அழகு குறிப்புகள்

டார்க் சாக்லேட் சாப்பிட்டா முடியே கொட்டாதாம்!!!

A
Admin User
1 min read
டார்க் சாக்லேட் சாப்பிட்டா முடியே கொட்டாதாம்!!!
Advertisement
Editor's Choice
Affiliate link

FLYNGO Touch Control LED Night Light Table Lamp for Bedroom, Living Room, and Study, with Adjustable Brightness, USB Rechargeable (A1)Plastic ,White

Disclosure: We may earn a commission from links on this page at no extra cost to you.

டார்க் பிளாக் சாக்லேட் என்பது சாக்லேட்டின் சற்று வித்தியாசமானது. இது கோகோ திடப்பொருட்கள், கோகோ வெண்ணெய் மற்றும் சர்க்கரை மேலும், வழக்கமான சாக்லேட்டில் காணப்படும் பால் ஆகியவை உள்ளன. அதுமட்டுமல்லாது, மற்ற சாக்லேட்களுடன் ஒப்பிட்டு பார்க்கும் போது டார்க் சாக்லேட் பல்வேறு வகையில் உடலுக்கு நன்மைகளிக்க கூடியது. குறிப்பாக, சருமம் மற்றும் கூந்தலுக்கு மிகவும் நல்லது. முடி உதிர்வு மற்றும் அதிகப்படியான முடி கொட்டும் பிரச்சனையை எதிர்கொள்பவர்களுக்கு சாக்லேட் உற்ற தோழன் என்றே கூறலாம். நம்ப முடியவில்லையா? அப்படியெனில் இந்த கட்டுரையை படியுங்கள் உங்களது சந்தேகம் விலகிவிடும்.

ஆராய்ச்சியாளர்கள் கூறுவது என்ன?

எலியின் மீது நடத்தப்பட்ட பரிசோதனையில் சுவாரஸ்யமான முடிவுகள் வெளிவந்துள்ளன. அதன்படி, முடி வளர்ச்சிக்கும், டார்க் சாக்லேட்டிற்குமான இணைப்பு தெரிய வந்துள்ளது. டார்க் சாக்லேட்டில் இருக்கும் அதிகப்படியான கோகோவில் உள்ள ப்ரான்தோசயனிடின், கூந்தல் வளர்ச்சியை ஊக்குவிப்பது தெரியவந்துள்ளது.

டார்க் சாக்லேட் என்ன செய்யும்?

முதலாவதாக, டார்க் சாக்லேட் கூந்தல் அடர்த்தியை அதிகரிக்க உதவும். இதற்கு அதிலுள்ள சில புரதங்கள் தான் காரணம். அவை செல் வளர்ச்சியை தூண்டுவதோடு, ஸ்கால்ப்பில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்க செய்து சிறந்த முடி வளர்ச்சியை பெற செய்திடும்.

பொலிவிழந்த கூந்தலுக்கு டார்க் சாக்லேட் மாஸ்க்

கூந்தலுக்கு பொலிவு மிக அவசியமான ஒன்று. எனவே, பொலிவிழந்த கூந்தலில் மீண்டும், பொலிவை கொண்டுவர டார்க் சாக்லேட் மாஸ்க் போடுவதே சிறந்தது. சிறிது இனிப்பில்லா டார்க் சாக்லேட் எடுத்துக்கொண்டு, அத்துடன் தேன் மற்றும் தயிர் சேர்த்து கலந்து கொள்ளவும். இப்போது தயார் செய்து வைத்துள்ள ஹேர் மாஸ்க்கை முடியில் தடவி அரை மணி நேரம் ஊற விடவும். பின்பு, சாதாரண தண்ணீரில் முடியை அலசிடவும். இந்த மாஸ்க் உங்கள் கூந்தலை மிருதுவாகவும், பளபளப்பாகவும் மாற்றிடுவதை நீங்களே பார்த்திடலாம்.

வறண்ட கூந்தலுக்கு சாக்லேட் ஆயில் மாஸ்க்

சிறிது டார்க் சாக்லேட்னடை தேங்காய் எண்ணெய் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். இப்போது அந்த கலவையை கூந்தலில் தடவி ஒரு மணி நேரத்திற்கு ஊற விடவும். பின்னர், வெதுவெதுப்பான் தண்ணீரில் கூந்தலை அலசிடவும். இப்படி செய்வதன் மூலம், இனி வறண்ட முடி என்ற பேச்சுக்கே இடமிருக்காது.

பொடுகை போக்கிட டார்க் சாக்லேட்

சிறிது கோகோ பவுடர் அல்லது டார்க் சாக்லேட் உடன் தேங்காய் எண்ணெய் மற்றும் க்ரீன் டீ சேர்த்து கலந்து கொள்ளவும். இந்த கலவை பொடுகை போக்குவதில் சிறந்து செயல்படும். இதிலுள்ள க்ரீன் டீ ஸ்கால்ப்பை சுத்தப்படுத்தவும். டார்க் சாக்லேட்டானது தேங்காய் எண்ணெய் உதவியுடன் வறண்ட ஸ்கால்ப்பிற்கு ஈரப்பதத்தையும் அளித்திட உதவுகிறது.

Advertisement

Read Next