Tuesday, March 24, 2026
Logo
Menu
Follow Us
ஆரோக்கியம்

உயர் இரத்த அழுத்தம் இருக்குறவங்க இந்த உடற்பயிற்சி செஞ்சா மாரடைப்பு ஏற்பட வாய்ப்பிருக்காம்... உஷார்!!!

A
Admin User
Journalist
March 22, 2022 4 min read 67 views
உயர் இரத்த அழுத்தம் இருக்குறவங்க இந்த உடற்பயிற்சி செஞ்சா மாரடைப்பு ஏற்பட வாய்ப்பிருக்காம்... உஷார்!!!

உயர் இரத்த அழுத்த பிரச்சனை உள்ளவர்கள் கண்டிப்பாக உடற்பயிற்சி செய்ய வேண்டும். ஏனெனில், அது உங்கள் இரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைத்திருக்க உதவிடும். இருப்பினும், இரத்த அழுத்த நோயாளிகள் சில உடற்பயிற்சிகளைத் தவிர்க்க வேண்டும் என்பது பலருக்கும் தெரியாத ஒரு விஷயம். ஆம், ஏனெனில் குறிப்பிட்ட சில உடற்பயிற்சிகளை செய்வதன் மூலம், அவர்களின் இதயத்தில் அழுத்தத்தை உணரத் தொடங்குவார்கள் மற்றும் திடீரென்று மாரடைப்பு ஏற்படவும் இது வழிவகுக்கும். உயர் இரத்த அழுத்த பிரச்சனை உள்ளவர்கள் எந்தெந்த உடற்பயிற்சிகளைச் செய்யக்கூடாது என்பதைப் பற்றி தெரிந்து கொள்வோம்…

சொல்லப்போனால், உடற்பயிற்சி செய்யும் போது மிகக் குறுகிய காலத்திலேயே இரத்த அழுத்தமானது மிக வேகமாக அதிகரிக்க செய்யும் பயிற்சிகளைத் தவிர்த்தே ஆக வேண்டும். உயர் இரத்த அழுத்த நோயாளிகளுக்கு இதுபோன்ற உடற்பயிற்சி வாழ்க்கையின் எதிரியாக மாறும். உதாரணத்திற்கு, பளு தூக்குதல், வேகமாக ஓடுதல், ஸ்கூபா டைவிங், ஸ்கை டைவிங், ஸ்குவாஷ் போன்றவற்றை உயர் இரத்த அழுத்த பிரச்சனை உள்ளவர்கள் செய்யக்கூடாது. அதே நேரத்தில், உயர் இரத்த அழுத்த உள்ளவர்கள் தலை சுற்றல் பிரச்சனை இருந்தாலோ, அதிகப்படியான வலி, அதிக சோர்வு அல்லது இவற்றைத் தவிர வேறு ஏதேனும் உடற்பயிற்சி செய்யும் போது வாந்தி எடுத்தாலோ, உடனே அந்த உடற்பயிற்சி செய்வதை நிறுத்திவிட்டு மருத்துவரை அணுக வேண்டியது அவசியம்.

உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்கள் செய்ய வேண்டிய உடற்பயிற்சிகள்

  • நடைபயிற்சி
  • ஜாகிங்
  • லேசான வேகத்தில் ஸ்கிப்பிங்
  • ஏரோபிக்ஸ் உடற்பயிற்சி
  • நடனம், போன்றவை.

உயர் இரத்த அழுத்தம் உள்ளவர் உடற்பயிற்சி செய்யும் போது மனதில் வைத்து கொள்ள வேண்டியவை

  • மெதுவாக உடற்பயிற்சி செய்ய தொடங்குங்கள்.
  • இரத்த அழுத்தம் அதிகரித்தால், மெதுவாக உடற்பயிற்சியை நிறுத்தி விடவும்.
  • உங்கள் உடலில் முழு கவனம் செலுத்த வேண்டும்.
  • அதிக மன அழுத்தம் மற்றும் கடுமையான உடற்பயிற்சி செய்யவே கூடாது.
  • நீண்ட நேரம் உடற்பயிற்சி செய்யக்கூடாது.

Share this article
A
Admin User

Lifestyle Journalist

A passionate writer covering health, wellness, and cultural topics for the Tamil community.

தினசரி ஒரு நற்சிந்தனை

...

உடல் எடை கணக்கீடு

ஆரோக்கியமான வாழ்விற்கு உங்கள் பிஎம்ஐ (BMI) அளவை அறிந்து கொள்வது அவசியம்.

கணக்கிடு (BMI Test)
திருக்குறள் (Kural of the Day)

...

...

இன்றைய விலை
தங்கம் (22k)
1 கிராம்
₹13,000
தங்கம் (24k)
1 கிராம்
₹13,650
வெள்ளி
1 கிராம்
₹250
அடுத்த பண்டிகை (Next Festival)

தேடல்...

00
Days to go
உங்கள் கருத்து (Poll)

மன அழுத்தத்தைக் குறைக்க நீங்கள் என்ன செய்கிறீர்கள்?

Get Daily Updates

Subscribe for the latest news in your inbox.

அடுத்து வாசிக்க
ஆரோக்கியத்திற்கு சிறந்தது சைவமா அல்லது அசைவமா? இதோ முழுமையான அலசல்!
வாசிக்க