உடலில் கொழுப்பைக் குறைக்க உணவில் இவற்றை சேர்த்துக்கோங்க…
Casio Youth Series Digital Black Dial Unisex Watch - F-91W-1Q(D002)
Home Remedies For High Cholesterol Levels: ஒவ்வொரு உடலிலும் நல்ல மற்றும் கெட்ட கொலஸ்ட்ரால் உள்ளது. சுறுசுறுப்பாக செயல்படவும் வைட்டமின்களை உற்பத்தி செய்யவும் உடலுக்கு நல்ல கொலஸ்ட்ரால் தேவைப்படுகிறது. அதுவே அளவிற்கு அதிகமாக இருந்தால், ஆரோக்கியத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். இது தமனிகளில் இரத்த ஓட்டத்தை குறைத்து, இதயத்தின் மீது அதிக அழுத்தத்தை ஏற்படுத்தும். இதயம் தொடர்பான பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும்.
அதிகப்படியான கொழுப்பை குறைக்க உதவும் வீட்டு வைத்தியங்கள்
ஒருவரது உணவுப்பழக்கம் மற்றும் அன்றாட வாழ்க்கை முறைகளில் சில மாற்றங்களை செய்வது, அதிகப்படியான கொழுப்பை எதிர்த்துப் போராட உதவும். பழங்கள் மற்றும் காய்கறிகளை உணவில் சேர்ப்பதைத் தவிர, கொழுப்பின் அளவைக் கட்டுக்குள் வைத்திருக்க ஒரு கப் கிரீன் டீயையும் சேர்த்துக் கொள்ளலாம்.
ஆய்வுகளின்படி, க்ரீன் டீயில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிரம்பியுள்ளன. அவை உடலில் உள்ள கெட்ட கொழுப்பின் அளவைக் கட்டுப்படுத்தி, உங்களை சுறுசுறுப்பாக்க உதவும்.
கொழுப்பின் அளவைக் கட்டுப்படுத்த உதவும் 5 பொருட்கள்
நம் வீட்டு சமையலறையில் இருக்கும் மசாலாப் பொருட்களில், பல ஆரோக்கிய நன்மைகள் நிரம்பியுள்ளன. இப்போது, உடலில் கொழுப்பின் அளவைக் கட்டுப்படுத்த உதவும் 5 பொருட்களைப் பற்றி தெரிந்து கொள்வோம்.
மஞ்சள்
ஆன்டி ஆக்ஸிடன்ட் நிறைந்த மஞ்சளில் குர்குமின் கலவை நிரம்பியுள்ளது. இது நாள்பட்ட அழற்சி நுரையீரல் நோய்கள், கணைய அழற்சி, குடல் பிரச்சனைகள், இதய அபாயங்கள் போன்ற நீண்டகால உடல்நலக் கோளாறுகளுக்கு சிகிச்சையளிப்பதில் பயனுள்ளதாக இருக்கும்.
மிளகு
சமையலறையில் உள்ள முக்கிய மசாலாவான, கருப்பு மிளகு பைபரின் நிரம்பியுள்ளது. சிறந்த ஆக்ஸிஜனேற்றியான இது, கொழுப்பின் அளவைக் கட்டுக்குள் வைத்திருக்க உதவுவதோடு, சிறந்த பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது. இது கொழுப்பு செல்களை உடைத்து, கொழுப்பின் அளவை கட்டுக்குள் வைக்க உதவிடும்.
இலவங்கப்பட்டை
இலவங்கப்பட்டை, நாள்பட்ட இதய நோய்களை நிர்வகிப்பது உட்பட பல ஆரோக்கிய நன்மைகளை கொண்டுள்ளது. இது ஆக்ஸிஜனேற்றத்தின் சிறந்த மூலமாகவும், இயற்கையான இன்சுலின் உற்பத்தியை ஆதரிக்கும் நுண்ணுயிர் எதிர்ப்பு பண்புகளையும் கொண்டுள்ளது. இதனால் இரத்தக் கொழுப்பை சுலபமாக குறைக்க உதவிடும்.
வெந்தயம்
வெந்தயத்தில் பல ஆரோக்கிய நன்மைகள் நிரம்பியுள்ளது. அவற்றில் ஒன்று கொலஸ்ட்ராலைக் கட்டுப்படுத்துவது. குடல் மற்றும் கல்லீரலில் உள்ள கொழுப்பை உறிஞ்சுவதை மெதுவாக்கும் பண்புகளைக் கொண்ட சில கலவைகள் வெந்தயத்தில் உள்ளன.
ஓமம்
ஓமம், உடலில் கொழுப்பின் அளவை சீராக பராமரிக்க உதவிடும். இது ஒரு கிருமி நாசினியாக பயன்படுத்தப்படுவதோடு, ஆக்ஸிஜனேற்ற பண்புகளையும் கொண்டுள்ளது. இது நோய்த்தொற்றுகளுக்கு எதிராக போராடவும், உடலின் கொலஸ்ட்ரால் அளவை சரியான முறையில் நிர்வகிக்கவும் உதவுகிறது.
டூத் பேஸ்ட் யூஸ் பண்ணி பளபளக்கும் சருமத்தை சுலபமாக பெறலாம், எப்படி தெரியுமா?
மென்மையான சருமத்தை பெற அன்றாட வாழ்வில் இந்த 5 விஷயங்களைத் தவறாமல் செய்தால் போதும்…