அடர்த்தியான முடி வேணும்னா இந்த பூவில் எண்ணெய் செஞ்சு யூஸ் பண்ணுங்க…
FLYNGO Touch Control LED Night Light Table Lamp for Bedroom, Living Room, and Study, with Adjustable Brightness, USB Rechargeable (A1)Plastic ,White
பூ என்றாலே அழகு தான். அதிலும் செம்பருத்தி பூவை எடுத்துக் கொண்டால், அழகோடு சேர்த்து, எக்கசக்க மருத்துவ குணங்களையும் தன்னுள் வைத்துள்ளது. அதிலும், அனைத்து வித கூந்தல் பிரச்சனைக்கும் செம்பருத்தி பூவினால் தீர்வு அளித்திட முடியும். இளம் வயதிலேயே வழுக்கை, நரை முடி போன்ற பிரச்சனைகளை பலர் அனுபவித்து வருகின்றனர். அவற்றிற்கும் செம்பருத்தி உபயோகிப்பது சிறந்தது. சரி, இப்போது செம்பருத்தி பூவை எப்படியெல்லாம் உபயோகிப்பது என்பதை தெரிந்து கொள்வோம். இதனை தொடர்ந்து செய்து வாருங்கள் நீங்களே நல்ல முன்னேற்றத்தை காண்பீர்கள்…
செம்பருத்தி எண்ணெய்
செம்பருத்தியால் செய்யப்படும் எண்ணெயானது கூந்தலுக்கு தேவையான அனைத்து ஊட்டச்சத்துக்களையும் தரவல்லது. இதனைப் பயன்படுத்தி வாரத்திற்கு 2 முறை தலைக்கு மசாஜ் செய்து வந்தால் முடி வளர்ச்சி அதிகரிக்கும்.
செய்முறை
*செம்பருத்தி பூ – 10, செம்பருத்தி இலைகள் – 10 எடுத்துக்கொள்ளவும்.
*சிறிது நீர் சேர்த்து அவற்றை மைய அரைத்து கொள்ளவும்.
*இப்போது ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, ஒரு கப் தேங்காய் எண்ணெய் ஊற்றி சூடேற்றி, அரைத்து வைத்துள்ள பேஸ்டடை சேர்த்து 2 முதல் 3 நிமிடங்களுக்கு கிளறவும்.
*அவ்வளவும் தான் செம்பருத்தி எண்ணெய் தயார். அதனை ஆற வைத்து ஒரு பாட்டிலில் ஊற்றி வைத்துக் கொள்ளலாம்.
உபயோகிக்கும் முறை
இந்த எண்ணெயை ஸ்கால்ப்பில் படும்படி தடவி நன்கு மசாஜ் செய்யவும். 30 நிமிடங்கள் கழித்து ஹெர்பல் ஷாம்பூ பயன்படுத்தி குளிக்கவும். வாரத்திற்கு 2 அல்லது 3 முறை இதனை பயன்படுத்தலாம்.
செம்பருத்தி ஷாம்பூ
செம்பருத்தி பூவில் இயற்கையாகவே நுரை உண்டாக்கக் கூடிய காரணிகள் உள்ளன. அதனால் தான் செம்பருத்தி பூவானது ஷாம்பூ தயாரிக்க அதிகம் பயன்படுத்தப்படுகிறது.
செய்முறை
*செம்பருத்தி பூ மற்றும் இலையை 1:3 என்ற விகிதத்தில் (அதாவது, 5 பூக்களுக்கு 15 இலைகள் என்ற கணக்கில்) எடுத்துக் கொள்ளவும்.
*ஒரு பாத்திரத்தில் தண்ணீர் சேர்த்து அத்துடன் பூ மற்றும் இலைகளைப் போட்டு நன்கு கொதிக்க விடவும்.
*இப்போது அந்த பூ மற்றும் இலைகள் எடுத்து மைய அரைத்து கொள்ளவும்.
*அத்துடன், சிறிது கடலை மாவு சேர்த்து கலந்து கொள்ளவும்.
*இப்போது, கெமிக்கல்கள் எதுவும் இல்லாத, இயற்கையான முறையில் தயாரிக்கப்பட்ட செம்பருத்தி ஷாம்பூ தயார்.
செம்பருத்தி, நெல்லிக்காய் ஹேர் மாஸ்க்
செம்பருத்தியைப் போல நெல்லிக்காயும் கூந்தலுக்கு மிகுந்த நன்மை அளிக்கக்கூடியது. எனவே, நெல்லிக்காய் மற்றும் செம்பருத்தி இரண்டும் சேரும் போது கூடுதல் நன்மைகளை அளித்திடும்.
செய்முறை
*செம்பருத்தி பவுடர் மற்றும் நெல்லிக்காய் பவுடரை சரிசம அளவில் எடுத்து கொள்ளவும். (செம்பருத்தி அனைத்து நாட்டு மருந்து கடை அல்லது அழகு சாதன பொருட்கள் விற்பனை கடைகளில் கிடைக்கும்)
*இரண்டையும் ஒன்றாக சேர்த்து நீர் விட்டு பேஸ்ட பதத்தில் கலந்து கொள்ளவும்.
*இதனை முடி மற்றும் ஸ்கால்ப்பில் படும்படி நன்கு தேய்க்கவும்.
*30-40 நிமிடங்கள் ஊற வைத்த பிறகு, ஷாம்பூ பயன்படுத்தி அலசிடவும். (செம்பருத்தி ஷாம்பூவை பயன்படுத்துவது சிறந்தது)
செம்பருத்தி ஹேர் பேக்
பலரையும் கவலையில் ஆழ்த்தக்கூடிய வழுக்கை பிரச்சனைக்கு சிறந்த தீரவாக ஆயுர்வேதம் கூறுவது கூட செம்பருத்தியை தான். எனவே, அத்தகைய பிரச்சனை உள்ளவர்கள் கெமிக்கல் நிறைந்த பொருட்களைப் பயன்படுத்துவதை காடடிலும் இயற்கை முறையில் செம்பருத்தியை தாராளமாக பயன்படுத்தலாம்.
செய்முறை
*செம்பருத்தி பூ-5 மற்றும் இலை-5, இரண்டையும் நன்கு அரைத்து கொள்ளவும்.
*இதனை வழுக்கை ஏற்பட்ட இடத்தில் தடவி 2 முதல் 3 மணி நேரத்திற்கு ஊற விடவும்.
*பிறகு, செம்பருத்தி ஷாம்பூ பயன்படுத்தி அலசிடவும்.
*வாரத்திற்கு 2 முறை இவ்வாறு செய்து வர, முடி விழுந்த இடத்தில், மீண்டும் வளருவதைக் காணலாம்.