Sunday, May 10, 2026
Logo
Menu
Follow Us
அழகு குறிப்புகள்

இனி காலாவதியான மேக்கப் பொருட்களைத் தூக்கி எறிய வேண்டாம்...

A
Admin User
Journalist
February 21, 2022 5 min read 78 views
இனி காலாவதியான மேக்கப் பொருட்களைத் தூக்கி எறிய வேண்டாம்...

பெண்கள் அழகை அதிகரிக்க பல்வேறு மேக்கப் பொருட்களை வாங்கி பயன்படுத்துகின்றனர். அதிலும், சிறந்த முடிவு கிடைக்க விலையுயர்ந்த மேக்கப் பொருட்களை வாங்கி பயன்படுத்த விரும்பிகின்றனர். அப்படி வாங்கி பயன்படுத்தும் மேக்கப் பொருட்கள் முழுவதும் பயன்படுத்தி முடிப்பதற்கு முன்பே காலாவதியாவிட்டால் அதைப் பயன்படுத்தவும் முடியாது, தூக்கி எறியவும் மனம் வராது. அப்படிப்பட்ட சூழலில் அதை வெறுமனே வைத்திருப்பதற்கு பதிலாக அவற்றைப் பிறவற்றிற்கு பயன்படுத்தலாம். அதைப்பற்றி தான் இப்போது இந்த கட்டுரையில் தெரிந்து கொள்ள போகிறோம்…

லிப்ஸ்டிக்

உங்களுக்குப் பிடித்த லிப்ஸ்டிக்கைத் தூக்கி எறிவதற்குப் பதிலாக டின்ட் லிப் பாம் செய்யலாம். அதற்கு உங்கள் லிப்ஸ்டிக்கை ஒரு சிறிய கிண்ணத்தில் எடுத்து கொள்ளவும். இப்போது அந்த கிண்ணத்தை வெந்நீரில் சிறிது நேரம் வைக்கவும். அத்தகைய சூழ்நிலையில், லிப்ஸ்டிக் உருகிவிடும், மேலும் அதில் வாழும் பாக்டீரியாக்களும் அழிந்திடும். இப்போது அதை உங்கள் வாஸ்லைன் அல்லது பெட்ரோலியம் ஜெல்லியுடன் கலக்கவும். இதற்குப் பிறகு, அதை ஒரு சிறிய பெட்டியில் வைத்து குளிர்சாதன பெட்டியில் வைக்கவும். இப்போது உங்களுக்கு பிடித்த நிறத்தில் லிப் பாம் தயார்.

லிப் பாம்

உங்களுக்கு பிடித்தமான லிம் பாம் காலாவதியாகி விட்டால் அதனைத் தூக்கி எறிய வேண்டிய அவசியம் இனி இல்லை. ஆம், உங்கள் நகங்களைச் சுற்றியுள்ள வறண்ட சருமத்திற்கு ஊட்டமளிக்க இந்த பழைய லிப் பாமைப் பயன்படுத்தலாம். இது தவிர, உங்கள் உலர்ந்த குதிகால் மென்மையாக்க காலாவதியான லிப் பாம் பயன்படுத்தப்படலாம்.

ஐ ஷேடோ (Eyeshadow)

பொதுவாக ஐ ஷேடோக்கள் ஒன்றரை முதல் இரண்டு ஆண்டுகள் வரை தான் நீடிக்கும். ஒருவேளை உங்களுக்கு பிடித்த நிற ஐ ஷோடோ தேதி முடிந்து விட்டால் அதை நெயில் பாலிஷாக மாற்றி பயன்படுத்தி கொள்ளலாம். அதற்கு, தெளிவான (Transparent nail polish) நெயில் பாலிஷை எடுத்து, ஐ ஷேடோ துகள்கள் சிறிது சேர்த்து நன்கு கலக்கவும். இப்போது உங்களுக்கு பிடித்தமான நிறத்தில் புதிய நெயில் பாலிஷ் தயார்.

மஸ்காரா

மஸ்காரா 6 முதல் 8 மாதங்களுக்குள் மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும். ஏனெனில் அது மிக விரைவாக காலாவதியாகும். இருப்பினும், காலாவதியான பிறகு, அதை புருவங்களுக்கு பயன்படுத்தலாம். உங்கள் புருவங்கள் நரைத்திருந்தால், அதை உபயோகிக்கலாம். மஸ்காராவின் பிரஷில் உள்ள அதிகப்படியான மஸ்காராவை அகற்றிவிட்டு, அதை நன்கு சுத்தம் செய்து, புருவங்களை வடிவமைக்க பயன்படுத்தி கொள்ளலாம். இது தவிர, நீங்கள் விரும்பினால், இந்த பிரஷ் மூலம் உங்கள் உதடுகளையும் மென்மையாக்க பயன்படுத்தலாம்.

முக எண்ணெய் (Face oil)

முக எண்ணெய் மிகவும் விலை உயர்ந்தது. அத்தகைய சூழ்நிலையில், அது காலாவதியானால், அதை உடலில் ஸ்க்ரப்பாகப் பயன்படுத்தி கொள்ளலாம்.

ஸ்கின் டோனர்

ஸ்கின் டோனர் ஆல்கஹால் மற்றும் இரசாயனங்களை அடிப்படையாக கொண்டு தயாரிக்கப்பட்டது. அது காலாவதியானால், கண்ணாடி, மொபைல் ஸ்கிரீன் போன்றவற்றை சுத்தம் செய்ய பயன்படுத்தி கொள்ளலாம்.

Share this article
A
Admin User

Lifestyle Journalist

A passionate writer covering health, wellness, and cultural topics for the Tamil community.

தினசரி ஒரு நற்சிந்தனை

...

உடல் எடை கணக்கீடு

ஆரோக்கியமான வாழ்விற்கு உங்கள் பிஎம்ஐ (BMI) அளவை அறிந்து கொள்வது அவசியம்.

கணக்கிடு (BMI Test)
திருக்குறள் (Kural of the Day)

...

...

இன்றைய விலை
தங்கம் (22k)
1 கிராம்
₹14,150
தங்கம் (24k)
1 கிராம்
₹14,858
வெள்ளி
1 கிராம்
₹280
அடுத்த பண்டிகை (Next Festival)

தேடல்...

00
Days to go
உங்கள் கருத்து (Poll)

நலமான வாழ்விற்கு எது மிக முக்கியம்?

Get Daily Updates

Subscribe for the latest news in your inbox.

அடுத்து வாசிக்க
பொதுவான முடி பராமரிப்பு தவறுகள்: ஆரோக்கியமான கூந்தலுக்கு அவற்றை சரிசெய்வது எப்படி?
வாசிக்க