முகப் பொலிவை அதிகரிக்க செய்யும் ரைஸ் வாட்டர் ஃபேஸ் மாஸ்க்...
Casio Youth Series Digital Black Dial Unisex Watch - F-91W-1Q(D002)
நெல் மணியில் இருந்து பெறப்படும் அரிசியானது சாப்பிடுவதற்கு மட்டுமல்ல, உங்கள் அழகை மேம்படுத்திடவும் பெரிதும் உதவிடுகிறது. அதிலும், அரிசி கூட வேண்டாம், அதனை ஊற வைத்த தண்ணீர் மட்டும் போதும் உங்கள் தலைமுடி மற்றும் முகத்தின் அழகை இரண்டு மடங்காக மேலும் உயர்த்திடும். முகத்திற்கு ஏற்படக்கூடிய பெரும்பாலான பிரச்சனைகளுக்கு அரிசி தண்ணீர் மட்டும் சிறந்ததொரு தீர்வாக அமைந்திடும். குறிப்பாக, முகத்தின் நிறத்தை அதிகரிக்க செய்வதில் அசிரி தண்ணீர் பயனுள்ளதாக இருக்கும். அதற்கு ரைஸ் ஃபேஸ் மாஸ்க் செய்து உபயோகித்து வந்தால் போதுமானது.
ரைஸ் ஃபேஸ் மாஸ்க் செய்வது எப்படி?
அரிசியைப் பயன்படுத்தி ஃபேஸ் மாக்ஸ் தயாரிக்க, முதலில் அரிசியை நன்கு கழுவி சுத்தம் செய்து செய்து கொள்ளவும். பின்னர், அதில் சிறிது நீர் ஊற்றி கொஞ்ச நேரம் ஊற வைக்கவும். இப்போது, இந்த தண்ணீரில் முகத்திற்கு உபயோகிக்கும் காட்டன் ஷீட்டை நனைத்து முகத்தில் வைத்துக் கொள்ளவும்.
இப்போது ரைஸ் ஃபேஸ் மாஸ்க் உபயோகிப்பதனால் கிடைக்கக்கூடிய நன்மைகளைப் பற்றி தெரிந்து கொள்வோம்…
சரும கருமையைப் போக்கும்
இன்றைய காலகட்டத்தில், அதிகரித்து வரும் மாசு மற்றும் சூரியக் கதிர் வீச்சினால், சருமத்தின் நிறம் மங்கி கருமையாகிறது. இந்த பிரச்சனையில் இருந்து விடுபட வேண்டுமானால், இரவில் தூங்குவதற்கு முன்பு ரைஸ் ஃபேஸ் மாஸ்க் போட்டு, பின் சாதாரண நீரில் முகத்தைக் கழுவவும். வாரத்திற்கு 2 முறை இப்படி தொடர்ந்து செய்து வந்தால் சரும கருமை நீங்குவதோடு, முகமும் பிரகாசமாக மாறிவிடும்.
சரும சுருக்கத்தைப் போக்கும்
அரிசி நீரில் செய்யப்பட்ட ஃபேஸ் மாஸ்க் வயதாவதால் ஏற்படக்கூடிய சரும சுருக்கங்களை எதிர்த்து போராட, இளமை தோற்றத்தை தந்திட உதவும். எனவே உங்களது சருமத்தில் அதுபோன்ற ஏதேனும் சுருக்கத்தை நீங்கள் பார்க்க நேர்ந்தால் உடனடியாக இந்த முறையை முயற்சி செய்து பாருங்கள். வாரம் ஒருமுறை இந்த ஷீட் மாஸ்க்கைப் போட்டு வந்தாலே போதுமானது.
எண்ணெய் பசையை நீக்கும்
உங்களுக்கு எண்ணெய் வழியும் சருமம் இருந்தால், நீங்கள் பல வகையான பிரச்சனைகளை அடிக்கடி சந்திக்க நேரிடலாம். எனவே, அவற்றில் இருந்து நிவாரணம் பெற ரைஸ் ஃபேஸ் மாஸ்க்கை பயன்படுத்தவும். சருமத்தில் தேங்கியுள்ள அதிகப்படியான எண்ணெய் பசையை நீக்கி, ஜொலிக்கும் சருமத்தைப் பெற்றிட உதவும். வாரத்திற்கு 2 நாட்கள் இதனை முயற்சி செய்து வாருங்கள்.
பளபளக்கும் சருமம்
அரிசி தண்ணீரால் செய்யப்பட்ட ஃபேஸ் ஷீட் மாஸ்க் உபயோகிப்பதன் மூலம் உங்கள் சருமத்தின் இழந்த பொலிவை மீண்டும் பெற்றிடலாம். இந்த ஃபேஸ் மாஸ்க்கை பகலில் எப்போது வேண்டுமானாலும் போட்டு, சுமார் 10 நிமிடங்களுக்குப் பிறகு அகற்றிடவும். அதன் பிறகு முகத்தை வெதுவெதுப்பான நீரில் கழுவவும். தொடர்ந்து செய்து வந்தால் சில வாரங்களுக்குப் பிறகு, சருமத்தில் உள்ள வித்தியாசத்தை நீங்கள் காணலாம்.