சமையல்

ஹோட்டல் ஸ்டைல் வெஜிடபிள் குருமா!!!

A
Admin User
1 min read
ஹோட்டல் ஸ்டைல் வெஜிடபிள் குருமா!!!
Advertisement
Editor's Choice
Affiliate link

FLYNGO Touch Control LED Night Light Table Lamp for Bedroom, Living Room, and Study, with Adjustable Brightness, USB Rechargeable (A1)Plastic ,White

Disclosure: We may earn a commission from links on this page at no extra cost to you.

வெஜிடபிள் குருமா சப்பாத்தி, பூரி, தோசை போன்றவற்றிற்கு பொருத்தமான சைடு டிஷ்ஷாக இருக்கும். இதை செய்வது மிகவும் சுலபம் தான். குழந்தைகள் காய்கறிகள் சாப்பிடவில்லை என்றால் இப்படி வெஜிடபிள் குருமா வைத்து கொடுங்கள். அதில் காய்கறிகளை தனியாக எடுத்து வைக்க முடியாது. இதில் காய்கறிகள் நன்கு மசிந்து விடும், சுவையும் அட்டகாசமாக இருக்கும். இன்று இரவு டின்னருக்கு சப்பாத்திக்கு இதை சைடு டிஷ்ஷாக செய்து பாருங்களேன்…

தேவையான பொருட்கள்

கேரட் - 1 கப் (பொடியாக நறுக்கியது)
பீன்ஸ் - 1 கப் (பொடியாக நறுக்கியது)
உருளைக்கிழங்கு - 1 கப் (பொடியாக நறுக்கியது)
பச்சை பட்டாணி - 1 கப்
காளிப்ளவர் - 1 கப்
பெரிய வெங்காயம் - 2 (பொடியாக நறுக்கியது)
தக்காளி - 2 (பொடியாக நறுக்கியது)
பச்சை மிளகாய் - 2
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 டேபிள் ஸ்பூன்
கொத்த மல்லி - சிறிதளவு
புதினா - சிறிதளவு
உப்பு - சுவைக்கேற்ப

அரைக்க…
தேங்காய் - அரை மூடி (துருவியது)
சோம்பு - 1 டீஸ்பூன்
முந்திரி - 6
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
மல்லி தூள் - 2 டேபிள் ஸ்பூன்
கரம் மசாலா - 1 டீஸ்பூன்

தாளிக்க…
எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்
பட்டை - 1
கிராம்பு - 3
ஏலக்காய் - 3
பிரியாணி இலை - 1
சோம்பு - அரை டீஸ்பூன்

செய்முறை

*முதலில் குக்கரை அடுப்பில் வைத்து சூடானதும், அதில் எண்ணெய் ஊற்றி தாளிக்க தேவையான பொருட்களை சேர்த்து தாளிக்கவும்.
*பின்னர், அதில் பச்சை மிளகாய் சேர்த்து அதன் வெளிப்புறம் வெள்ளையாக மாறும் வரை வதக்கிய பிறகு, நறுக்கிய வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும்.
*வெங்காயம் மென்மையாக வதங்கியதும் அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து, பச்சை வாசனை போன பிறகு தக்காளி சேர்த்து மென்மையாகும் வரை வதக்கவும்.
*பின்னர், அதில் கொத்தமல்லி, புதினா சேர்த்து கிளறியதும், அனைத்து காய்கறிகளையும் சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து வதக்கவும்.
*இப்போது, அரைக்க தேவையான பொருட்களை சிறிது நீருடன் மிக்சர் ஜாரில் சேர்த்து மைய அரைத்து கொள்ளவும்.
*காய்கறிகள் வதங்கியதும், அதில் அரைத்த தேங்காய் விழுது மற்றும் சிறிது நீர் சேர்த்து கிளறி விடவும். குருமா கொஞ்சம் கெட்டியாக இருந்தால் தான் சுவையாக நன்றாக இருக்கும்.
*பிறகு, குக்கரை மூடி வைத்து 3 விசில் விட்டு இறக்கினால் சுவையான ஹோட்டல் ஸ்டைல் வெஜிடபிள் குருமா ரெடி.

Advertisement

Read Next