த்ரெட்டிங் செய்த பிறகு எரிச்சல் அல்லது வீக்கம் அதிகமா இருக்கா? அப்ப இத ட்ரை பண்ணுங்க...
Casio Youth Series Digital Black Dial Unisex Watch - F-91W-1Q(D002)
பெரும்பாலான பெண்கள் த்ரெடிங் எனும் புருவங்களை அழகுப்படுத்தி கொள்வதை விரும்புகிறார்கள். இவ்வாறு செய்வது தங்களை மேலும் அழகாக்கும் என்பதற்காக அதைச் செய்கிறார்கள். இருப்பினும், அதைச் செய்த பிறகு, பல பெண்களுக்கு எரிச்சல் மற்றும் வீக்கம் போன்ற பிரச்சனைகள் தொடங்குகின்றன. ஆம் இதற்குக் காரணம் த்ரெடிங் செய்யும் போது சில முக்கியமான விஷயங்களில் கவனம் செலுத்தாமல் இருப்பது தான். எனவே, இனி நீங்கள் த்ரெடிங் செய்வதற்கு முன்பு மனதில் கொள்ள வேண்டிய சில முக்கியமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பற்றி தான் இந்த கட்டுரையில் தெரிந்து கொள்ள போகிறோம்…
ஐஸ் கட்டி
நீங்கள் வீட்டிலோ அல்லது பார்லருக்கு சென்றோ த்ரெடிங் செய்வதற்கு முன்னதாக முதலில், உங்கள் புருவங்களில் ஐஸ் கட்டிகளைக் கொண்டு சிறிது நேரம் தேய்க்க வேண்டும். இவ்வாறு செய்வதால் த்ரெடிங் செய்யும் போது அதிக வலி மற்றும் எரிச்சல் ஏற்படாது. ஒரு வேளை, த்ரெடிட் செய்யும் இடத்தில் ஐஸ் கட்டி எதுவும் இல்லை என்றால், நீங்கள் குளிர்ந்த நீரில் முகத்தை கழுவலாம். த்ரெடிங் செய்த பின்னரும் முகத்தைக் கழுவிடவும்.
கற்றாழை ஜெல்
சில பெண்களுக்கு த்ரெடிங் செய்த பிறகு எரிச்சல், வீக்கம் போன்ற பிரச்சனைகள் ஏற்பட தொடங்கும். உங்களுக்கு அத்தகைய பிரச்சனை இருந்தால், எரிச்சல் மற்றும் வீக்கம் உள்ள இடத்தில் கற்றாழை ஜெல்லை தேய்த்து மசாஜ் செய்தால், உடனடி பலனளிக்கும்.
டோனர்
இலவங்கப்பட்டை டோனரும் த்ரெடிங் செய்வதால் ஏற்படக்கூடிய பிரச்சனைகளுக்கு சிறந்த தீர்வினைத் தரும். எனவே, த்ரெடிங் செய்வதற்கு முன்பு, உங்கள் புருவங்களில் இலவங்கப்பட்டை டீ டோனரை ஸ்ப்ரே செய்ய வேண்டும். ஏனெனில் இவ்வாறு செய்வதன் மூலம், புருவங்களின் முடிகள் விரைவாக வெளியேறுவதோடு, மேலும் உங்களுக்கு வலியும் குறைவாகவே இருக்கும். எனவே, இனி த்ரெடிங் வலி குறித்த கவலையே வேண்டாம்.
த்ரெடிங், ப்ளீச் ஒன்றாக செய்ய வேண்டாம்
பெரும்பாலான பெண்கள் த்ரெடிங் செய்த உடனேயே ஃபேஷியல் ப்ளீச் செய்கின்றனர். ஆனால், இது தவறான செயல். இப்படி செய்வதால் புருவங்களைச் சுற்றியுள்ள பகுதிகளில் எரிச்சல், வீக்கம் போன்ற பிரச்சனைகள் மேலும் அதிகரித்துவிடும். எனவே, இனி த்ரெடிங் செய்ய போகிறீர்கள் என்றால், அதற்கு ஒரு நாள் முன்னதாகவோ அல்லது ஒரு நாள் கழித்தோ ப்ளீச் செய்யுங்கள்.