Tuesday, March 24, 2026
Logo
Menu
Follow Us
ஆரோக்கியம்

கோடைகாலத்தில கூல் டிரிங்ஸ் குடிப்பது உடலுக்கு நல்லது இல்ல, ஏன் தெரியுமா?

A
Admin User
Journalist
April 19, 2022 4 min read 51 views
கோடைகாலத்தில கூல் டிரிங்ஸ் குடிப்பது உடலுக்கு நல்லது இல்ல, ஏன் தெரியுமா?

கோடை காலத்தில், கோடை வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க மக்கள் பெரும்பாலும் குளிர்ச்சியான பானங்களை குடிக்கவே பெரிதும் விரும்புகிறார்கள். கடுமையான வெயிலில் வெளியே சென்று வந்த பிறகு அனைவருமே குளிர்ச்சியாக குடிக்க விரும்புவது இயற்கை. அப்படி குடிப்பது வெயிலின் எரிச்சனை குறைத்து, ஒருவித குளுமையை உடலிற்கும் மனதிற்கும் தந்திடும். அப்படி குடிக்கும் குளிர்பானம் குளிர்ச்சியாக இருப்பது மட்டுமின்றி, நாவிற்கு சுவையாகவும் இருப்பது அதன் கூடுதல் சிறப்பு என்றே கூறலாம். இதனால் மக்கள் கோடைகாலத்தில் ஒரு நாளைக்கு 3-4 முறை குளிர் பானங்களை குடிக்கின்றனர். இருப்பினும், இது உடலுக்கு ஆரோக்கியத்திற்கும் சிறிதும் நல்லதல்ல. கோடையில் குளிர்பானங்கள் குடிப்பது உங்கள் ஆரோக்கியத்திற்கு பெரும் தீங்கு விளைவிக்கும். கோடையில் குளிர்பானங்களை உட்கொள்வது உங்கள் ஆரோக்கியத்திற்கு எவ்வாறு தீங்கு விளைவிக்கும் என்பதை இப்போது தெரிந்து கொள்வோம்.

எடை அதிகரிப்பு
நீங்கள் அதிக அளவில் குளிர் பானங்களை பருகுபவராக இருந்தால், உங்கள் எடை வேகமாக அதிகரிக்கும். ஒரு கிளாஸ் குளிர் பானத்தில் எட்டு முதல் 10 டீஸ்பூன் அளவிற்கு சர்க்கரை உள்ளது. மேலும் ஒரு கிளாஸ் குளிர் பானத்தில் சுமார் 150 கலோரிகள் உள்ளன. அத்தகைய சூழ்நிலையில், ஒவ்வொரு நாளும் பல கலோரிகளை உட்கொள்வது உங்கள் எடையை அதிகரிக்க செய்வதோடு, ஆரோக்கியம் தொடர்பான பல பிரச்சனைகளையும் ஏற்படுத்துகிறது.

கல்லீரல் கொழுப்பு பிரச்சனை
குளிர் பானங்களை அதிகமாக பருகுவது உங்கள் உடலில் கல்லீரலில் கொழுப்புகளை சேர செய்து பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும். உண்மையில், இதில் குளுக்கோஸ்-பிரக்டோஸ் காணப்படுகிறது. குளுக்கோஸ் உடலில் உடனடியாக வளர்சிதைமாற்றம் செய்யப்படுகிறது. இது மட்டுமல்ல, பிரக்டோஸ் கல்லீரலில் மட்டுமே குவிந்து, உங்கள் கல்லீரலைப் பெரிதும் பாதிக்கிறது. இது உங்களுக்கு கல்லீரல் தொடர்பான நோய்கள் ஏற்படுவதற்கான ஆபத்தை அதிகரிக்க செய்திடும்.

பற்களைப் பாதிக்கும்
சில ஊடக அறிக்கைகளின்படி, குளிர் பானங்கள் பற்களை அதிக அளவில் பாதிப்பது கண்டறியப்பட்டுள்ளது. குளிர் பானங்களில், பற்களை சேதப்படுத்தும் அமில வகைகளில் ஒன்றான பாஸ்பாரிக் அமிலம் காணப்படுகிறது. இதன் காரணமாக, தொடர்ச்சியாக குளிர்பானம் குடிப்பது உங்கள் பற்களைச் சேதமடைய செய்யலாம்.

Share this article
A
Admin User

Lifestyle Journalist

A passionate writer covering health, wellness, and cultural topics for the Tamil community.

தினசரி ஒரு நற்சிந்தனை

...

உடல் எடை கணக்கீடு

ஆரோக்கியமான வாழ்விற்கு உங்கள் பிஎம்ஐ (BMI) அளவை அறிந்து கொள்வது அவசியம்.

கணக்கிடு (BMI Test)
திருக்குறள் (Kural of the Day)

...

...

இன்றைய விலை
தங்கம் (22k)
1 கிராம்
₹13,000
தங்கம் (24k)
1 கிராம்
₹13,650
வெள்ளி
1 கிராம்
₹250
அடுத்த பண்டிகை (Next Festival)

தேடல்...

00
Days to go
உங்கள் கருத்து (Poll)

மன அழுத்தத்தைக் குறைக்க நீங்கள் என்ன செய்கிறீர்கள்?

Get Daily Updates

Subscribe for the latest news in your inbox.

அடுத்து வாசிக்க
ஆரோக்கியத்திற்கு சிறந்தது சைவமா அல்லது அசைவமா? இதோ முழுமையான அலசல்!
வாசிக்க