Tuesday, March 24, 2026
Logo
Menu
Follow Us
அழகு குறிப்புகள்

ஆரோக்கியமான கூந்தலைப் பெற கறிவேப்பிலையை இப்படி யூஸ் பண்ணுங்க…

A
Admin User
Journalist
February 07, 2023 5 min read 90 views
ஆரோக்கியமான கூந்தலைப் பெற கறிவேப்பிலையை இப்படி யூஸ் பண்ணுங்க…

Curry leaves hair mask will make your hair healthy: கறிவேப்பிலை உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது. இவை ஆயுர்வேதத்தில் மிக முக்கிய பங்கு வகிக்கின்றன. சருமம், கூந்தல் மற்றும் பல்வேறு ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டுள்ளது. இதன் காரணமாக தான் நம் உணவிலும் கறிவேப்பிலை முக்கிய இடம் வகிக்கிறது.

கறிவேப்பிலை ஒரு தனித்துவமான சுவை மற்றும் வலுவான சிட்ரஸ் கொண்டுள்ளன. இவை உடலின் பல்வேறு சிக்கல்களை எதிர்த்துப் போராட உதவிடும். பல ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டிருந்தாலும், இது மிகவும் கசப்பான சுவை கொண்டது என்பதால், இதை பலரும் விரும்பி சாப்பிடுவது கிடையாது.

ஆரோக்கியமான கூந்தலைப் பெற விரும்புபவர்கள் கறிவேப்பிலையை உணவில் சேர்த்து கொள்வது நல்லது. அப்படி விரும்பாதவர்கள் கூந்தலுக்கு அதனை நேரடியாக பயன்படுத்துவது சிறந்த பலனளிக்கும். எனவே, இப்போது கூந்தல் வளர்ச்சிக்கும், ஆரோக்கியத்திற்கும் உதவிடும் கறிவேப்பிலை ஹேர் மாஸ்க் எப்படி செய்வதென்று இப்போது பார்க்க போகிறோம்…

தேவையான பொருட்கள்

  • கறிவேப்பிலை - 1/2 கப்
  • வெந்தய கீரை - அரை கப்
  • நெல்லிக்காய் - 1

செய்முறை

  • முதலில் ஒரு மிக்ஸர் கிரைண்டரில் கறிவேப்பிலை, கொட்டை நீக்கிய நெல்லிக்காய் மற்றும் அரை வெந்தய கீரையை சேர்த்து சிறிது நீர் சேர்த்து மைய அரைக்கவும்.
  • அரைத்த கலவையை ஒரு கிண்ணத்தில் மாற்றி, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கலந்து கொள்ளவும்.
  • தயாரித்த அந்த பேஸ்ட்டை உங்கள் உச்சந்தலையில் தடவவும்.
  • 1 மணி நேரம் கழித்து தலையை அலசிடவும்.
  • கூந்தல் உதிர்வு, பொலிவிழந்த கூந்தல் போன்ற பிரச்சனை உள்ளவர்கள் வாரத்திற்கு ஒரு முறை இந்த ஹேர் மாஸ்க் போடுவது சிறந்த பலனளிக்கும்.

கறிவேப்பிலையின் நன்மைகள்

  • கறிவேப்பிலையில் வைட்டமின் சி மற்றும் பி, புரதங்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றங்கள் உள்ளன. மேலும் இது உச்சந்தலையில் இரத்த ஓட்டம் மற்றும் ஆரோக்கியத்தை மேம்படுத்திட உதவிடும். இது நேரடியாக உங்கள் கூந்தல் வளர்ச்சியை அதிகரிக்க செய்திடும்.
  • கறிவேப்பிலையில் உள்ள வைட்டமின் பி மற்றும் புரோட்டீன்கள், கூந்தல் பாதிப்பில் இருந்து விடுபட உதவும்.
  • பூஞ்சை மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் உள்ள கறிவேப்பிலையில், தலையில் உள்ள பொடுகை அகற்ற உதவும். ஒரு கைப்பிடி கறிவேப்பிலையை கெட்டியான பேஸ்டாக அரைத்து, அதனுடன் தயிர் சேர்த்து கலந்து, பொடுகு தொல்லை நீங்க பயன்படுத்தலாம்.
  • முடியின் பொலிவை அதிகரிக்க உதவுவதோடு, அதன் பளபளப்பைத் தக்கவைக்கவும், பொலிவு சேர்க்கவும் கறிவேப்பிலை பயன்படும். அதன் ஆக்ஸிஜனேற்ற பண்புகள் வறண்ட கூந்தல் வேர்களுக்கு ஊட்டமளித்து பாதுகாத்திடும்.
  • கறிவேப்பிலை ஹேர் மாஸ்க் பயன்படுத்துவது கூந்தலை பொலிவாகவும், மென்மையானதாகவும் மாற்றிடும். மேலும், கூந்தல் வளர்ச்சியை ஊக்கப்படுத்திடும்.
  • கறிவேப்பிலையின் மருத்துவ குணங்கள் கூந்தலுக்கு ஊட்டமளித்து அதன் வளர்ச்சியைத் தூண்டிடும்

அதிகப்படியான வியர்வைக்கு இது கூட காரணமா இருக்கலாம். உடனே இத ட்ரை பண்ணுங்க…

நின்னுக்குட்டே சாப்டுறவங்களா நீங்க? அப்ப இந்த பிரச்சனைலாம் வர வாய்ப்பிருக்கு…

வயிற்றுப்போக்கின் போது இந்த உணவுகள் கட்டாயம் சாப்பிடவே கூடாதாம் தெரிஞ்சுக்கோங்க…

Share this article
A
Admin User

Lifestyle Journalist

A passionate writer covering health, wellness, and cultural topics for the Tamil community.

தினசரி ஒரு நற்சிந்தனை

...

உடல் எடை கணக்கீடு

ஆரோக்கியமான வாழ்விற்கு உங்கள் பிஎம்ஐ (BMI) அளவை அறிந்து கொள்வது அவசியம்.

கணக்கிடு (BMI Test)
திருக்குறள் (Kural of the Day)

...

...

இன்றைய விலை
தங்கம் (22k)
1 கிராம்
₹13,000
தங்கம் (24k)
1 கிராம்
₹13,650
வெள்ளி
1 கிராம்
₹250
அடுத்த பண்டிகை (Next Festival)

தேடல்...

00
Days to go
உங்கள் கருத்து (Poll)

மன அழுத்தத்தைக் குறைக்க நீங்கள் என்ன செய்கிறீர்கள்?

Get Daily Updates

Subscribe for the latest news in your inbox.

அடுத்து வாசிக்க
பொதுவான முடி பராமரிப்பு தவறுகள்: ஆரோக்கியமான கூந்தலுக்கு அவற்றை சரிசெய்வது எப்படி?
வாசிக்க