சமையல்

வீட்டுலயே ஈஸியா பாப்கார்ன் சிக்கன் செய்யலாம் …

A
Admin User
1 min read
வீட்டுலயே ஈஸியா பாப்கார்ன் சிக்கன் செய்யலாம் …
Advertisement
Editor's Choice
Affiliate link

Casio Youth Series Digital Black Dial Unisex Watch - F-91W-1Q(D002)

Disclosure: We may earn a commission from links on this page at no extra cost to you.

வீட்டில் எப்போது பார்த்தாலும் ஒரே மாதிரியாக சமைத்து போர் அடித்தவர்களுக்கு உதவும் வகையில் இங்கு அட்டகாசமான பாப்கார்ன் சிக்கன் ரெசிபி கொடுத்துள்ளேன். சுபலமான இந்த ரெசிபியை டின்னர், ஈவினிங் ஸ்நாக்ஸாக செய்து கொடுத்தால், வீட்டில் உங்களுக்கு பாராட்டு மழை தான் பொழியும். இதை ட்ரை செய்து பாருங்கள். நிச்சயம் உங்களுக்கு பிடிக்கும்

தேவையான பொருட்கள்

சிக்கன் – 250 கிராம் (எலும்பில்லாதது)

மைதா மாவு – 2 டேபிள் ஸ்பூன்

முட்டை – 1

பிரட் க்ரம்ஸ் – 1 கப்

உப்பு – சுவைக்கேற்ப

இஞ்சி பூண்டு பேஸ்ட் – ¾ டீஸ்பூன்

மிளகு தூள் – ¼ டீஸ்பூன்

வெங்காய பவுடர் – ½ டீஸ்பூன் (தேவையானால்)

மிளகாய் தூள் – ¾ டீஸ்பூன்

எண்ணெய் – பொரிப்பதற்கு தேவையான அளவு

செய்முறை

*முதலில் சிக்கனை நன்கு கழுவி கொண்டு, சிறு சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளவும். அனைத்து துண்டுகளும் ஒரே அளவில் இருக்கும் படி பார்த்துக்கொள்ளுங்கள். அப்போது தான் பொரித்தெடுக்கும் போது ஒரே மாதிரியாக வேகும்.

*இப்போது ஒரு பாத்திரத்தில், மிளகாய் தூள், மிளகு தூள், இஞ்சி பூண்டு பேஸ்ட், உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். சுவை பார்த்து, உப்பு காரம் தேவைப்பட்டால் சேர்த்துக் கொள்ளலாம்.

*நறுக்கிய வைத்துள்ள சிக்கனை மசாலா கலவையுடன் சேர்த்து கலந்து கொள்ளவும்.

*அடுத்ததாக, சிக்கனை ஒவ்வொரு துண்டாக எடுத்து மைதாவில் நன்கு பிரட்டவும்.

*மைதாவில் பிரட்டிய சிக்கனை, அடித்து வைத்துள்ள முட்டையில் தோய்த்து எடுக்கவும்.

*அடுத்து, பிரட் க்ரம்ஸில் பிரட்டி எடுத்து வைத்துக் கொள்ளவும். இதே போல் அனைத்து சிக்கன் துண்டுகளையும் தயார் செய்து எடுத்து வைத்துக் கொள்ளவும்.

*இப்போது ஒரு வாணலியில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி, மிதமான தீயில் சூடேற்றவும்.

*எண்ணெய் சூடானதும், ஒவ்வொரு துண்டு சிக்கனாக எண்ணெய் சேர்க்கவும்.

*சிக்கனை எண்ணெயில் போட்டவுடன் 1 நிமிடத்திற்கு அதனை கரண்டியால் தொட வேண்டும். அப்படி செய்தால் பிரட் க்ரம்ஸ் எண்ணெய் உதிர்ந்து விடும்.

*அதன் பிறகு சிக்கனை கிளறி கொண்டே இருக்க வேண்டும். அப்போது தான் அனைத்து துண்டுகளும் ஒரே மாதிரியாக வேகும்.

*சிக்கன் துண்டுகள் அனைத்தும் பொன்னிறமாகும் வரை நன்கு பொரிய விடவும்.

*தயாரான சிக்கன் துண்டுகளை எடுத்து திசு பேப்பரில் வைக்கவும்.

*இப்போது சூடான பார்கார்ன் சிக்கனை கெட்சம் அல்லது சாஸ் உடன் பரிமாறலாம்.

Advertisement

Read Next