Tuesday, March 24, 2026
Logo
Menu
Follow Us
ஆரோக்கியம்

கோடையில் ஏற்படும் வயிறு சார்ந்த பிரச்சனைகளை தவிர்க்க தயிருடன் இதை கலந்து சாப்பிடுங்கள்...

A
Admin User
Journalist
June 02, 2022 5 min read 60 views
கோடையில் ஏற்படும் வயிறு சார்ந்த பிரச்சனைகளை தவிர்க்க தயிருடன் இதை கலந்து சாப்பிடுங்கள்...

கோடையில் எப்போதும் வெயிலின் உஷ்ணம் அதிகமாக இருக்கும். இதனால் உடலில் பல்வேறு மாறுதல்கள் உண்டாகக்கூடும். உண்ணும் உணவு செரிப்பதில் தொடங்கி மலச்சிக்கல் வரை நிறைய பிரச்சனைகளை சந்திக்க நேரிடலாம். எனவே, பிற காலங்களை காட்டிலும் கோடைகாலத்தில் கூடுதல் கவனம் தேவை. அப்படி, கோடைகாலத்தில் உண்டாகும் வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சனைை உடனே சரிசெய்திட உதவும் எளிய வீட்டு வைத்தியத்தை தான் இப்போது இந்த கட்டுரையில் தெரிந்து கொள்ள போகிறோம்…

தயிர்

தயிர் என்பது அன்றாட உணவில் நாம் சேர்த்து கொள்ளக்கூடிய ஒன்று. பழங்கால பாரம்பரிய உணவில் தயிர் முக்கிய இடம் வகிக்கிறது. தயிர் சாப்பிடுவது நமது செரிமான அமைப்பை பலப்படுத்துகிறது. மேலும், தினமும் தயிர் சாப்பிடுவதால் வயிற்று பிரச்சனைகள் எதுவும் ஏற்படாது. தயிர் சாப்பிடுவதால் உடலுக்கு ஏராளமான ஊட்டச்சத்துக்கள் கிடைக்கும் என்பதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். கால்சியம், வைட்டமின் பி-12, வைட்டமின் பி-2, மெக்னீசியம், பொட்டாசியம் போன்ற சத்துக்கள் தயிரில் உள்ளன. கோடையில் தயிருடன் சர்க்கரை சேர்த்து சாப்பிட்டால் வயிறு குளிர்ச்சியாக இருக்கும். தயிர் மற்றும் சர்க்கரை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் பற்றி இப்போது தெரிந்து கொள்வோம்…

தயிர் மற்றும் சர்க்கரை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்

வயிற்றில் குளிர்ச்சி

தயிர் மற்றும் சர்க்கரையை காலையில் சாப்பிட்டால் வயிறு குளிர்ச்சியாக இருக்கும். இதனுடன், வயிற்றில் எரியும் அமிலத்தன்மையும் இதன் மூலம் குறைகிறது. இதனுடன், தயிரும் சர்க்கரையும் உடலின் பித்தத்தைக் குறைத்திடும். இதன் காரணமாக நீங்கள் நாள் முழுவதும் உற்சாகமாக இருப்பீர்கள். தயிர் மற்றும் சர்க்கரையை சாப்பிடுவது மிகவும் நன்மை பயக்கும்.

நல்ல பாக்டீரியாக்கள் அதிகரிக்கும்

தயிரில் நல்ல பாக்டீரியாக்கள் காணப்படுகின்றன. அவை வயிற்றுக்கு மிகந்த நன்மை பயக்கும். ஏனெனில், இது செரிமான அமைப்பை பலப்படுத்துகிறது. தயிரும் சர்க்கரையும் குடலுக்கு மிகவும் நன்மை பயக்கும். இது தவிர, தயிர் மற்றும் சர்க்கரை சாப்பிடுவதன் மூலம் செரிமான அமைப்பும் ஆரோக்கியமாக இருக்கும். செரிமானம் மேம்படும்.

குளுக்கோஸ் கிடைக்கும்

காலையில் தயிர் மற்றும் சர்க்கரை சாப்பிடுவதால், உடலுக்கு உடனடியாக குளுக்கோஸ் கிடைக்கும். தயிர் மற்றும் சர்க்கரை சாப்பிடுவதன் மூலம், நீங்கள் நாள் முழுவதும் சுறுசுறுப்பாகவும், புத்துணர்ச்சியுடனும் இருப்பீர்கள். குளுக்கோஸ் உங்கள் மூளை மற்றும் உடலுக்கு உடனடி ஆற்றலைத் தருகிறது. தயிர் மற்றும் சர்க்கரை சாப்பிடுவதைத் தவிர, நீங்கள் வீட்டை விட்டு வெளியேறும் போது நாள் முழுவதும் உற்சாகமாக இருப்பீர்கள்.

ஜீரணம் எளிதாகும்

தயிர் செரிமான மண்டலத்தை மேம்படுத்தி எளிதாக ஜீரணிக்க செய்திடும். எப்படிப்பட்ட உணவை உட்கொண்டாலும் இறுதியாக தயிர் சர்க்கரை சாப்பிடுவது உணவை சுலபமாக செரிக்க செய்திடும். இதனால் கோடையில் வயிற்றைக் குளிர்விக்க உதவிடும்.

Share this article
A
Admin User

Lifestyle Journalist

A passionate writer covering health, wellness, and cultural topics for the Tamil community.

தினசரி ஒரு நற்சிந்தனை

...

உடல் எடை கணக்கீடு

ஆரோக்கியமான வாழ்விற்கு உங்கள் பிஎம்ஐ (BMI) அளவை அறிந்து கொள்வது அவசியம்.

கணக்கிடு (BMI Test)
திருக்குறள் (Kural of the Day)

...

...

இன்றைய விலை
தங்கம் (22k)
1 கிராம்
₹13,000
தங்கம் (24k)
1 கிராம்
₹13,650
வெள்ளி
1 கிராம்
₹250
அடுத்த பண்டிகை (Next Festival)

தேடல்...

00
Days to go
உங்கள் கருத்து (Poll)

மன அழுத்தத்தைக் குறைக்க நீங்கள் என்ன செய்கிறீர்கள்?

Get Daily Updates

Subscribe for the latest news in your inbox.

அடுத்து வாசிக்க
ஆரோக்கியத்திற்கு சிறந்தது சைவமா அல்லது அசைவமா? இதோ முழுமையான அலசல்!
வாசிக்க