Tuesday, March 24, 2026
Logo
Menu
Follow Us
அழகு குறிப்புகள்

ஆலிவ் ஆயிலை இப்படி யூஸ் பண்ணா முடி அடர்த்தியா வளரும்…

A
Admin User
Journalist
January 10, 2022 4 min read 58 views
ஆலிவ் ஆயிலை இப்படி யூஸ் பண்ணா முடி அடர்த்தியா வளரும்…

ஆலிவ் ஆயில் பல்வேறு வகையில் சருமத்திற்கு நன்மை அளிக்கக்கூடியது என்பது தெரியும். அதேபோல், ஆலிவ் ஆயில் கூந்தலுக்கு பல நன்மைகளை செய்திடக்கூடியது. எந்தவொரு பொருளையும் சரியான முறையில் உபயோகித்தால் மட்டுமே அதன் முழு பலனையும் பெற்றிடலாம். அந்த வகையில், ஆலிவ் ஆயிலை எவ்வாறு பயன்படுத்தி அடத்தியான மற்றும் மிருதுவான கூந்தலை பெற முடியும் என்பதை இப்போது தெரிந்து கொள்வோம்.

ஆலிவ் ஆயிலில் உள்ள வைட்டமின் ஈ, கூந்தலை மிருதுவானதாக மாற்றிடும். மேலும், அதிலுள்ள ஊட்டச்சத்துக்கள் முடியின் வேர்களுக்கு வலு சேர்த்திடுவதோடு, அழகான முடியை பெற்றிட உதவிடும். இப்போது எந்தவகையில் ஆலிவ் ஆயிலை கூந்தலுக்கு பயன்படுத்துவது என்பதை தெரிந்து கொள்வோம்…

ஆலிவ் ஆயில், மிளகு மற்றும் எலுமிச்சை விதை
ஆரோக்கியமான கூந்தல் வளர்ச்சிக்கு ஆலிவ் ஆயில் உபயோகிப்பது சிறந்தது. ஆனால், ஆலிவ் ஆயிலுடன் மிளகு மற்றும் எலுமிச்சை விதைகளை சேர்த்து நன்கு அரைத்து கொள்ளவும். அரைத்த கலவையை தலையில் தடவி 20 நிமிடங்கள் ஊற வைத்து பின்பு ஷாம்பூ போட்டு குளித்திடவும்.

முட்டை மற்றும் ஆலிவ் ஆயில்
உங்கள் முடி வலுவிழந்து, பார்ப்பதற்கே உயிரற்றது போல் காட்சியளிக்கிறதா? அப்படியெனில், நீங்கள் முட்டையை உபயோகியுங்கள். இது கூந்தலை அடர்த்தியாக்கிட உதவும். 2 முட்டைகளை உடைத்து ஒரு கிண்ணத்தில் ஊற்றி கொள்ளவும். அத்துடன் சிறிது ஆலிவ் ஆயில் சேர்த்து நிமிடங்களுக்கு நன்கு கலக்கவும். தயாரித்த அந்த கலவையை ஸ்கால்ப் மற்றும் முடியின் வேர்க்கால்களில் படும்படி நன்கு தேய்க்கவும். 10 நிமிடங்கள் கழித்து ஷாம்பூ போட்டு அலசிடவும். இப்படி தொடர்ந்து செய்து வந்தால், கூந்தல் மிருதுவாவதோடு, அடர்த்தியாகவும் வளர்ந்திடும்.

குறிப்பு
மேலே குறிப்பிடப்பட்டுள்ளது படி தொடர்ந்து செய்தால் நல்ல முன்னேற்றம் தெரியும். ஆனால், மேலும் சிறந்த பலன்கள் கிடைக்க வேண்டுமென்றால், தலைக்கும் ஹேர் பேக் போடுவதற்கு முன்பு, கூந்தலை நன்கு சுத்தப்படுத்த வேண்டியது அவசியம். அப்போது தான் கூந்தலில் இருக்கும் அழுக்குகள் நீங்கும். அழுக்கு நீங்கியதும் ஹேர் பேக் போட்டால் நல்ல பலன் கிடைக்கும்.

Share this article
A
Admin User

Lifestyle Journalist

A passionate writer covering health, wellness, and cultural topics for the Tamil community.

தினசரி ஒரு நற்சிந்தனை

...

உடல் எடை கணக்கீடு

ஆரோக்கியமான வாழ்விற்கு உங்கள் பிஎம்ஐ (BMI) அளவை அறிந்து கொள்வது அவசியம்.

கணக்கிடு (BMI Test)
திருக்குறள் (Kural of the Day)

...

...

இன்றைய விலை
தங்கம் (22k)
1 கிராம்
₹13,000
தங்கம் (24k)
1 கிராம்
₹13,650
வெள்ளி
1 கிராம்
₹250
அடுத்த பண்டிகை (Next Festival)

தேடல்...

00
Days to go
உங்கள் கருத்து (Poll)

மன அழுத்தத்தைக் குறைக்க நீங்கள் என்ன செய்கிறீர்கள்?

Get Daily Updates

Subscribe for the latest news in your inbox.

அடுத்து வாசிக்க
பொதுவான முடி பராமரிப்பு தவறுகள்: ஆரோக்கியமான கூந்தலுக்கு அவற்றை சரிசெய்வது எப்படி?
வாசிக்க