Tuesday, March 24, 2026
Logo
Menu
Follow Us
அழகு குறிப்புகள்

முடி அதிகமா உதிர்வதற்கு தவறான உணவு முறை கூட காரணமா இருக்கலாம்... அத முதல்ல சரி பண்ணுங்க...

A
Admin User
Journalist
December 10, 2021 7 min read 70 views
முடி அதிகமா உதிர்வதற்கு தவறான உணவு முறை கூட காரணமா இருக்கலாம்... அத முதல்ல சரி பண்ணுங்க...

பெண்கள், ஆண்கள் என அனைவருக்கும் இருக்கும் பொதுவாக கவலை என்றால் அது தலை முடி உதிர்வு. தற்போது ஏராளமான ஹேர் ப்ராடக்ட்ஸ் சந்தைகளில் கிடைக்கிறது. கண்ட கண்ட கெமிக்கல்கள் நிறைந்த ஷாம்பு, ஜெல், ஹேர் ஸ்ப்ரே பயன்படுத்துவது, போதிய பராமரிப்பு இல்லாதது என பல்வேறு காரணங்கள் தலைமுடி உதிர்வுக்கு காரணமாக இருக்கலாம். தலைமுடி உதிர்வுக்கு மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பார்க்கும் கலாச்சாரம் அதிகரித்து விட்டது என்றே சொல்லலாம். ஆனால், மருத்துவமனைக்கு செல்வதன் மூலம் அதற்கு எந்த நிரந்த தீர்வும் கிடைத்துவிட போவது கிடையாது. அதனால், பல்வேறு பக்கவிளைவுகளையும் சந்திக்க நேரிடலாம். எனவே, இதற்கு ஒரே வழி இயற்கை வழிமுறைகள் மட்டும். அதுவும், உங்கள் வீட்டு சமையலறையில் உள்ள பொருட்கள், தினந்தோறும் உண்ணும் உணவுகள் மூலமாகவே தலைமுடி சம்பந்தப்பட்ட அனைத்து பிரச்சனைகளையும் போக்கிட முடியும். வாருங்கள், இப்போது கூந்தல் வளர்ச்சியை தூண்டும் சில இயற்கை உணவு முறைகளை பற்றி தெரிந்து கொள்வோம்…

இயற்கையான கூந்தல் வளர்ச்சிக்கு நீங்கள் முயற்சிக்க வேண்டிய வீட்டு வைத்தியம்:

கற்றாழை ஜூஸ்

கற்றாழையில் நம் உடலுக்கு தேவையான அளவு புரோட்டியோலிடிக் என்சைம்கள் இருக்கிறது. இது இறந்த சரும செல்கள் மற்றும் முடியின் வேர்கால்களை சரிசெய்து, விரைவான கூந்தல் வளர்ச்சிக்கு வழிவகுக்கும். அதற்கு தினமும் காலை ஒரு டம்ளர் கற்றாழை ஜூஸ் குடிப்பது நல்லது.

பாதாம் மற்றும் வாழைப்பழ ஸ்மூத்தி

பாதாம் பருப்பில் புரதங்கள், வைட்டமின்கள் மற்றும் ஜிங்க் போன்ற தாதுக்கள் நிறைந்துள்ளதால். அது முடியின் ஆரோக்கியத்திற்கு சிறந்தது. மேலும், பாதாமில் காணப்படும் வைட்டமின் ஈ கெரட்டின் உற்பத்தியைத் தூண்டுவதன் மூலம் சேதமடைந்த முடியை சரிசெய்ய உதவிடும். நம் தலைமுடிக்கு ஊட்டமளிக்க அதிக அளவு கால்சியம் மற்றும் ஃபோலிக் அமிலத்தையும் வாழைப்பழம் வழங்குகிறது. அதற்கு பாதாம் மற்றும் வாழைப்பழத்துடன் சிறிது பால் சேர்த்து ஸ்மூத்தியாக தயாரித்து சில நட்ஸ், இலவங்கப்பட்டை தூள் மற்றும் தேன் சேர்த்து கலக்க பருகி வரவும்.

