Tuesday, March 24, 2026
Logo
Menu
Follow Us
ஆரோக்கியம்

தினமும் பாதாம் சாப்பிடுற ஆளா நீங்க? அப்ப கொஞ்சம் உஷாரா இருங்க...

A
Admin User
Journalist
February 10, 2022 5 min read 49 views
தினமும் பாதாம் சாப்பிடுற ஆளா நீங்க? அப்ப கொஞ்சம் உஷாரா இருங்க...

பாதாம் சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும் என்று கருதப்படுகிறது. இதன் காரணமாக, பலரும் காலை எழுந்ததும் நீரில் ஊற வைத்த பாதாம் சாப்பிடுவதைப் பழக்கமாக கொண்டிருக்கின்றனர். பாதாம் சாப்பிடுவது உடலுக்கு நன்மை பயக்கும் என்றாலும், சிலருக்கு பாதாம் பிரச்சனைகளை அதிக செய்திடும் என்கின்றனர் நிபுணர்கள். அதைப் பற்றி தான் இந்த கட்டுரையில் தெரிந்து கொள்ள போகிறோம். நீங்கள் தினமும் பாதாம் சாப்பிடும் பழக்கம் உள்ளவராக இருந்தால் நிச்சயம் இதைத் தெரிந்திருக்க வேண்டியது அவசியம்.

உயர் இரத்த அழுத்த பிரச்சனை

உயர் இரத்த அழுத்த பிரச்சனை இருப்பவர்கள் பாதாம் பருப்பை உட்கொள்ளவே கூடாது. உண்மையில், உயர் இரத்த அழுத்தம் பிரச்சனை உள்ள நோயாளிகள் தங்களது இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த சில மருந்துகளை உட்கொள்கின்றனர். அதனுடன் பாதாமை சேர்த்து உட்கொள்வது அவர்களின் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்க கூடுமாம். எனவே, உங்களது உயர் இரத்த அழுத்த பிரச்சனை இருந்தால் நிச்சயமாக பாதாம் பருப்பு உட்கொள்வதைத் தவிர்த்திடுங்கள்.

கல் பிரச்சனை

சிறுநீரக அல்லது பித்தப்பையில் கல் உள்ளவர்களும் பாதாம் சாப்பிடக்கூடாது. ஏனென்றால், பாதாமில் உள்ள ஆக்சலேட் அவர்களின் பிரச்சனையை மேலும் அதிகரிக்க செய்திடும். இதன் காரணமாக சிறுநீரக கற்கள் அல்லது பித்தப்பையில் கற்கள் உள்ளவர்கள் பாதாம் பருப்பை சாப்பிடுவதைத் தவிர்ப்பது நல்லது.

செரிமான பிரச்சனை

செரிமான பிரச்சனை உள்ளவர்கள் எளிதில் செரிக்கக்கூடிய உணவுகளை உண்ண வேண்டுமென்பதே மருத்துவர்களின் ஆலோசனை. எனவே, அப்படிப்பட்டவர்கள் தங்களது உணவில் பாதாமை சேர்த்துக் கொள்ளாமல் இருப்பதே நல்லது. ஏனென்றால், பாதாம் பருப்பில் புரதம் மற்றும் வைட்டமின்கள் நிறைந்திருக்கிறது. அதனால், பாதாம் பருப்பு செரிப்பதில் அதிக சிக்கலை ஏற்படுத்தும். எனவே, செரிமான பிரச்சனை உள்ளவர்கள் பாதாம் சாப்பிட்டால் பிரச்சனை அதிகரிக்க வாய்ப்புள்ளது.

அசிடிட்டி பிரச்சனை

அசிடிட்டி பிரச்சனை, அதாவது அமில சுரப்பு அதிகமாக உள்ளவர்களும் பாதாம் பருப்பைச் சாப்பிடக்கூடாது. ஏனென்றால், பாதாம் பருப்பில் அதிக அளவு நார்ச்சத்து உள்ளது. இது அஜீரணம் மற்றும் வாயு தொல்லை போன்ற பிரச்சனைகளை உண்டு பண்ணும். இதனால், அசௌகரியம் அதிகரிக்கும். எனவே, அசிடிட்டி பிரச்சனை உள்ளவர்கள் பாதாம் சாப்பிடக்கூடாது.

உடல் எடை அதிகரிப்பு

நீங்கள் உடல் எடையை குறைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இருக்கிறீர்கள் என்றால் நிச்சயமாக பாதாம் பருப்பை சாப்பிடக்கூடாது. ஏனெனில், பாதாம் பருப்பில் நிறைய கலோரிகளும், கொழுப்புச் சத்து உள்ளது. இதன் காரணமாக, உங்கள் எடையைக் குறைப்பதற்குப் பதிலாக அது எடையை மேலும் அதிகரிக்க செய்திடலாம். எனவே, உடல் எடையைக் குறைக்க விரும்புவோர் பாதாம் சாப்பிடுவதைத் தவிர்த்திடவும்.

Share this article
A
Admin User

Lifestyle Journalist

A passionate writer covering health, wellness, and cultural topics for the Tamil community.

தினசரி ஒரு நற்சிந்தனை

...

உடல் எடை கணக்கீடு

ஆரோக்கியமான வாழ்விற்கு உங்கள் பிஎம்ஐ (BMI) அளவை அறிந்து கொள்வது அவசியம்.

கணக்கிடு (BMI Test)
திருக்குறள் (Kural of the Day)

...

...

இன்றைய விலை
தங்கம் (22k)
1 கிராம்
₹13,000
தங்கம் (24k)
1 கிராம்
₹13,650
வெள்ளி
1 கிராம்
₹250
அடுத்த பண்டிகை (Next Festival)

தேடல்...

00
Days to go
உங்கள் கருத்து (Poll)

மன அழுத்தத்தைக் குறைக்க நீங்கள் என்ன செய்கிறீர்கள்?

Get Daily Updates

Subscribe for the latest news in your inbox.

அடுத்து வாசிக்க
ஆரோக்கியத்திற்கு சிறந்தது சைவமா அல்லது அசைவமா? இதோ முழுமையான அலசல்!
வாசிக்க