமங்களை அதிகரிக்க செய்யும். அந்த வகையில், ஏப்ரல் மாதத்தில் நடைபெறும் கிரக நிலைகளின் மாற்றம் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டத்தின் கதவைத் திறக்க செய்ய போகிறது என்பதை இந்த கட்டுரையில் பார்க்க போகிறோம். உங்கள் ராசி இந்த பட்டியலில் உள்ளதா என்பதை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளுங்கள்…

ரிஷபம்
ஜோதிட சாஸ்திரத்தின் படி, ஏப்ரல் மாதம் ரிஷப ராசிக்காரர்களுக்கு ஏற்றதாக இருக்கும். ஏனென்றால், ஏப்ரல் மாதத்தில் ராகுவின் ராசி மாறம் நடைபெறப்போகிறது. தற்போது ராகு பகவான் உங்கள் ராசியில் அமர்ந்துள்ளார். எனவே, ஏப்ரல் மாதம் ராகு பகவான் உங்கள் ராசியை விட்டு நீங்கியவுடன் உங்கள் வாழ்க்கையில் இத்தனை நாட்களாக இருந்துவந்த தடைகள் மெல்ல மெல்ல அகலும். அதுமட்டுமின்றி, இந்த நேரத்தில் உங்களது கடின உழைப்பிற்கான முழு பலனைப் பெறுவீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு அலுவலகத்தில் பதவி உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்பு உண்டு. அதிர்ஷ்டம் முழு ஆதரவையும் நீங்கள் பெறலாம். ரிஷப ராசி மாணவர்களுக்கும் இந்த மாதத்தில் சாதகமான முடிவுகள் கிடைக்கலாம்.

சிம்மம்
சிம்ம ராசிக்காரர்கள் ஏப்ரல் மாதத்தில் பல காரியங்களில் வெற்றி பெறுவார்கள். இந்த நேரத்தில் உங்கள் பணி பெரிதும் பாராட்டப்படலாம். உத்தியோகத்தில் முன்னேற்றத்திற்கான சூழ்நிலை உண்டாகும். புதிய பொறுப்புகள் உங்களுக்கு வழங்கப்படலாம். அதுதவிர, வியாபாரிகளுக்கு இந்த காலக்கட்டத்தில் லாபம் அதிகரிக்கக்கூடும். படிப்பிலும் சாதகமான பலன்களைப் பெறுவீர்கள். அமைதியான சூழல் குடும்பத்தில் நிலவும். கடவுள் மீதான உங்களது நம்பிக்கை அதிகரிக்கலாம். உங்கள் பிரார்த்தனைகள் ஒன்றாக நிறைவேறப் போகின்றன. இருப்பினும், தொடர்ந்து கடினமாக உழைத்தால் நினைத்து பார்க்காத உயரத்தை அடைவீர்கள்.

விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களுக்கு ஏப்ரல் மாதம் நன்மைகளை வாரி வழங்கக்கூடிய மாதமாக இருக்கப்போகிறது. அதுமட்டுமின்றி, நீங்கள் இந்த மாதத்தில் விரும்பிய முடிவுகளைப் பெறுவீர்கள். ஏப்ரல் மாதத்தில் கேது உங்கள் ராசியை விட்டு வெளியேற போகிறார். அதன் காரணமாக, உங்களுக்கு இருந்தவந்த பிரச்சனைகள் அனைத்திலும் இருந்து நீங்கள் விடுதலை பெறுவீர்கள். உங்கள் குடும்ப உறுப்பினர்களிடையே அன்பு அதிகரிக்கும். காதல் விஷயத்தில் வெற்றி உண்டாகும். உங்கள் காதலுக்கு குடும்பத்தாரின் ஒப்புதலைப் பெறலாம். பண வரவுகள் கணிசமாக அதிகரிக்கும். அதுமட்டுமின்றி, முதலீடு செய்வதற்கு இநஙத காலம் மிக சிறந்த நேரம். வியாபாரிகள் முதலீடு தொடர்பான முக்கிய முடிவுகளால் சிறந்த பலனைப் பெற போகிறார்கள்.

தனுசு
தனுசு ராசிக்காரர்களின் நிதி நிலை இந்தக் காலகட்டத்தில் பெரிதும் மேம்படும். சனி பகவானால் உங்களுக்கு இத்தனை நாட்களாக ஏற்பட்டு வந்த துன்பங்கள் குறையும். கடவுளின் அருள் நிலைத்திருக்கும். இந்த நேரத்தில் நீங்கள் பண ஆதாயங்களால் பெரிதும் திருப்தி அடைவீர்கள். உத்தியோகஸ்தர்கள் தற்போதைய வேலையில் திருப்தி அடையாவிட்டால், வேலை மாற்றத்திற்கு இது சாதகமான காலம். புதிய வாய்ப்புகள் உங்களைத் தேடி வரக்கூடும். சரியான முடிவை எடுத்தால் நீங்கள் மன நிறைவான முடிவுகளை நிச்சயம் பெறலாம். அதுமட்டுமின்றி, உங்களது பணப்பிரச்சனைகள் அனைத்தும் விரைவில் நீங்கிடும்.

Share this article
A
Admin User

Lifestyle Journalist

A passionate writer covering health, wellness, and cultural topics for the Tamil community.

தினசரி ஒரு நற்சிந்தனை

...

உடல் எடை கணக்கீடு

ஆரோக்கியமான வாழ்விற்கு உங்கள் பிஎம்ஐ (BMI) அளவை அறிந்து கொள்வது அவசியம்.

கணக்கிடு (BMI Test)
திருக்குறள் (Kural of the Day)

...

...

இன்றைய விலை
தங்கம் (22k)
1 கிராம்
₹13,000
தங்கம் (24k)
1 கிராம்
₹13,650
வெள்ளி
1 கிராம்
₹250
அடுத்த பண்டிகை (Next Festival)

தேடல்...

00
Days to go
உங்கள் கருத்து (Poll)

மன அழுத்தத்தைக் குறைக்க நீங்கள் என்ன செய்கிறீர்கள்?

Get Daily Updates

Subscribe for the latest news in your inbox.

அடுத்து வாசிக்க
பிரார்த்தனையின் சக்தி: தினசரி வழிபாடு வாழ்க்கையை மாற்றியமைப்பது எப்படி?
வாசிக்க