புரோட்டீன் நிறைந்த உணவுகள்

நமது முடி 95% கெரட்டின் மற்றும் 18 அமினோ அமிலங்கள் ஆகியவற்றால் ஆனது. எனவே, உங்கள் உணவில் புரதத்தை சேர்ப்பது உங்கள் தலைமுடியின் ஆரோக்கியத்தை பராமரிப்பதில் பெரிதும் உதவும். முட்டை, கோழி இறைச்சி, பால், சீஸ், நட்ஸ், தயிர், குயினோவா விதைகள் ஆகியவை புரதங்களின் சிறந்த ஆதாரங்கள். எனவே, அவற்றை உங்கள் அன்றாட உணவுகளில் தவறாமல் சேர்த்து கொள்ளுங்கள்.

பார்லி கஞ்சி

பார்லியில் இரும்புச்சத்து மற்றும் காப்பர் நிறைந்துள்ளது. இது இரத்த சிவப்பணுக்களின் உற்பத்தியைத் தூண்டுவதோடு, முடியின் வேர்க்கால்களையும் வலிமையாக்கும். கூந்தல் வளர்ச்சிக்கு இந்த அற்புதமான வீட்டு வைத்தியத்தை செய்வதற்கு பார்லியை தண்ணணீர் மற்றும் சிறிதளவு உப்பு சேர்த்து சுமார் அரை மணி நேரம் மிதமான தீயில் கொதிக்க விடவும். பின்னர் அதை இறக்கி, அத்துடன் சிறிது எலுமிச்சை தோல் மற்றும் சிறிது தேனையும் சேர்த்து பருகவும்.

வெந்தயம்

வெந்தயம் ஃபோலிக் ஆசிட், வைட்டமின் ஏ, வைட்டமின் கே, வைட்டமின் சி மற்றும் பொட்டாசியம், கால்சியம் மற்றும் இரும்பு போன்ற அத்தியாவசிய தாதுக்களைக் கொண்டுள்ளது. அதுமட்டுமல்ல, இது புரதத்தின் சிறந்த ஆதாரமாகவும் விளங்குகிறது. இந்த சத்துக்கள் அனைத்தும் முடி சம்பந்தப்பட்ட அனைத்து பிரச்சனைகளுக்கும் சிகிச்சையளித்து முடி வளர்ச்சியை அதிகரிக்கச் செய்கின்றன. எனவே, நீங்கள் ஒரு டீஸ்பூன் வெந்தயத்தை இரவில் தண்ணீரில் ஊறவைத்து, மறுநாள் காலையில் சாப்பிடலாம். இல்லையெனில், உங்கள் அன்றாட சமையலில் வெந்தயத்தை மறக்காம சேர்த்துக் கொள்ளலாம்.

கூந்தல் வளர்ச்சியை அதிகரிக்க இது போன்ற இயற்கை வீட்டு வைத்தியங்களையே எப்போதும் தேர்வு செய்யவும். இவற்றில் பல்வேறு சத்துக்கள் இருப்பதால், இந்த உணவுகள் கூந்தலுக்கு மட்டுமின்றி ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும்.

https://www.youtube.com/watch?v=ZnEZRroaTPk
Share this article
A
Admin User

Lifestyle Journalist

A passionate writer covering health, wellness, and cultural topics for the Tamil community.

தினசரி ஒரு நற்சிந்தனை

...

உடல் எடை கணக்கீடு

ஆரோக்கியமான வாழ்விற்கு உங்கள் பிஎம்ஐ (BMI) அளவை அறிந்து கொள்வது அவசியம்.

கணக்கிடு (BMI Test)
திருக்குறள் (Kural of the Day)

...

...

இன்றைய விலை
தங்கம் (22k)
1 கிராம்
₹13,000
தங்கம் (24k)
1 கிராம்
₹13,650
வெள்ளி
1 கிராம்
₹250
அடுத்த பண்டிகை (Next Festival)

தேடல்...

00
Days to go
உங்கள் கருத்து (Poll)

மன அழுத்தத்தைக் குறைக்க நீங்கள் என்ன செய்கிறீர்கள்?

Get Daily Updates

Subscribe for the latest news in your inbox.

அடுத்து வாசிக்க
பொதுவான முடி பராமரிப்பு தவறுகள்: ஆரோக்கியமான கூந்தலுக்கு அவற்றை சரிசெய்வது எப்படி?
வாசிக்க