அழகு குறிப்புகள்

நீங்க எப்போதும் இளமையா தெரியுனும்னா இந்த டிப்ஸ் ஃபாலோ பண்ணுங்க…

A
Admin User
1 min read
நீங்க எப்போதும் இளமையா தெரியுனும்னா இந்த டிப்ஸ் ஃபாலோ பண்ணுங்க…
Advertisement
Editor's Choice
Affiliate link

Casio Youth Series Digital Black Dial Unisex Watch - F-91W-1Q(D002)

Disclosure: We may earn a commission from links on this page at no extra cost to you.

Tips to look young forever: பொதுவாக யாரும் தங்களது வயதை வெளியே கூற தயங்குவார்கள். அதிலும், வயது அதிகமாகிறது என்பதை ஏற்றுக்கொள்வதே சிலருக்கு கடினமாக இருக்கும். குறிப்பாக, பெண்கள் தங்களை எப்போதும் இளமையாக காட்டிகொள்வதற்காக முடிந்ததை முயற்சி செய்து கொண்டே இருப்பார்கள். இனி கவலை வேண்டாம். உங்களை எப்போதும் இளமையாக வைத்துக் கொள்ள இங்கே கூறப்பட்டிருக்கும் விஷயங்களை முயற்சி செய்தாலே போதும். வயதானாலும், என்றும் இளமை தோற்றத்துடன் உங்களால் ஜொலிக்க முடியும்.

இளமை தோற்றத்தைப் பராமரிக்க பின்பற்ற வேண்டியவை

கைகள்

அழகு என்று வந்தால் முகத்திற்கு மட்டுமே அனைவரும் கவனம் செலுத்தி, கைகளைப் புறக்கணித்து விடுவார்கள். இது மிகவும் தவறான ஒன்று. முகத்தைப் போலவே கைகளை அழகுப்படுத்துவதிலும் கவனம் செலுத்த வேண்டியது அவசியம்.

புருவங்கள்

இளமையாக இருக்க விரும்பும் ஒவ்வொருவரும், தங்கள் புருவங்களை எப்போதும் அழகாக பராமரிக்க வேண்டியது அவசியம். இது உங்களை எப்போதும் இளமையாக காட்டும்.

சரியான மேக்கப் பொருட்களைத் தேர்ந்தெடுப்பது

பிறர் வாங்குகிறார்கன் என எந்தவொரு மேக்கப் பொருட்களையும் வாங்க நினைக்காதீர்கள். ஏனெனில், உங்கள் சருமம் வேறு அவர்கள் சருமம் வேறு. உங்கள் சருமத்திற்கு தேவையான அழகு சாதன பொருட்களை மட்டும் தேர்ந்தெடுத்து வாங்க வேண்டும்.

ஃபவுண்டேஷன்

நீங்கள் ஃபவுண்டேஷன் உபயோகிப்பவர்களாக இருந்தால், லைட் முதல் மீடியம் வரையிலான ஃபவுண்டேஷனை தேர்ந்தெடுங்கள். இதனால், நீங்கள் இளமையான தோற்றத்தைப் பெறலாம். டார்க் நிற ஃபவுண்டேஷன் உங்களை வயதானவராக காட்டும்.

க்ரீம் ப்ளஷ்

ப்ளஷ் பயன்படுத்தும் பழக்கமுடையவர்கள் தங்களை இளமையாக காட்டுக்கொள்ள, க்ரீம் ப்ளஷ் பயன்படுத்துவது சிறந்தது. இது முகத்தை இளமையாக காட்டிடும்.

ரோஸ் வாட்டர்

ரோஸ் வாட்டர் பயன்படுத்துவது முகத்தைப் புத்துணர்ச்சியுடன் மாற்றிடும். எனவே, தினமும் ரோஸ்வாட்டரை உங்கள் முகத்தில் தடவி வந்தால் இளமை தோற்றம் ஏற்படுவதைத் தடுத்திடலாம்.

கண் பராமரிப்பு

தினசரி வாழ்வின் மனஅழுத்தம் உங்களின் கண்களில் அழகை கெடுத்துவிடும். எனவே, பயன்படுத்திய டீ பேக்குகளை கண்களின் மீது சிறிது நேரம் வைத்திருப்பதன் மூலம் கண்களை சுற்றியுள்ள சுருக்கங்கள் நீங்கிடும்.

முக யோகா பயிற்சி

முகத்திற்கான யோகாபயிற்சி செய்வது, சருமத்தை உறுதிப்படுத்தவும், சரும சுருக்கங்களை தடுக்கவும் பெரிதும் உதவிடும். எனவே, எப்போதும் இளமையாக இருக்க வேண்டுமெனில் யோகா பயிற்சியை மேற்கொள்ளுங்கள்.

உதடு

நீங்கள் மேக்கப் போடும் பழக்கம் இல்லாதவர் என்றால், உங்கள் உதடுகளுக்கு மட்டும் கூடுதல் கவனம் செலுத்துங்கள். மேக்கப் போடாவிட்டாலும், உங்கள் உதடுகளை மட்டும் எப்போதும் ஈரப்பதத்துடன் வைத்திருங்கள். இது முகத்தின் ஒட்டுமொத்த அழகையும் மேம்படுத்தி காட்டிடும்.

என்ன செய்தாலும் உங்கள் தலைமுடியில் ஒருவித துர்நாற்றம் வீசுகிறதா? அப்ப இத ட்ரை பண்ணுங்க…

ரஷ்ய பெண்களின் அழகு பராமரிப்பு ரகசியம் என்ன தெரியுமா?

பவுடர், க்ரீம் எதுவும் வேண்டாம்… தினமும் இதை செய்யுங்க முகம் பளபளன்னு ஜொலிக்கும்…

Advertisement

Read Next