முகத்தில் வழியும் எண்ணெய் பசையைப் போக்க தேனுடன் இதை கலந்து யூஸ் பண்ணுங்க...
Dyazo 6 Angles Adjustable Aluminum Ergonomic Foldable Portable Tabletop Laptop/Desktop Riser Stand Holder Compatible for MacBook, HP, Dell, Lenovo & All Other Notebook (Silver)
எண்ணெய் பசை சருமம் உள்ளவர்கள் கோடையில் சருமம் தொடர்பான பல பிரச்சனைகளைச் சந்திக்க நேரிடும். கோடையில் மட்டுமல்ல, எண்ணெய் பசை சருமம் உள்ளவர்களுக்கு ஒவ்வொரு சீசனிலும் நிறைய பிரச்சனைகள் வர ஆரம்பிக்கும். முகத்தில் முகப்பரு வருவது எண்ணெய் பசை சருமம் உள்ளவர்களுக்கு பொதுவானது. ஆனால் முகத்தில் உள்ள அதிகப்படியான எண்ணெயைக் கட்டுப்படுத்த நீங்கள் பல வீட்டு வைத்தியங்களை முயற்சி செய்யலாம். இப்போது நாம் அவற்றைப் பற்றி தான் உங்களுக்கு சொல்லப் போகிறோம். நீங்கள் விரும்பினால் ஓட்ஸைப் பயன்படுத்தலாம். ஓட்ஸ் சருமத்தை ஆழமாக சுத்தப்படுத்த உதவக்கூடியது. மேலும், இது முகப்பரு போன்ற பிரச்சனைகளில் இருந்தும் சருமத்தை பாதுகாத்தும். சரும பராமரிப்பிற்கு ஓட்ஸை எப்படி பயன்படுத்துவது என்று இப்போது தெரிந்து கொள்வோம்…
ஓட்ஸ் மற்றும் தக்காளி ஃபேஸ் பேக்
இந்த ஃபேஸ் பேக்கை தயாரிக்க, ஒரு தக்காளியை அரைத்து சாறு எடுத்து, அதில் 2 டீஸ்பூன் ஓட்ஸ் பொடியை சேர்த்து கலந்து கொள்ளவும். அதன் பிறகு இந்த கலவையில் சில துளிகள் நீரை சேர்த்து, அவற்றைக் கலந்து ஃபேஸ் பேக் பதத்திற்கு தயார் செய்யவும். இப்போது இந்த பேக்கை முகம் மற்றும் கழுத்தில் தடவி, அதன் பிறகு சில நிமிடங்கள் மெதுவாக தேய்த்து மசாஜ் செய்யவும். இப்போது இந்த ஃபேஸ் பேக்கை சருமத்தில் 15 முதல் 20 நிமிடங்கள் வரை அப்படியே ஊற விட்டு, பின்னர் குளிர்ந்த நீரில் கழுவிடவும். நீங்கள் வாரத்திற்கு 2 முதல் 3 முறை இதைப் பயன்படுத்தலாம். நல்ல மாற்றத்தைக் காணலாம்.
ஓட்ஸ் மற்றும் தேன் ஃபேஸ் பேக்
இந்த ஃபேஸ் பேக்கை செய்ய, ஒரு கிண்ணத்தில் 2 தேக்கரண்டி ஓட்ஸ் பொடியை எடுத்து கொள்ளவும். அதனுடன் சிறிது தேன் சேர்த்து நன்றாக கலந்து, அதை முகம் மற்றும் கழுத்தில் தடவவும். பின்னர், சருமத்தை சிறிது நேரம் மசாஜ் செய்து, 15 முதல் 20 நிமிடங்கள் வரை சருமத்தில் ஊற விடவும். அதன் பிறகு, சருமத்தை குளிர்ந்த நீரில் கழுவவும். நீங்கள் விரும்பினால், இந்த ஃபேஸ் பேக்கை வாரத்திற்கு 2 முதல் 3 முறை பயன்படுத்தலாம்.
ஓட்ஸ் மற்றும் வெள்ளரிக்காய் ஃபேஸ் பேக்
இந்த ஃபேஸ் பேக்கை செய்ய, ஒரு கிண்ணத்தில் 2 டீஸ்பூன் ஓட்ஸ் பொடியை எடுத்துக் கொள்ளவும். அதில் சிறிது வெள்ளரி சாறு சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும். இந்த ஃபேஸ் பேக்கை கழுத்து மற்றும் முகத்தில் தடவி 15 முதல் 20 நிமிடங்கள் அப்படியே ஊற விடவும். அதன் பிறகு, முகத்தை குளிர்ந்த நீரில் கழுவிடவும். நீங்கள் விரும்பினால், இந்த ஃபேஸ் பேக்கை வாரத்திற்கு 2 முதல் 3 முறை பயன்படுத்தலாம்.