Tuesday, March 24, 2026
Logo
Menu
Follow Us
பயணம்

கோடைகாலத்தில் சுற்றுலா செல்ல இந்த 5 இடங்களை விட சிறந்தது எதுவுமில்லை...

A
Admin User
Journalist
March 17, 2022 7 min read 77 views
கோடைகாலத்தில் சுற்றுலா செல்ல இந்த 5 இடங்களை விட சிறந்தது எதுவுமில்லை...

கோடை காலம் வந்தாச்சு. இந்த சீசனில் மக்கள் சுற்றுலா பயணத்திற்காக திட்டமிடுவர். ஒருவேளை நீங்களும் அப்படி திட்டமிடுகிறீர்கள் என்றால், இந்த கட்டுரை உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஏனென்றால், இந்த கட்டுரையில் கோடைகாலத்திற்கு ஏற்ற சிறந்த 5 சுற்றுலா தலங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. உங்கள் கோடைகால சுற்றுலாவை இந்த இடங்களில் கழித்தால் அற்புதமான அனுபவத்தைப் பெற்றிட முடியும். வாருங்கள், அவற்றைப் பற்றி தெரிந்த கொள்வோம்…

மணாலி (Manali)

மணாலி இந்தியாவின் வடக்கு இமாச்சலப் பிரதேச மாநிலத்தில் உள்ள ஒரு உயரமான ஹிமாலயன் ரிசார்ட் நகரமாகும். இது ட்ரெக்கிங் மற்றும் தேனிலவுக்கு புகழ் பெற்ற இடமாகும். இந்தியாவில் அனைவருக்கும் பிடித்தமான சுற்றுலாத் தலங்களில் ஒன்று தான் மணாலி. இங்கு ஆண்டு முழுவதும் மிதமாகவும் குளிர்ச்சியாகவும் இருக்கும். இங்குள்ள வானிலையும், மலைசிகரங்களின் அழகும் பயணிகளை வசீகரிக்க செய்திடும். எனவே, கோடை வெயிலை சமாளித்திட நீங்கள் இந்த இடத்திற்கு சுற்றுப்பயணத்தைத் திட்டமிடலாம். சிறப்பான அனுபவம் கிடைத்திடும். அதிலும், குடும்பத்தாருடன் நேரம் செலவிட அற்புதமான இடமிது.

லடாக் (Ladakh)

இமயமலையின் நடுவில் அமைந்துள்ள லடாக்கின் குளிர்ந்த சூழலில் வாழ்நாள் முழுவதையும் அங்கே செலவிட வேண்டுமென்ற எண்ணம் அங்கு செல்லும் அனைவருக்குமே தோன்றுவது இயல்பு தான். அதற்கு காரணம் அங்குள்ள இயற்கையின் அழகு தான். மேலும் இதுபோன்ற பல அற்புதமான காட்சிகளை அங்கு காண முடியும். அவை உங்களுக்கு மிகவும் பிடித்தமானதாக இருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை. அதிலும், கோடை காலத்தில் அங்கு செல்வதைக் காட்டிலும் எதுவும் சிறந்ததாக இருக்க முடியாது. இந்த கோடை விடுமுறையை மனதிற்கு பிடித்த நபருடன் அங்கே கொண்டாடிடுங்கள்.

சோன்மார்க் (Sonmarg)

சோன்மார்க் இந்தியாவின் ஜம்மு மற்றும் காஷ்மீரின் கந்தர்பால் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு மலைபிரதேசம். இது கந்தர்பால் நகரத்திலிருந்து 62 கிலோமீட்டர் தொலைவிலும், தலைநகரான ஸ்ரீநகரின் வடகிழக்கில் 80 கிலோமீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது. காஷ்மீரில் இருக்கும் இந்த மலை பிரதேசம் குளிர்காலத்தில் மிகவும் குளிராக இருப்பதால், பனி மூட்டத்தையும் உறைய செய்து அந்த நகரத்தையே உறைய வைத்துவிடும். ஆனால், கோடை காலத்தில் இங்கு வானிலை சாதாரணமாக இருக்கும். மலைகளுக்கு நடுவே அமைந்து இந்த நகரம் கோடை வெயிலுக்கு இதமாகவும், பார்க்கும் இடமெல்லாம் அழகாவும் காட்சியளிக்கும்.

