Tuesday, March 24, 2026
Logo
Menu
Follow Us
ஆரோக்கியம்

என்ன சாப்பிட்டாலும் பல்லு ரொம்ப கூசுதா? அப்ப இத ட்ரை பண்ணி பாருங்களேன்...

A
Admin User
Journalist
December 18, 2021 5 min read 60 views
என்ன சாப்பிட்டாலும் பல்லு ரொம்ப கூசுதா? அப்ப இத ட்ரை பண்ணி பாருங்களேன்...

ஒவ்வொரு முறையும் நீங்கள் எதையாவது கடிக்கும்போது, ​​உங்கள் பற்களில் ஒரு கூர்மையான உணர்ச்சியை உணர்கிறீர்களா? அது தான் பற்கூச்சம். பற்கூச்சமானது பலரை பாதிக்கும் ஒரு பொதுவான பல் பிரச்சனையாகும். ஒவ்வொரு முறையும் நீங்கள் குளிர்ச்சியாக, சூடாக எதாவது சாப்பிடும் போது உங்கள் பற்கள் வலித்தால், உங்களுக்கு பற்கூச்சம் இருப்பதாக அர்த்தம். இது அசௌகரியமாக இருக்கலாம். அதனால்தான் நீங்கள் விரைவில் அதற்காக சிகிச்சை பெற வேண்டும். பற்கூச்சத்திற்கான உடனடி நிவாரணம் அளிக்கக்கூடிய சில எளிய வீட்டு வைத்தியங்களை தான் இப்போது பார்க்க போகிறோம்…

உப்பு நீர்
பற்கூச்சத்திற்கான சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் மிகவும் பயனுள்ள தீர்வுகளில் ஒன்று தான் உப்பு நீர். இது மற்ற பல் பிரச்சனைகளுக்கும் பயன்படுத்தப்படும் ஒரு தீர்வாகும். உப்பு ஒரு ஆண்டிசெப்டிக் மற்றும் வீக்கத்தைக் குறைக்க உதவுகிறது. வலியைப் போக்க தினமும் இரண்டு முறை உப்பு நீரில் வாயைக் கொப்பளிக்க வேண்டும்.

பயன்படுத்தும் முறை:

ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான நீரில் அரை டீஸ்பூன் உப்பு சேர்த்து நன்கு கலக்கவும். இந்த உப்பு கரைசலை சுமார் 30 வினாடிகள் உங்கள் வாயில் வைத்து கொப்பளித்து பின்பு துப்பவும்.

தேன்
தேனில் பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் கிருமி நாசினி பண்புகள் உள்ளன. இது பற்கூச்சத்தை விரைந்து குணப்படுத்து உதவுகிறது. மேலும், வலி மற்றும் வீக்கத்தையும் குறைக்க உதவும். இது ஒரு பயனுள்ள தீர்வாகும்.

பயன்படுத்தும் முறை:

ஒரு டீஸ்பூன் தேனை எடுத்து வெதுவெதுப்பான நீரில் கலக்கவும். இப்போது, பற்கூச்சம் மற்றும் பற்களின் வலியைக் குறைக்க, இந்த தண்ணீரைப் பயன்படுத்தி உங்கள் வாயை கொப்பளித்து துப்பவும்.

மஞ்சள்
மஞ்சளில் குர்குமின் என்ற கலவை உள்ளது. இதில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளன. இது வலியை விரைந்து குணப்படுத்திடும். இது பற்கூச்சத்திற்கு ஒரு நல்ல வீட்டு வைத்தியம் மற்றும் செரிமான பிரச்சனைகளுக்கு சிகிச்சையளிக்கவும் இது பயன்படுகிறது.

பயன்படுத்தும் முறை:

1 டீஸ்பூன் மஞ்சள் தூள், அரை டீஸ்பூன் உப்பு மற்றும் அரை டீஸ்பூன் கடுகு எண்ணெய் ஆகியவற்றைப் பயன்படுத்தி பேஸ்ட் போல் கலந்து கொள்ளவும். இதனை பற்கள் மற்றும் ஈறுகளில் தடவவும். வலியைப் போக்க தினமும் இரண்டு முறை இதைச் செய்து வாருங்கள்.

கிரீன் டீ
கிரீன் டீயில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளன. அவை உங்கள் வாய் ஆரோக்கியம் உட்பட பல ஆரோக்கிய நன்மைகளை வழங்குகிறது.

பயன்படுத்தும் முறை:

க்ரீன் டீயைத் தயாரித்து, ஒரு நாளைக்கு இரண்டு முறை மவுத்வாஷாகப் பயன்படுத்தினால், பற்கள் வலுவடைந்து வீக்கத்தைக் குறைக்கும்.

பற்கூச்சத்தைத் தடுக்க போக்க உதவும் மற்ற குறிப்புகள்
வீட்டு வைத்தியத்தைப் பயன்படுத்துவதற்கு முன்பு, வலியைக் குறைக்க சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டியது அவசியம்.

*மென்மையான முட்கள் கொண்ட ப்ரஷைப் பயன்படுத்தி, உங்கள் பற்களை மெதுவாக துலக்கவும்
*பற்களை அதிகம் கடிக்கக்கூடாது
*அசிடிக் உணவுகள் உட்கொள்வதைக் குறைக்கவும்
*வாய் சுகாதாரத்தை முறையாக பின்பற்றவும்
*உங்கள் வாய் ஆரோக்கியத்தைப் பராமரிக்க உங்கள் பல் மருத்துவரிடம் தவறாமல் பரிசோதனைக்கு செல்லவும்

https://www.youtube.com/watch?v=ojBZfKp8rw0
Share this article
A
Admin User

Lifestyle Journalist

A passionate writer covering health, wellness, and cultural topics for the Tamil community.

தினசரி ஒரு நற்சிந்தனை

...

உடல் எடை கணக்கீடு

ஆரோக்கியமான வாழ்விற்கு உங்கள் பிஎம்ஐ (BMI) அளவை அறிந்து கொள்வது அவசியம்.

கணக்கிடு (BMI Test)
திருக்குறள் (Kural of the Day)

...

...

இன்றைய விலை
தங்கம் (22k)
1 கிராம்
₹13,000
தங்கம் (24k)
1 கிராம்
₹13,650
வெள்ளி
1 கிராம்
₹250
அடுத்த பண்டிகை (Next Festival)

தேடல்...

00
Days to go
உங்கள் கருத்து (Poll)

மன அழுத்தத்தைக் குறைக்க நீங்கள் என்ன செய்கிறீர்கள்?

Get Daily Updates

Subscribe for the latest news in your inbox.

அடுத்து வாசிக்க
ஆரோக்கியத்திற்கு சிறந்தது சைவமா அல்லது அசைவமா? இதோ முழுமையான அலசல்!
வாசிக்க