Tuesday, March 24, 2026
Logo
Menu
Follow Us
ஆன்மீகம்

மே 15 முதல் இந்த ராசிக்காரர்களின் வாழ்வில் மிகப் பெரிய மாற்றங்கள் ஏற்படப் போகின்றன...

A
Admin User
Journalist
May 06, 2022 7 min read 48 views
மே 15 முதல் இந்த ராசிக்காரர்களின் வாழ்வில் மிகப் பெரிய மாற்றங்கள் ஏற்படப் போகின்றன...

சூரியபகவான் மே 15ம் தேதி 2022, ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 05:45 மணி அளவில் ரிஷப ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். இவர் ஜூன் 15ம் தேதி வரை அங்கேயே இருக்க போகிறார். பின்னர், ஜூன் 15 அன்று மதியம் 12:19 மணிக்கு ரிஷப ராசியிலிருந்து மிதுன ராசிக்கு மாறுகிறார். ஒவ்வொரு கிரக நிலைகளின் அடிப்படையில் 12 ராசிகளுக்குமான பலன்கள் கணிக்கப்படுகின்றன. அந்த வகையில், ஜூன் 15ம் தேதி வரை சூரியன் ரிஷப ராசியில் இருக்கும் இந்த காலக்கட்டத்தில் 12 ராசிகளுக்குமான பலன்கள் வேறுபடும். எனவே, சூரியனின் இந்த ராசி மாற்றத்தால் எந்த 6 ராசிக்காரர்களுக்கு பொற்காமாக அமைய போகிறது என்று கூட கூறலாம். சரி, இப்போது சூரிய பெயர்ச்சியால் சிறப்பான பலனைப் பெற போகும் ராசிக்காரர்களைப் பற்றி இந்த கட்டுரையில் தெரிந்து கொள்வோம்…

மேஷம்

சூரியன் உங்கள் ராசிக்கு இரண்டாம் வீட்டில் சஞ்சரிக்கிறார். நிதி ரீதியாக, இந்த காலக்கட்டத்தில் உங்களுக்கு மிகவும் சாதகமாக இருக்கும். மேலும், இந்தக் காலகட்டத்தில் குடும்பச் சண்டைகளில் இருந்து விலகி இருக்க அறிவுறுத்தப்படுகிறது. மேலும், உங்களது தொழிலிலும் உங்களுக்கு மகத்தான வெற்றி கிடைக்கும். புதிய வருமான ஆதாரத்தை உருவாக்குவதிலும் நீங்கள் வெற்றி பெறலாம். சுருக்கமாக சொல்ல வேண்டுமென்றால், இந்த நேரத்தில் தொட்ட காரியம் அனைத்திலும் உங்களுக்கு வெற்றி கிட்டும்.

ரிஷபம்

சூரியன் உங்கள் ராசியின் முதலாம் வீட்டில் சஞ்சரிக்க போகிறால். இந்த நேரத்தில் நீங்கள் வேலையில் நீண்ட காலமாக எதிர்பார்த்து காத்திருந்த பதவி உயர்வைப் பெறலாம். வணிகர்கள், தங்கள் கடின உழைப்பின் பலனாக நல்ல லாபத்தைப் பெற்றிட முடியும். புதிதாக தொடங்கிய தொழிலிலும் உங்களுக்கு வெற்றி உண்டாகும். அதுதவிர, உங்களது பொருளாதார நிலையும் மேம்படும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். இந்த பெயர்ச்சி காலம் உங்களுக்கு மகிழ்ச்சியான காலமாக இருக்கப் போகிறது.

கடகம்

சூரியன் உங்கள் ராசிக்கு 11வது வீட்டில் சஞ்சரிக்க போகிறார். இந்த சூரிய பெயர்ச்சியால் உங்கள் நிதி நிலை வலுவாக இருக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு பதவி உயர்வு கிடைக்க வாய்ப்பு உண்டு. சொந்தமாக தொழில் தொடங்க விரும்பினால், இந்த நேரத்தில் உங்கள் கனவு நனவாகும். மேலும், புதிய தொழிலில் முதலீட்டின் மூலம் நல்ல லாபம் பெறுவீர்கள். சமூகத்தில் உங்கள் கௌரவம் உயரும். உங்களை மதிக்காத சொந்தபந்தங்களும், உங்களின் வெற்றியால் மீண்டும் தேடி வரக்கூடும்.

