அழகு குறிப்புகள்

இனிமேல் முகத்திற்கு சோப்பு வேண்டாம், இதை போடுங்கள் முகம் சும்மா தகதகனு ஜொலிக்கும்...

A
Admin User
1 min read
இனிமேல் முகத்திற்கு சோப்பு வேண்டாம், இதை போடுங்கள் முகம் சும்மா தகதகனு ஜொலிக்கும்...
Advertisement
Editor's Choice
Affiliate link

FLYNGO Touch Control LED Night Light Table Lamp for Bedroom, Living Room, and Study, with Adjustable Brightness, USB Rechargeable (A1)Plastic ,White

Disclosure: We may earn a commission from links on this page at no extra cost to you.

முகத்தில் உள்ள அழுக்குகளை சுத்தம் செய்ய பெண்கள் சோப்பு அல்லது ஃபேஸ் வாஷ் பயன்படுத்துவது அனைவரும் அறிந்ததே. ஆனால், அந்த சோப்பு அல்லது ஃபேஸ் வாஷ் உங்கள் சருமத்தில் வறட்சியை அதிகரிக்க செய்யும் என்பது உங்களுக்கு தெரியுமா- ஆம், அவற்றில் இதில் உள்ள ரசாயன கலவைகள் உங்கள் சருமத்தை வறட்சி அடைய செய்வது மட்டுமின்றி சேதப்படுத்கவும் கூடும். அதனால் தான் அந்த காலத்தில் வீட்டில் இருக்கும் இயற்கையான பொருட்களைக் கொண்டே தங்களது அழகைப் பராமரித்து வந்தனர். நம் முன்னோர்களின் சருமம் எந்தவொரு சரும பராமரிப்பு சிறப்பு பொருட்கள் இல்லாமலே வயதானாமல் பொலிவான சருமத்தை கொண்டிருந்தனர். எனவே, நாமும் அதை மாதிரியான இயற்கைப் பொருட்களைக் கொண்டு சருமத்தைச் சுத்தப்படுத்தலாமே. இந்த கட்டுரையில் அதைப் பற்றி தான் தெரிந்து கொள்ள போகிறோம்.

வீட்டில் உள்ள பொருட்களை வைத்தே ஒரு பேக் செய்து அதை முகம் மற்றும் உடலின் பிற பகுதிகளில் தடவி வருவதன் மூலம் முகம் வறட்சி அடையாமல், பொலிவான ஜொலிக்கும் சருமத்தைப் பெற்றிடலாம். வாருங்கள், இப்போது அதற்கு தேவையான பொருட்கள் என்னென்ன என்று பார்ப்போம்…

கடலை மாவு - 2 டீஸ்பூன்
காய்ச்சாத பால் - 2 டீஸ்பூன்
கல் உப்பு - 1 டீஸ்பூன்
ஆலிவ் எண்ணெய் - சில துளிகள்
கற்றாழை ஜெல் அல்லது எலுமிச்சை

கடலை மாவு
கடலை மாவு ஒரு இயற்கையான எக்ஸ்ஃபோலியேட்டர் மற்றும் க்ளென்சர். இது இறந்த சரும செல்களை நீக்குகிறது. வேண்டுமென்றால், வெறும் கடலை மாவை மட்டுமே பயன்படுத்தி உங்கள் முகத்தைக் கழுவலாம். சோப்பு, ஃபேஸ் வாஷ் தவிர்த்து இந்த கடலை மாவை பயன்படுத்துவது எண்ணெய் பசை உள்ள சருமம் முதல் வறண்ட சருமம் வரை அனைத்து சரும வகையினருக்கும் பொருத்தமானதாக இருக்கும்.

பால்
பாலில் லாக்டிக் அமிலம் உள்ளது. இது சருமத்தில் இருக்கக்கூடிய துளைகளின் உள்சென்று ஆழமாக சுத்தம் செய்யக்கூடியது. அதுமட்டுமின்றி, சருமத்தின் மேற்பரப்பில் சேர்ந்திருக்கக்கூடிய முகப்பருவை உண்டாக்கும் பாக்டீரியாக்களையும் சுலபமாக நீக்கிடும். எனவே, உங்கள் முகத்தை அடிக்கடி பால் பயன்படுத்தி சுத்தம் செய்தாலே முகத்தில் எந்தவித முகப்பரு பிரச்சனையும் ஏற்படாது.

கல் உப்பு
ஆயுர்வேத மருத்துவத்தின் படி, கல் உப்பு சருமத்தைச் சுத்தப்படுத்தவும், வலுவூட்டவும் மற்றும் புத்துணர்ச்சியூட்டவும் பயன்படுகிறது. இதுதவிர, கல் உப்பு சருமத்தில் உள்ள அதிகப்படியான எண்ணெய் பசையை நீக்கிடும். இதனால், முகத்தில் முகப்பரு குறைந்து, அழுக்குகளை நீங்கி, பளபளப்பான சருமத்தை அளிக்கிறது.

ஆலிவ் ஆயில்
ஆலிவ் எண்ணெயை ஃபேஸ் வாஷ், சோப்பு, பாடி வாஷ் மற்றும் லோஷன் போன்றவற்றிலும் பயன்படுத்தப்படுவதை காணலாம். ஏனென்றால், ஆலிவ் எண்ணெயானது சருமத்தில் ஈரப்பதத்தை தக்க வைக்கவும், வறட்சி அடையாமல் தடுக்கவும் பெரிதும் உதவிடும்.

கடலை மாவு ஃபேஸ் பேக் செய்யும் முறை

ஒரு பாத்திரத்தில் கடலை மாவு, பால் மற்றும் கல் உப்பு சேர்த்து நன்கு பேஸ்ட் பதத்திற்கு கலந்து கொள்ளவும். விரும்பினால், அதில் ஒரு சிட்டிகை மஞ்சள் தூளையும் கலந்து கொள்ளலாம். ஒருவேளை, உங்களுக்கு வறண்ட சருமமாக இருந்தால் இந்த கலவையுடன் சிறிது ஆலிவ் ஆயில் அல்லது ஏதேனும் அத்தியாவசிய எண்ணெயை சேர்த்துக் கொள்ளலாம்.

பயன்படுத்தும் முறை

  • குளிப்பதற்கு முன்பு இந்த பேக்கை முகம், கை மற்றும் கால்களில் தடவி, குறைந்தது 5-7 நிமிடங்களுக்கு அப்படியே விடவும்.
  • அதன் பிறகு பேக் போட்ட இடத்தில் கற்றாழை ஜெல் அல்லது எலுமிச்சை கொண்டு மசாஜ் செய்யவும். இப்படி செய்வதால் அந்த பகுதியில் படிந்திருக்கும் அழுக்குகள் வெளியேறி சருமமும் பளபளக்கும்.
  • அதே நேரத்தில், மசாஜ் செய்த பிறகு, அதை சுத்தமான தண்ணீரில் கழுவிடவும் அல்லது குளிக்கவும்.
  • ஆனால் இதற்குப் பிறகு ஃபேஸ்வாஷ் அல்லது சோப்பைப் பயன்படுத்தக்கூடாது என்பதை மட்டும் நினைவில் கொள்ளுங்கள்.
  • குளித்த பிறகு அல்லது பேக்கை சுத்தம் செய்த பிறகு, பாடி லோஷன், மாய்ஸ்சரைசர் அல்லது கிரீம் கொண்டு மசாஜ் செய்ய மறவாதீர்கள்.
Advertisement

Read Next