Sunday, May 10, 2026
Logo
Menu
Follow Us
சமையல்

தேங்காய் சாதம்!!!

A
Admin User
Journalist
June 02, 2022 3 min read 190 views
தேங்காய் சாதம்!!!

ஸ்கூல் மற்றும் ஆஃபீஸ் செல்லும் குடும்பத்தாருக்கு காலை என்ன சமைத்து கொடுப்பது என்று நீங்கள் நிறைய யோசனை செய்திருக்கலாம். டிபன் பாக்ஸ் உணவு என்றாலே வெரைட்டி ரைஸ் தான் அதற்கு பொருத்தமான உணவு. தக்காளி சாதம், லமன் சாதம், புளி சாதம், தேங்காய் சாதம் என பல கலவை சாத வகைகள் உள்ளன. அதில் உங்களுக்கு தேங்காய் சாதம் மிகவும் பிடிக்கும் என்றால் அதை சுவையான மற்றும் சுலபமாக எப்படி செய்வதென்று இந்த கட்டுரை வாயிலாக தெரிந்து கொள்ளலாம். பேச்சுலர்ஸ் கூட இதனை ஈஸியாக செய்து சுவைத்து சாப்பிடலாம். குழந்தைகளும் வேண்டாம் என்று கூறாமல் சாப்பிடுவார்கள். சரி இப்போது தேங்காய் சாதம் எப்படி செய்வதென்று பார்ப்போம்…

 

தேவையான பொருட்கள்

 

  • சாதம் - 1 கப்
  • துருவிய தேங்காய் - 1/4 கப்
  • உப்பு - சுவைக்கேற்ப

 

தாளிப்பதற்கு…

 

  • தேங்காய் எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
  • கடுகு - 1/2 டீஸ்பூன்
  • உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
  • சீரகம் - 1/2 டீஸ்பூன்
  • பச்சை மிளகாய் - 1
  • வரமிளகாய் - 1
  • கறிவேப்பிலை - சிறிது
  • முந்திரி - சிறிதளவு

 

செய்முறை

 

  • முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு சேர்த்து தாளிக்கவும்.
  • அடுத்ததாக அதில் கறிவேப்பிலை, பச்சை மிளகாய், வரமிளகாய் சேர்த்து 2 நிமிடம் வதக்கி விடவும்.
  • மிளகாய வதங்கியதும் முந்திரியை சேர்த்து பொன்னிறமாக வறுக்கவும்.
  • துருவிய தேங்காயை சேர்த்து 2 நிமிடம் குறைவான தீயில் வதக்கவும்.
  • தேங்காய வதங்கியதும் அதில் சாதத்தை சேர்த்து, சுவைக்கேற்ப உப்பு தூவி நன்கு கிளறி இறக்கினால், சுவையான தேங்காய் சாதம் சுவைக்க தயார்.

 

Image Courtesy: sharmispassions

 

Share this article
A
Admin User

Lifestyle Journalist

A passionate writer covering health, wellness, and cultural topics for the Tamil community.

தினசரி ஒரு நற்சிந்தனை

...

உடல் எடை கணக்கீடு

ஆரோக்கியமான வாழ்விற்கு உங்கள் பிஎம்ஐ (BMI) அளவை அறிந்து கொள்வது அவசியம்.

கணக்கிடு (BMI Test)
திருக்குறள் (Kural of the Day)

...

...

இன்றைய விலை
தங்கம் (22k)
1 கிராம்
₹14,150
தங்கம் (24k)
1 கிராம்
₹14,858
வெள்ளி
1 கிராம்
₹280
அடுத்த பண்டிகை (Next Festival)

தேடல்...

00
Days to go
உங்கள் கருத்து (Poll)

நலமான வாழ்விற்கு எது மிக முக்கியம்?

Get Daily Updates

Subscribe for the latest news in your inbox.

அடுத்து வாசிக்க
தமிழ்நாட்டின் சுவைமிகுந்த சமையல் கலை: சிறந்த உணவுகளின் ஒரு முழுமையான பார்வை
வாசிக்க