சிம்மம்

சூரியன் உங்கள் ராசிக்கு 10ம் வீட்டில் சஞ்சரிக்க போகிறார். சூரியனின் ராசி மாற்றத்தின் தாக்கத்தால் அலுவலகத்தில் உங்கள் மீதான மரியாதையும் பாராட்டும் அதிகரிக்கும். அலுவலகத்தில் உத்தியோகஸ்தர்கள் முன்னேற்றம் அடைய வாய்ப்பு உண்டு. தொழில் ரீதியான நீண்ட தூர பயணத்திற்கான வாய்ப்புகளும் உண்டு. இந்த பயணம் உங்கள் வாழ்வின் மறக்க முடியாத பயணமாக அமைய போகிறது. பெரியதொரு முன்னேற்றத்திற்கு இந்த பயணம் வித்திடலாம். எனவே, எதற்கும் தயாராக இருங்கள்.

கன்னி

சூரியன் உங்கள் ராசிக்கு ஒன்பதாம் வீட்டில் சஞ்சரிக்கிறார். இந்த நேரத்தில் அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவையும் நீங்கள் பெறுவீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு புதிய பெரிய வாய்ப்புகள் கிடைக்கும். வியாபாரிகள் இந்த காலக்கட்டத்தில் எதிர்பார்த்த லாபத்தைப் பெற்றிடுவார்கள். இதனால் உங்கள் நிதி நிலை மேலோங்கும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடைபெற வாய்ப்புள்ளது. குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி மேலோங்கும். புதிய உறுப்பினரின் வருகை இருக்கக்கூடும்.

மீனம்

மீன ராசிக்காரர்களின் மூன்றாவது வீட்டில் சூரியன் சஞ்சரிக்க போகிறார். இதன் காரணமாக, நீண்ட காலமாக தடைப்பட்ட உங்கள் வேலைகள் இந்த காலக்கட்டத்தில் சிறப்பாக முடிவடையும். சண்டை சச்சரவுகள் தீரும். படித்து முடித்து வேலை தேடுபவர்கள் நல்ல வேலை வாய்ப்புகளைப் பெறுவீர்கள். வியாபாரத்தில் உங்களுக்கு கலவையான பலன்களைப் பெறலாம். புதிய முதலீடு செய்வதற்கான வாய்ப்புகளும் உங்களைத் தேடி வரும். எந்த முடிவாக இருந்தாலும் பெரியவர்களின் ஆலோசனையைப் பெற்று செயல்பட்டால் நல்ல பலன் கிடைக்கும்.

Share this article
A
Admin User

Lifestyle Journalist

A passionate writer covering health, wellness, and cultural topics for the Tamil community.

தினசரி ஒரு நற்சிந்தனை

...

உடல் எடை கணக்கீடு

ஆரோக்கியமான வாழ்விற்கு உங்கள் பிஎம்ஐ (BMI) அளவை அறிந்து கொள்வது அவசியம்.

கணக்கிடு (BMI Test)
திருக்குறள் (Kural of the Day)

...

...

இன்றைய விலை
தங்கம் (22k)
1 கிராம்
₹13,000
தங்கம் (24k)
1 கிராம்
₹13,650
வெள்ளி
1 கிராம்
₹250
அடுத்த பண்டிகை (Next Festival)

தேடல்...

00
Days to go
உங்கள் கருத்து (Poll)

மன அழுத்தத்தைக் குறைக்க நீங்கள் என்ன செய்கிறீர்கள்?

Get Daily Updates

Subscribe for the latest news in your inbox.

அடுத்து வாசிக்க
பிரார்த்தனையின் சக்தி: தினசரி வழிபாடு வாழ்க்கையை மாற்றியமைப்பது எப்படி?
வாசிக்க