லச்சுன் கிராமம் (Lachun Village)

லாச்சென் என்பது இந்தியாவின் சிக்கிம் மாநிலத்தில் உள்ள வடக்கு சிக்கிம் மாவட்டத்தில் உள்ள ஒரு நகரம். இது 2,750 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. லாச்சென் என்ற பெயருக்கு "பெரிய கணவாய்" என்று பொருள். இந்த நகரம் சிக்கிம் அரசாங்கத்தால் சுற்றுலாத் தலமாக மேம்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நகரம் சோப்தா பள்ளத்தாக்கு மற்றும் குருடோங்மார் ஏரிக்கு அடித்தளமாக அமைகிறது. லச்சுன் கிராமம் குளிர்ந்த காலநிலையைக் கொண்டுள்ளது மட்டுமல்லாது அழகான இயற்கைக் காட்சிகளுக்காகவும் மிகவும் பிரபலமானது. உண்மையில் இது ஒரு சிறந்த சுற்றுலாத் தலமாகும். இங்கு நீங்கள் குடும்பத்துடன் சென்று நேரம் செலவிட்டால் மறக்கமுடியாத தருணங்களை வாழ்நாள் முழுவதும் நினைவிருக்கும்படி வழங்கிடும்.

சேலா பாஸ் (Sela Pass)

செலா கணவாய் என்பது இந்திய மாநிலமான அருணாச்சல பிரதேசத்தில் உள்ள தவாங் மற்றும் மேற்கு கமெங் மாவட்டங்களின் எல்லையில் அமைந்துள்ள உயரமான மலைப்பாதையாகும். இது 4170 மீ உயரத்தில் அமைந்துள்ளது மற்றும் இந்திய பௌத்த நகரமான தவாங்கை திராங் மற்றும் கவுகாத்தியுடன் இணைக்கிறது. இந்த பனி பிரதேசத்தில் ஆண்டு முழுவதும் பனிப்பொழிவு இருக்கும் என்று கூறப்படுகிறது. திருமணமான புதுமண தம்பதிகளுக்கு இந்த இடம் தேனிலவு கொண்டாட சிறந்த இடமாக இருக்கும். கோடைகாலத்தில் இங்கே சென்றாலும், இந்த பனிபொழிவு இருப்பதால் உங்களுக்கு கோடைகாலம் என்ற எண்ணமே வராது.

Share this article
A
Admin User

Lifestyle Journalist

A passionate writer covering health, wellness, and cultural topics for the Tamil community.

தினசரி ஒரு நற்சிந்தனை

...

உடல் எடை கணக்கீடு

ஆரோக்கியமான வாழ்விற்கு உங்கள் பிஎம்ஐ (BMI) அளவை அறிந்து கொள்வது அவசியம்.

கணக்கிடு (BMI Test)
திருக்குறள் (Kural of the Day)

...

...

இன்றைய விலை
தங்கம் (22k)
1 கிராம்
₹13,000
தங்கம் (24k)
1 கிராம்
₹13,650
வெள்ளி
1 கிராம்
₹250
அடுத்த பண்டிகை (Next Festival)

தேடல்...

00
Days to go
உங்கள் கருத்து (Poll)

மன அழுத்தத்தைக் குறைக்க நீங்கள் என்ன செய்கிறீர்கள்?

Get Daily Updates

Subscribe for the latest news in your inbox.

அடுத்து வாசிக்க
இந்தியாவில் பட்ஜெட்டுக்கு ஏற்ற மிகச்சிறந்த சுற்றுலாத் தலங்கள்: குறைந்த செலவில் ஒரு சொர்க்கப் பயணம்!
வாசிக்க