அழகு குறிப்புகள்

நீளமான, அடர்த்தியான முடி வேணும்னா மருதாணி கூட இத மிக்ஸ் பண்ணி யூஸ் பண்ணுங்க...

A
Admin User
1 min read
நீளமான, அடர்த்தியான முடி வேணும்னா மருதாணி கூட இத மிக்ஸ் பண்ணி யூஸ் பண்ணுங்க...
Advertisement
Editor's Choice
Affiliate link

Casio Youth Series Digital Black Dial Unisex Watch - F-91W-1Q(D002)

Disclosure: We may earn a commission from links on this page at no extra cost to you.

பெண்கள் என்றாலே அழகு தான். அதிலும், பெண்களின் அழகை மேம்படுத்தும் அனைத்து பொருட்களுமே அழகு சாதனப்பொருட்கள் தான். அந்த வரிசையில் பெண்களின் கை மற்றும் கால்களுக்கு அழகு சேர்க்கும் மருதாணியும் இடம் பெறுகிறது. மருதாணி அழகை மேம்படுத்து மட்டுமல்ல கூந்தலுக்கு வலு சேர்ப்பதிலும் சிறந்தது. மருதாணி இயற்கையாகவே கூந்தலின் நிறத்தை மாற்றுவதோடு, கூந்தலை அடர்த்தியாக வளரவும் செய்யும். இளநரை உள்ளவர்கள் மருதாணியை தொடர்ந்து பயன்படுத்தி வர வெள்ளை முடிகள் தெரியாமல் கூந்தல் இயற்கையான நிறத்தைப் பெற்றிடும். மருதாணியைத் தலைக்கு தேய்ப்பதால் கூந்தல் பொலிவாவதோடு, நீளமாகவும் வளரும். உங்களுக்கு நீளமான, அடர்த்தியான முடி வேண்டுமானால், மருதாணியுடன் சில பொருட்களை சேர்ந்து தேய்த்தால் பயனுள்ளதாக இருக்கும். இப்போது இந்த கட்டுரையில் மருதாணியுடன் எவற்றை கலந்து தேய்த்தால் ஆரோக்கியமான கூந்தலைப் பெற்றிடலாம் என்பதை தெரிந்து கொள்வோம்…

கூந்தல் ஆரோக்கியத்தில் மருதாணி

இயற்கை கண்டிஷனர்

கூந்தல் பிரச்சனையால் நீங்கள் மிகவும் சிரமப்படுகிறீர்கள் என்றால், மருதாணியை தடவினால் உங்கள் பிரச்சனைகள் அனைத்தும் முடிவுக்கு வரும். மருதாணி இயற்கையான கண்டிஷனராக செயல்படுகிறது. இது உங்கள் தலைமுடியை பட்டுப்போல மாற்றுவது மட்டுமல்லாமல், கூந்தல் வளர்ச்சியையும் அதிகரிக்க செய்திடும்.

மருதாணி மற்றும் பிளாக் டீ

உங்களுக்கு முடி நீளமாகவும் அடர்த்தியாகவும் இருக்க விரும்பினால், மருதாணியில் டீ டிகாக்ஷனை கலந்து இரவு முழுவதும் ஊறவைத்திடவும். அதை காலையில் எழுந்து முடியில் தடவவும். வாரத்திற்கு ஒரு முறை இப்படி செய்து வந்தால் கூந்தல் வளர்ச்சி மேம்படும்.

மருதாணியும், வெந்தயமும்

மருதாணி பயன்படுத்துவதன் மூலம், உங்கள் முடி நீளமாக வளரத் தொடங்கும். அதே சமயம் அதில் வெந்தய விதைகளை அரைத்து கலந்து உபயோகிப்பதன் மூலம் அதன் பலனை விரைவில் பெற ஆரம்பிக்கலாம்.

மருதாணி, தயிர், எலுமிச்சை

உங்களுக்கு பொடுகு தொல்லை இருந்தால் மருதாணியை தயிருடன் கலந்து, அதனுடன் எலுமிச்சைச் சாறு சேர்த்துக் குடித்தால், பொடுகுத் தொல்லையில் இருந்து விரைவில் விடுபடலாம்.

அடர்த்தியான கூந்தல்

தலைமுடியை சீரமைப்பதில் மருதாணி முக்கிய பங்கு வகிக்கிறது. இதைத் தொடர்ந்து பயன்படுத்தினால், உங்கள் முடி அடர்த்தியாகவும் வலுவாகவும் மாறும். இது வறண்ட முடியின் வேர்க்கால்களை மென்மையாக்கி, அதனை பிரகாசமாக ஜொலிக்க செய்திடும்.

மருதாணி ஹேர் பேக்

மருதாணியுடன் தயிர், நெல்லிக்காய் பொடி, வெந்தய பொடி ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து கலந்து, அந்த கலவையை முடியில் தடவவும். சுமார் 1 முதல் 2 மணி நேரம் வரை இதை தலைமுடியில் வைத்திருந்த பின் முடியைக் அலசிடவும். ஏனெனில் இப்படி செய்வதால் முடி கருப்பாகவும், அடர்த்தியாகவும், பளபளப்பாகவும் மாறிடும்.

Advertisement

Read Next